Showing posts with label சமையல் குறிப்பு. Show all posts
Showing posts with label சமையல் குறிப்பு. Show all posts

Monday, April 8, 2019

கோடைகாலத்தில் உடல் உஷ்ணத்தை போக்கும் அருமையான பானகம்!

கோடை காலங்களில் உடலிலிருந்து அதிகமான வியர்வை வெளியேறுவதால், நாம் சீக்கிரம் சோர்வடைந்து விடுகிறோம். இதிலிருந்து விடுதலையாகி உங்கள் உடலுக்கு உடனடி சக்தி கிடைக்க ’பானகம்’ சிறந்த சாய்ஸ். உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே சுவையான பானகம் எப்படி தயார் செய்வது என்பதை பார்க்கலாம்!


தேவையான பொருட்கள்
புளி - சிறிய எலுமிச்சை அளவிலான உருண்டை, பனைவெல்லம் அல்லது வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் பொடி - 1/4 டீ ஸ்பூன், சுக்குப்பொடி - 1/4 டீ ஸ்பூன், மிளகுத்தூள் - 1/4 டீ ஸ்பூன், தண்ணீர் - 2 கப்

செய்முறை: வெல்லத்தை தட்டி பொடியாக்கி கொள்ளவும். புளியை 2 கப் தண்ணீரில் நன்கு கரைக்கவும். கரைத்த புளி நீரில் வெல்லத்தை சேர்த்து நன்றாக கலக்கவும். வெல்லம் முழுமையாக கரைந்தபின் வடிகட்டியால் இறுக்கவும்.
இதனுடன் ஏலக்காய்பொடி, சுக்குப்பொடி, மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும். இதை அப்படியே பருகலாம். சிறிது நேரம் மண்பானையில் வைத்திருந்து பருகினால் கூடுதல் சுவையுடன் இருக்கும். உடலையும் குளிர்ச்சியாக்கும்.

கோடைக்கு இதம் தரும் சுவையான கம்மங்கூழ்

ஹைலைட்ஸ்

  • கோடைகாலத்தில் கம்பங்கூழ் குடித்தால், உடலுக்கு உடனடி சக்தி கிடைப்பதுடன் உடலை குளிர்ச்சியாக்கும்
  • இதில் வைட்டமின் A உருவாக முக்கியக் காரணியான பீட்டாகரோட்டீன் அதிகம் இருக்கிறது
கம்பில் இரும்பு, மக்னீசியம், வைட்டமின் பி மற்றும் சி போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இதனால், உடலுக்கு அதிகம் வலு சேர்க்கும். சருமம், பார்வைத்திறன் மேம்படத் தேவைப்படும் வைட்டமின் A உருவாக முக்கியக் காரணியான பீட்டாகரோட்டீன் இதில் அதிகம் இருக்கிறது.



கோடைகாலத்தில் கம்பங்கூழ் குடித்தால், உடலுக்கு உடனடி சக்தி கிடைப்பதுடன் உடல் உஷ்ணத்தை போக்கி குளிர்ச்சியாக்கும். சுவையான கம்மங் கூழ் ரெசிபி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!
தேவையானவை: கம்பு - கால் கிலோ, மோர் - அரை லிட்டர், உப்பு - தேவையான அளவு, சின்ன வெங்காயம் – 20, தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை: முதலில் கம்பைக் கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடித்து அரை மணி நேரம் வெயிலில் காய விடவும். பிறகு மிக்ஸியில் தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக மையாக அரைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

அடுப்பில் வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து ஒன்றரை லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். பிறகு அரைத்த கம்பை தண்ணீரில் கெட்டியாகக் கரைத்து கொதிக்கும் தண்ணீரில் சேர்த்துக் கட்டியில்லாமல் கலக்கவும்.

கம்பு 10 நிமிடம் கொதித்ததும் உப்பு போட்டு கரண்டியால் கலக்கி இறக்கவும். கூழ் சிறிது கெட்டியாக இருப்பது போல் இருந்தால், தண்ணீர் ஊற்றிக் கலந்து கொள்ளலாம். பரிமாறும் போது மோர் ஊற்றிக் கலக்கி நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பருகுவதற்குக் கொடுக்கவும்.

கோடை விடுமுறையை குழந்தைகளுடன் ஜமாய்க்க சிக்கன் லாலிபாப் ரெசிபி

கோடை விடுமுறையில் உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான சிக்கன் லாலிபாப் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

தேவையானவை: சிக்கன் லாலிபாப் துண்டுகள் – 8, முட்டை – ஒன்று, இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன், தயிர் - 50 மில்லி, கார்ன் ஃப்ளார் மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், ஃபுட் கலர்(சிவப்பு) - ஒரு சிட்டிகை(விரும்பினால்), எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு



செய்முறை: சிக்கன் லாலிபாப் துண்டுகளை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முட்டை, இஞ்சி-பூண்டு விழுது, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், எலுமிச்சை சாறு, தயிர், கார்ன் ஃப்ளார் மாவு, உப்பு, சிவப்பு ஃபுட் கலர் சேர்த்து நன்கு கலக்கவும்.

அதனுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கன் லாலிபாப் துண்டுகளைச் சேர்த்துப் பிரட்டி எடுத்து, மசாலா கலவை சிக்கனில் முழுக்கப் பரவி இருக்குமாறு செய்து, அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும், ஊறவைத்துள்ள சிக்கன் லாலிபாப் துண்டுகளை அதில் பொரித்தெடுக்கவும். பொரித்தெடுத்த சிக்கன் லாலிபாப் துண்டுகளை சிறிது நேரம் ஒரு டிஸ்யூ தாளில் எடுத்து வைத்து எண்ணெய் நன்றாக வடிந்ததும் சூடாக எடுத்து பரிமாறவும்

Tuesday, January 22, 2019

சமையலறைக்குத் தேவையான பயனுள்ள சிறுசிறு குறிப்பு

அசைவ உணவு சமைத்து, சாப்பிட்டு முடித்து, பாத்திரங்களை என்னதான் dish soap போட்டுக் கழுவினாலும் அசைவ வாசனை சரியாகப்போகாது. அத‌னால் கழுவி முடித்த பிறகு சிறிது கடலைமாவு அல்லது பச்சைப்பயறு மாவு கொண்டு தேய்த்துக் கழுவினால் வாசனை போன இடம் தெரியாது. பாத்திரமும் பளிச்.
இதேதான் எண்ணெய் பாத்திரங்களுக்கும்(வாணல்). கடலைமாவு போட்டுக் கழுவினால் பளிச் என மின்னும்.
இதுவே கைகளுக்கும் பொருந்தும்.
**********************************************************************************
பீன்ஸை ச‌மையலுக்குப் பயன்படுத்தும்போது நாம் அதன் காம்பு & நுனி பகுதியை நறுக்கி போட்டுவிடுவோம்தானே. அந்த நுனிப்பகுதியில்தான் சத்துக்கள் அதிகம் உள்ளனவாம். ஒரு பக்கம் மட்டும் நறுக்குவதால் வேலையும் மிச்சம்.
*****************************************************************************************
இஞ்சியின் தோலை எடுப்பது எவ்வளவு சிரமம் என்பது நமக்குத்தானே தெரியும். சிறு துண்டு என்றால் நகத்தாலேயே நீக்கிவிடலாம். அதிக அளவில் என்றால் ? கத்தியைப் பயன்படுத்தினாலும் நிறைய இஞ்சி வீணாகும். அதற்கு பதிலாக இப்படி ஸ்பூனால் சுரண்டினால் இஞ்சியில் சிறிதும் வீணாகாமல் தோல் மட்டுமே தனியாக வந்துவிடும். 

Monday, January 21, 2019

பெப்பர் சிக்கன்



தேவையான பொருள்கள்: 

சிக்கன் - அரை கிலோ 
மிளகு - 25 கிராம் 
சோம்பு - அரைத்தேக்கரண்டி 
கிராம்பு - 2 
எண்ணெய் - 100 மில்லி 
இஞ்சி - 10 கிராம் 
பூண்டு - 10 கிராம் 
சின்ன வெங்காயம் - 100 கிராம் 
உப்பு - தேவையான அளவு 
தண்ணீர் - தேவையான அளவு 

செய்முறை: 

மிளகு, சோம்பு, கிராம்பு, இஞ்சி, பூண்டு இவற்றை நன்றாக மைபோல் அரைத்து கொள்ள வேண்டும். சிக்கனை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து எடுத்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வாணலியில் வதக்க தேவையான அளவு எண்ணெய் விட வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும்படி நன்றாக வதக்க வேண்டும். 

பிறகு அதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும். அதனுடன் கழுவிய சிக்கன் துண்டங்களை சேர்த்து அதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்க வேண்டும். பிறகு சிக்கன் துண்டங்கள் வேகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் மூடி வைத்து வேக விட வேண்டும். சிக்கன் நன்கு வெந்தவுடன் தண்ணீர் இல்லாத அளவிற்கு குறைந்த அனலில் 5 நிமிடம் வைத்து இறக்கினால் பெப்பர் சிக்கன் ரெடி. 

சில்லி சிக்கன் கிரேவி | chilli chicken gravy



தேவையான பொருட்கள்: 

எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ 
நறுக்கிய வெங்காயம் - 1 
 நறுக்கிய தக்காளி - 1 
நறுக்கிய  குடைமிளகாய் - அரை கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
 சோயா சாஸ் - 2  ஸ்பூன் 
தக்காளி சாஸ் - 1 ஸ்பூன் 
கார்ன்  மாவு - 2  ஸ்பூன் 
 நறுக்கிய  பச்சை மிளகாய் - 3 
வினிகர் - 1 ஸ்பூன் 
மிளகாய் தூள் - 2 ஸ்பூன் 
கரம் மசாலா - 1 ஸ்பூன் 
எண்ணெய் - தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு 

செய்முறை: 


முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். 

பின் அந்த சிக்கனுடன்  சோயா சாஸ், வினிகர், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து  நன்கு  மிக்ஸ் பண்ணி  20 நிமிடம் ஊற வைக்கவும்.

 பின்னர் அதனுடன் 2  ஸ்பூன் கார்ன்  மாவை சேர்த்து  நன்கு  பிரட்டிக் கொள்ளவும். 


பின்  கடாயை அடுப்பில் வைத்து, அதில்  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இந்த சிக்கன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். 


பின் மற்றொரு கடாயில்   எண்ணெயில் இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, பச்சை மிளகாய், குடைமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். 

பிறகு அத்துடன் தக்காளி, உப்பு சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கவும். 


அடுத்து அதில் மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி, தக்காளி சாஸ், சோயா சாஸ், வினிகர் சேர்த்து கிளறி, பொரித்து வைத்துள்ள சிக்கனையும் சேர்த்து, எவ்வளவு கிரேவி வேண்டுமோ, அவ்வளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.


 பின்  சிறிது நீரில் சோள மாவை சேர்த்து கலந்து, கிரேவியுடன் ஊற்றி 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

இப்போது  சுவையான  சில்லி சிக்கன் கிரேவி ரெடி

முட்டை சிக்கன் கறி | EGG CHICKEN CURRY


தேவையான பொருட்கள்:


 சிக்கன் -அரைக் கிலோ 
வேகவைத்த முட்டை-4 
காய்ந்த மிளகாய்-10 
 தனியா- 3 ஸ்பூன்
 சீரகம்-அரை ஸ்பூன் 
மிளகு-அரை ஸ்பூன்
 சோம்பு-1 ஸ்பூன் 
மஞ்சத்தூள்-அரை ஸ்பூன் 
பட்டை-ஒரு துண்டு 
கிராம்பு -3
ஏலக்காய்-2 
வெங்காயம்-இரண்டு 
தக்காளி-2 
 பச்சைமிளகாய்-3 
இஞ்சி-ஒரு துண்டு
 பூண்டு- 6 
புளி- சிறிதளவு 
தேங்காய்- அரைமூடி 
கொத்தமல்லி இலை, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை: 

மிளகாய்,தனியா மிளகுசீரகம்,சோம்பு ஆகியவற்றை வெறும் கடாயில் போட்டு இலேசாக வறுத்து பொடிக்கவும். 

இந்த பொடியை சிக்கனுடன்  சேர்த்து அரை ஸ்பூன்  உப்பு சேர்த்த   நன்கு கலக்கி ஊறவைக்கவும். இஞ்சிபூண்டுடன் வாசனை பொருட்களை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். 

தேங்காயை தனியாக மைய்ய அரைத்து கொள்ளவும்.

 வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாயை நறுக்கி கொள்ளவும் .

கடாயில் எண்ணெய்யை ஊற்றி  வெங்காயம்  இஞ்சிபூண்டு விழுதைவும் மஞ்சத்தூளைவும் போட்டு நன்கு வதக்கவும்.

 பிறகு தக்காளி, பச்சைமிளகாயை,கொத்தமல்லிதழையை போட்டு நன்கு வதக்கவும்.

அதனுடன்  ஊறவைத்துள்ள சிக்கனை  போட்டு நன்கு தேவையான அளவு உப்பு  சேர்த்து  மிக்ஸ் பண்ணவும்.

பின் புளியை கரைத்து  ஊற்றி தேங்காயும் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு சிக்கனை நன்கு வேக விடவும்.  

சிக்கன் வெந்தவுடன்  வேக வைத்த முட்டையை சேர்த்து  கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான முட்டை சிக்கன் கறி ரெடி.

Thursday, January 10, 2019

சிம்பிள் டிபன் சாம்பார் | tiffin sambar recipe




தேவையான பொருட்கள்: 


பாசிப்பருப்பு - அரை கப்
துவரம் பருப்பு - அரைகப்
நறுக்கிய வெங்காயம் - 1
 நறுக்கிய தக்காளி - 2 

 பச்சை மிளகாய் - 4 
மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
சாம்பார் தூள் - 11/2 ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை 
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு

எண்ணெய்  - 2  ஸ்பூன் 
கடுகு - அரை ஸ்பூன் 
 சீரகம் - அரை ஸ்பூன்
வெந்தயம்  - அரை ஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு
 கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை: 

குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,


வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.


தேவையான அளவு தண்ணீர்  விட்டு  2 பருப்புகளையும்  சேர்க்கவும்



 அதனுடன்  மஞ்சள்தூள்  



சாம்பார்  தூள்  



பெருங்காயத் தூள்   



தேவைாயன அளவு  உப்பு  சேர்த்து, 



குக்கரை மூடி 3  விசில் விட்டு, இறக்கவும். 



பின்பு  தேவையான அளவு உப்பு சேர்த்து சாம்பார் ஓரளவு கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும். 



பின்  சிறு கடாயை அடுப்பில்  வைத்து, அதில் எண்ணெய்  ஊற்றி காய்ந்ததும்,  கடுகு வெந்தயம் சீரகம்  கருவேப்பிலை  மல்லி இலை சேர்த்துசேர்த்து தாளித்து, 



சாம்பாருடன் சேர்த்தால், டிபன் சாம்பார் ரெடி

பச்சை சுண்டைக்காய் சாம்பார் | sundakkai sambar


தேவையானவை: 

 துவரம்பருப்பு - 100 கிராம்
பச்சை சுண்டைக்காய் - 100 கிராம்
 புளி -  சிறிதளவு 
சாம்பார் தூள் - 3 ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன்
வெந்தயம் -  அரை ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன் 
பெருங்காயத்தூள் - சிறிதளவு
 எண்ணெய் - 4 ஸ்பூன்
  உப்பு - தேவையான அளவு



செய்முறை: 

துவரம்பருப்பை   குக்கரில்   4 விசில்  விட்டு  வேகவத்து கொள்ளவும்.
கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சுண்டைக்காயை தட்டிப் போட்டு வதக்கவும். 

புளியைக் கரைத்து இதனுடன் சேர்த்து  தேவையான அளவு  உப்பு  மற்றும்  சாம்பார் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு, வேகவைத்த பருப்பை சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.

பின்பு மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு   கடுகு, வெந்தயம்,சீரகம்  பெருங்காயத்தூளையும் போட்டு  தாளித்து சாம்பாரில் சேர்த்தால் சுவையான சுண்டைக்காய் சாம்பார் ரெடி.

கருப்பு கொண்டைக் கடலை குழம்பு | karuppu kadalai kulambu recipe



தேவையானவை

கருப்பு கொண்டைக் கடலை - 150 கிராம்.

வெங்காயம் - 1.

தக்காளி - 2.

மிளகாய்த் தூள் - 3 ஸ்பூன்.

புளி - தேவைக்கு.

தேங்காய் துருவல் - 1 ஸ்பூன்.

முந்திரி - 2.

கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு.

காய்ந்த மிளகாய் - 2.

உப்பு, எண்ணெய், கொத்தமல்லி - தேவைக்கு.

 

செய்முறை:

கருப்பு கொண்டைக் கடலையை 4 மணி நேரம் ஊறவைத்து பிறகு உப்பு சேர்த்து குக்கரில் வேகவிடவும். ப்ரஷ்ர்பேனில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய் தாளித்து, வெங்காயம், தக்காளி வதக்கவும்.

பிறகு உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி வெந்த கொண்டைக்கடலை சேர்த்து அரை டம்ளர் நீர் விட்டு கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்ததும் புளிக்கரைசலை விடவும்.

5 நிமிடம் கழித்து கொதித்ததும் தேங்காய்த் துருவல், முந்திரி அரைத்து விழுது சேர்த்து மீண்டும் ஒரு கொதிவிட்டு குழம்பு சற்று கெட்டியானதும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

முட்டை சிக்கன் கறி | EGG CHICKEN CURRY



தேவையான பொருட்கள்:

 சிக்கன் -அரைக் கிலோ 
வேகவைத்த முட்டை-4 
காய்ந்த மிளகாய்-10 
 தனியா- 3 ஸ்பூன்
 சீரகம்-அரை ஸ்பூன் 
மிளகு-அரை ஸ்பூன்
 சோம்பு-1 ஸ்பூன் 
மஞ்சத்தூள்-அரை ஸ்பூன் 
பட்டை-ஒரு துண்டு 
கிராம்பு -3
ஏலக்காய்-2 
வெங்காயம்-இரண்டு 
தக்காளி-2 
 பச்சைமிளகாய்-3 
இஞ்சி-ஒரு துண்டு
 பூண்டு- 6 
புளி- சிறிதளவு 
தேங்காய்- அரைமூடி 
கொத்தமல்லி இலை, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை: 

மிளகாய்,தனியா மிளகுசீரகம்,சோம்பு ஆகியவற்றை வெறும் கடாயில் போட்டு இலேசாக வறுத்து பொடிக்கவும். 

இந்த பொடியை சிக்கனுடன்  சேர்த்து அரை ஸ்பூன்  உப்பு சேர்த்த   நன்கு கலக்கி ஊறவைக்கவும். இஞ்சிபூண்டுடன் வாசனை பொருட்களை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். 

தேங்காயை தனியாக மைய்ய அரைத்து கொள்ளவும்.

 வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாயை நறுக்கி கொள்ளவும் .

கடாயில் எண்ணெய்யை ஊற்றி  வெங்காயம்  இஞ்சிபூண்டு விழுதைவும் மஞ்சத்தூளைவும் போட்டு நன்கு வதக்கவும்.

 பிறகு தக்காளி, பச்சைமிளகாயை,கொத்தமல்லிதழையை போட்டு நன்கு வதக்கவும்.

அதனுடன்  ஊறவைத்துள்ள சிக்கனை  போட்டு நன்கு தேவையான அளவு உப்பு  சேர்த்து  மிக்ஸ் பண்ணவும்.

பின் புளியை கரைத்து  ஊற்றி தேங்காயும் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு சிக்கனை நன்கு வேக விடவும்.  

சிக்கன் வெந்தவுடன்  வேக வைத்த முட்டையை சேர்த்து  கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான முட்டை சிக்கன் கறி ரெடி.

மட்டன் உருளைக்கிழங்கு போண்டா | mutton urulai kilangu bonda recipe



தேவையான பொருள்கள்.

 கொத்து கறி  -  கால்  கிலோ
காய்ந்த  மிளகாய் - 5 
 சோம்பு - அரை ஸ்பூன்
 சீரகம்  - அரை ஸ்பூன்
 மல்லி  -3 ஸ்பூன்
 நெய் -  3 ஸ்பூன்
 பட்டை 1 துண்டு
 கிராம்பு 1
 பச்சை மிளகாய் 1
 உருளைக்கிழங்கு -  அரை  கிலோ
 நறுக்கிய வெங்காயம்  - 2
 முட்டை  - 2
 மஞ்சள்பொடி  - சிறிதளவு

 உப்பு - தேவையான அளவு


செய்முறை : 


காய்ந்த மிளகாய் , விட்டுபட்டை,கிராம்பு , சோம்பு, மல்லி, சீரகம் இவற்றை  வறுத்து நன்கு அரைத்து கொள்ளவும். 

கொத்துகறியில் அரைத்த விழுது,உப்பு,மஞ்சள்பொடி,சேர்த்து நன்கு வதக்கி  அதில் உள்ள நீர் சுண்டியதும் இறக்கி வைக்கவும்.

 கடாயில் நெய் ,நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் துண்டுகள் போட்டு தாளித்துகறியையும் கொட்டி கிளறி அதனுடன் வேகவைத்து  உருளைகிழங்க  தேவையான அளவு உப்பு போட்டு நன்கு மசித்து சின்ன   உருண்டைகளாக செய்யவும்.

ஒரு கிண்ணத்தில் முட்டைகளின் வெள்ளைகருவை மட்டும் தனியே எடுத்துஅடித்து எடுக்கவும். 

கடாயில் எண்ணைய்  விட்டு காய்ந்ததும், உருண்டைகளை வெள்ளை கருவில் முக்கி, பொரித்து எடுத்தால் மட்டன் உருளைக்கிழங்கு போண்டா ரெடி.

Friday, January 4, 2019

சுவையான இங்கிலீஷ் ஸ்கோன் செய்வது எப்படி?

Related image

நம்மூரில் பணியாரம் என்றால் இங்கிலாந்திலோ அது இங்கிலீஷ் ஸ்கோன்தோற்றத்தில் வட்டவடிவ வெஜ் பப்ஸ் போலஇருக்கும்.
 
தேவையானபொருட்கள்

மைதா மாவு – 390 கிராம்
வெண்ணை– 90 கிராம்
பொடித்தசர்க்கரை – 75 கிராம்
முட்டை– ஒன்று
பேக்கிங்பவுடர் – 10 கிராம்
பால்க்ரீம்ரேய்சின்ஸ் – 100 கிராம்
 
செய்முறை
 
அகலமானபவுலில் வெண்ணையை போட்டு க்ரீம் பதம்வரும்வரை நன்றாகஅடித்துக்கொள்ளவும். 
 
பின்னர் முட்டையை உடைத்து ஊற்றி கலந்து மைதா மாவு, பேக்கிங் பவுடர் பொடித்த சர்க்கரை, ரேய்சின்ஸ் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் சிறிதளவு பால், க்ரீம் சேர்த்து நன்றாக பிசைந்து 15 நிமிடம் பிரிட்ஜில் வைக்கவும்.
 
பிறகு அதை எடுத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி ரோல் செய்யவும். பின்னர் அவற்றை வெண்ணெய் தடவிய பேக்கிங் டிரேயில் வைத்து அதன் மேல் முட்டை கோட்டிங் கொடுத்து பேக்கிங் அவனில் 190 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பத்து நிமிடம் வைத்து எடுத்து பரிமாறவும்.

மசாலா வேர்க்கடலை பிரியாணி

Image result for groundnut

தேவையானவை :

  • பாசுமதி அரிசி, மசாலா வேர்க்கடலை – தலா ஒரு கப்
  • வறுத்த வேர்க்கடலை, கொப்பரைத் துருவல் – தலா கால் கப்
  • காய்ந்த மிளகாய் – 6
  • தேங்காய் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
  • பட்டை – ஒரு அங்குலத்துண்டு
  • பிரியாணி இலை – 1
  • லவங்கம் – 2
  • கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன்
  • சோம்பு – அரை டிஸ்பூன்
  • மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு
செய்முறை :
வறுத்த வேர்க்கடலையை பொடித்துக் கொள்ளவும். பாசுமதி அரிசியை உதிராக வேகவைத்து வடித்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், கொப்பரைத்துருவலை வறுத்து, ஆற வைத்து அரைக்கவும்.
வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, லவங்கம், பிரியாணி இலை, சோம்பு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து தாளிக்கவும். வறுத்து அரைத்த பொடியைச் சேர்த்து உப்பு போட்டு வதக்கி, மசாலா வேர்க்கடலையை சேர்த்து பிரட்டி இறக்கவும். இந்தக் கலவையை சேர்த்து கிளறவும். பின்னர் பொடித்த வேர்க்கடலையைத் தூவி பரிமாறவும்.
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !