Showing posts with label Tamil Rhymes. Show all posts
Showing posts with label Tamil Rhymes. Show all posts

Monday, January 7, 2019

காகத்தின் சமயோசித புத்‌தி



தாகம் கொண்ட காகம் ஒன்று சுற்றி சுற்றி வந்தது;
குடிக்கத் தண்ணீர் கிடைக்காமல் மிகவும் கஷ்டப் பட்டது;
கிணறு ஒன்றைக் கண்டது, அருகில் ஜாடியும் இருந்தது;
ஜாடீயின் மீது அமர்ந்தது; எட்டி எட்டிப் பார்த்தது;
அடியில் தண்ணீர் இருந்தது; ஆசையாகப் பார்த்தது;
ஆனால் அதற்கு எட்டவிலை; என்ன செய்தது?
அது என்ன செய்தது?
கீழே கிடந்த கற்களை ஜாடியிலே போட்டது;
தண்ணீர் மேலே வந்தது;
தாகம் தீரக் குடித்தது;
தாக்ம் தீரக் குடித்த பின் சந்தோஷமாகப் பறந்தது!

Sunday, January 6, 2019

ஒரு சொல், இரு பொருள்



மலர்கள் ஒன்று சேர்ந்தால் மாலை;
மகிழ்வாய் ஆடும் நேரம் மாலை.
அழகுத் தமிழில் பாடி ஆடு;
அங்கே புல்லை மேயுது ஆடு.
அழகாய்த் தண்ணீர் ஓடும் ஆறு;
அன்புத் தங்கை வயது ஆறு.
நல்ல நண்பர் நட்பை நாடு;
நமது நாடு பாரத நாடு.


காகம் கரையுது கா, கா, கா.




காகம் கரையுது கா, கா, கா;
கிளியின் சத்தம் கீ, கீ, கீ;
கோழி கூவும் கோ,கோ,கோ;
குயிலின் கூவல் கூ,கூ,கூ.
பசுவின் குரலோ மா, மா, மா;
ஆடு கத்தும் மே,மே, மே;
பூனை கத்தும் மியாவ், மியாவ், மியாவ்;
நாயின் குரைப்பு லொள், லொள், லொள்
.

தோ தோ, தோ தோ, நாய்க்குட்டி



தோ தோ, தோ தோ, நாய்க்குட்டி,
துள்ளி வா, வா, நாய்க்குட்டி;
சின்னச் சின்ன நாய்க்குட்டி,
செல்லமான நாய்க்குட்டி;
பந்தை நானும் தூக்கி எறிந்தால்,
பாய்ந்து எடுத்து வா நாய்க்குட்டி;
கொஞ்சி கொஞ்சி வா வா வா ,
குட்டிச் செல்ல நாய்க்குட்டி.
பாசமான நாய்க்குட்டி,
பாய்ந்து தாவும் நாய்க்குட்டி.

மாம்பழமாம், மாம்பழம்



மாம்பழமாம் மாம்பழம், மல்கோவா மாம்பழம்,
சேலத்து மாம்பழம், சுவையான மாம்பழம்;
அழகான மாம்பழம், அல்வா போல மாம்பழம்
தேனாட்டம் மாம்பழம், தித்திக்கும் மாம்பழம்;
நாக்கில் தண்ணீர் ஊறுதா, தின்ன ஆசை தோணுதா?
இங்கு ஓடி வாருங்கள், பங்கு போட்டுத் தின்னலாம்!

வட்டமான தட்டு, தட்டு நிறைய லட்டு!




வட்டமான தட்டு, தட்டு நிறைய லட்டு;
லட்டு மொத்தம் எட்டு, எட்டில் பாதி விட்டு,
எடுத்தான் மீதம் கிட்டு, மீதம் உள்ள லட்டு,
முழுதும் தங்கை பட்டு, போட்டாள் வாயில் பிட்டு;
கிட்டு நான்கு லட்டு, பட்டு நான்கு லட்டு,
மொத்தம் தீர்ந்ததெட்டு, மீதம் காலி தட்டு!

குள்ளக் குள்ள வாத்து, குவாக் குவாக் வாத்து



குள்ளக் குள்ள வாத்து, குவாக், குவாக், வாத்து;
வெள்ளை நிற வாத்து, மஞ்சள் மூக்கு வாத்து;
மெல்ல உடலைச் சாய்த்து, மேலும் கீழும் பார்த்து,
சீராக நடக்கும், சின்ன மணி வாத்து.
தண்ணீரிலே நன்றாய், நீந்தி வரும் வாத்து;
தரையிலேயும் நன்றாய் நடந்து வரும் வாத்து.

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !