Monday, April 8, 2019

கோடை விடுமுறையை குழந்தைகளுடன் ஜமாய்க்க சிக்கன் லாலிபாப் ரெசிபி

கோடை விடுமுறையில் உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான சிக்கன் லாலிபாப் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

தேவையானவை: சிக்கன் லாலிபாப் துண்டுகள் – 8, முட்டை – ஒன்று, இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன், தயிர் - 50 மில்லி, கார்ன் ஃப்ளார் மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், ஃபுட் கலர்(சிவப்பு) - ஒரு சிட்டிகை(விரும்பினால்), எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு



செய்முறை: சிக்கன் லாலிபாப் துண்டுகளை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முட்டை, இஞ்சி-பூண்டு விழுது, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், எலுமிச்சை சாறு, தயிர், கார்ன் ஃப்ளார் மாவு, உப்பு, சிவப்பு ஃபுட் கலர் சேர்த்து நன்கு கலக்கவும்.

அதனுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கன் லாலிபாப் துண்டுகளைச் சேர்த்துப் பிரட்டி எடுத்து, மசாலா கலவை சிக்கனில் முழுக்கப் பரவி இருக்குமாறு செய்து, அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும், ஊறவைத்துள்ள சிக்கன் லாலிபாப் துண்டுகளை அதில் பொரித்தெடுக்கவும். பொரித்தெடுத்த சிக்கன் லாலிபாப் துண்டுகளை சிறிது நேரம் ஒரு டிஸ்யூ தாளில் எடுத்து வைத்து எண்ணெய் நன்றாக வடிந்ததும் சூடாக எடுத்து பரிமாறவும்

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !