Showing posts with label SLOGAS. Show all posts
Showing posts with label SLOGAS. Show all posts

Monday, November 28, 2022

மான் செய்த தந்திரம்

 ஒரு மான்  இரை தேடுதலை முடித்துக் கொண்டு  தன்னோட இரண்டு குட்டிகளை அழைத்துக் கொண்டு  இருப்பிடத்துக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தது.


அப்போது மழை தூறல் ஆரம்பித்துவிட்டது. உடனே பக்கத்தில் இருந்த குகை போன்ற இடத்துக்கு குட்டிகளை கூட்டிப்போனது.

“மழை விட்டதும் கிளம்பிப்போகலாம்” என்று குட்டிகளிடம் கூறியது.

உள்ளே கிடந்த பொருள்களை பார்த்த மான் அதிர்ச்சியானது. காரணம், அங்கே கிடந்ததெல்லாம் காட்டு விலங்குகளோட எலும்புகள்.

மானுக்கு அது ஒரு சிங்கத்தோட குகைதான் அப்படின்னு தெரிஞ்சிடுச்சு. சீக்கிரம் வெளியே போவதுதான் நல்லது; அதனால மழை விட்டுடுச்சான்னு பார்க்க வெளியேவந்து பார்த்தது. மானுக்கு ஒரே பதற்றம்; ஏனென்றால் சற்று தூரத்தில் ஒரு சிங்கம் அந்த குகையை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது.

இதைப் பார்த்ததும் மான் வேகமாக குகைக்குள்ளே சென்றது; உடனடியாக தப்பிக்க ஒரு யோசனை செய்தது.


ஆபத்தான நேரங்களில்  தப்பிக்க வேறுவழியே இல்லை என்கிறபோது, நாம் புத்திசாலியாக  திட்டமிட்டு 
நாம் நம் சக்திக்கும் அதிகமான துணிச்சலுடன் செயல் பட்டால்தான் தப்பிக்க முடியும் என்று மான் முடிவு செய்தது.

தன் குட்டிகளுக்கு ‘பளார்..பளார்’ என்று அறை விட்டது. அம்மா எதற்காக அறைகிறார் என்று புரியாத குட்டிகள் ‘ஓ’வென கதறி அழுதன.

சிங்கம் குகையின் அருகில் வந்ததை அறிந்து கொண்ட மான்,

“குழந்தைகளே சற்று முன்னர்தானே ஒரு யானையை வேட்டையாடி சாப்பிடக் கொடுத்தேன்; அது போதாமல் பசியால் அழுகிறீர்கள், இந்த குகையில் இருக்கும் சிங்கம் இப்போது வந்துவிடும்; வந்ததும் அதைக் வேட்டையாடி தருவேன்; அதுவரை அமைதியாயிருங்கள்” என்று சப்தமாகக் கூறியது.

ராஜா என்ன இத்தனை வேகமாக ஓடிவருகிறீர்”

“என்னோட குகைல என்னைவிட வலிமையான மிருகம் இருக்குது; அது குட்டிகளுக்கு என்னை உணவாக கொடுக்க  பார்க்கிறது” என்று சிங்கம் பயந்தபடியே பதில் சொன்னது.

இனதக்கேட்ட நரிக்கு சிரிப்பு வந்துவிட்டது.

“சிங்க ராஜா உங்களைவிட வலிமையான மிருகம் எதுவும் கிடையாது” என்றது.

சிங்கத்துக்கு கோபம் தலைக்கேறியது, 

” என்னையே மறுத்துப் பேசுகிறாயா, அந்தமிருகம் குட்டிகளோடு பேசியதை என் காதுபட கேட்டேன்”என்றது.

இதைக் கேட்ட நரி அந்த புது மிருகத்திடம் நல்ல பெயர் வாங்கிவிட்டால் காட்டிலே தான் மிகவும் செல்வாக்காக இருக்கலாம் என்று எண்ணியது. அதற்கு தந்திரமாக சிங்கத்தை அந்த மிருகத்திடம் கொண்டுபோய் விடவேண்டும் எனத் திட்டமிட்டது.

” சிங்க ராஜா, வாருங்கள், அதை என்னிடம் காட்டுங்கள்”என்றது நரி.

“அதன் பசிக்கு நான் இரையாகிவிட நீ தப்பித்து ஓடிவிட திட்டமா” என்றது சிங்கம்.

“ராஜா அப்படியெல்லாம் ஓடமாட்டேன்; வேண்டுமானால் ஒரு கயிற்றால் இருவர் கால்களையும் கட்டிக் கொள்ளலாம்” என நரி  யோசனை சொன்னது.

இதன்படி கயிற்றின் ஒரு முனை சிங்கத்தின் காலிலும் மறுமுனை நரியின் காலிலும் கட்டப்பட்டது.

இந்நேரம் சிங்கம் நெடுந்தூரம் போயிருக்கும் என்று எண்ணி வெளியில் வந்த மான் சிங்கமும் நரியும் வருவதைக் கண்டது.

உடன் உள்ளே சென்று மீண்டும் முன்போலவே குட்டிகளை அழவைத்தது.


குழந்தைகளே, சத்தமாக அழாதீர்கள். உங்கள் சத்தத்தால்தான் சிங்கம் ஓடிப்போயிருக்கும். அநேகமாக சிங்கம் ஏதாவது ஒரு தந்திரம் மிக்க நரியை துணைக்கு அழைத்துவரும்; அதையும் சேர்த்தே சாப்பிடலாம்.சத்தம் போடாதீர்கள்” என்று உரக்கக் கூறியது. இதைக்கேட்ட சிங்கம் மீண்டும் தலை தெறிக்க ஓடத்தொடங்கியது.


ஈடுகொடுக்க முடியாத நரி,

“சிங்க ராஜா மெதுவாக ஓடுங்கள், என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை” என்று சத்தமிட்டது. எதையும் காதில் வாங்காமல் சிங்கம் நரியை கல்லிலும் முள்ளிலும் இழுத்தபடியே ஓடியது. நெடுந்தூரம் சென்றபின் நின்றது. பாவம் நரிக்கு  உடலெல்லாம் காயம்பட்டு இரத்தம் கொட்டியது.

சிங்கமும், நரியும் ஓடிவிடவே  வெளிவந்த மான் தன் குட்டிகளை பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு தன் இருப்பிடத்தை அடைந்தது.


இக்கதையினால் நாம் அறிவது:

ஆபத்து நேரத்தில் மான்போல புத்திசாலித்தனமாக விரைந்து முடிவெடுக்கவேண்டும்.

அடுத்தவர்களைஆபத்தில் சிக்கவைத்து தான் நன்மை பெற தந்திரம் செய்பவர் நரிபோல ஆபத்தில் சிக்கிக் கொள்வார்.



Monday, January 7, 2019

அரசு வேலை கிடைக்க இம்மந்திரத்தை துதித்து வந்தால் பலன் உண்டு


நாம் அனைவருமே வாழ்வதற்கு செல்வம் தேவை. ஏதாவது வேலை, தொழில், வியாபாரம் போன்றவற்றை செய்தால் மட்டுமே நமக்கு செல்வம் கிட்டும். ஆனால் அனைவருக்குமே தொழில், வியாபாரங்கள் கிட்டும். திறனோ, சூழலோ இல்லாததால் பெரும்பாலானவர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைகளில் சேர்கின்றனர். இப்படி பணியிலிருப்பவர்கள் தங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கவும், அரசு வேலை பெறும் முயற்சிகளில் இருப்பவர்கள் அது கிடைக்கவும் ஜெபிக்க வேண்டியசெவ்வாய் பகவான் தமிழ் துதிஇதோ.

செவ்வாய் பகவான் தமிழ் துதி :
வசன நல் தைரியத்தோடு மன்னவர் சபையில்
வார்த்தை புஜபல பராக்ரமங்கள் போர் தனில்
வெற்றி ஆண்மை நிஜமுடன் அவரவர்க்கு
நீணிலம் தனில் அளிக்கும் குசன் மகனாம்
செவ்வாய் குறைகழல் போற்றி போற்றி

செவ்வாய் பகவானை போற்றும் தமிழ் துதி இது. இந்த துதியை தினமும் காலையில் 27 முறை துதித்து வருவது சிறந்தது. செவ்வாய் பகவானின் அம்சம் கொண்ட முருகப்பெருமானுக்குரிய சஷ்டி, கிருத்திகை போன்ற தினங்களில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, வீட்டின் பூஜையறையில் கையில் வேல் வைத்திருக்கும் முருகப்பெருமானின் படத்திற்கு மலர்களை சாற்றி, நெய் தீபம் ஏற்றி இத்துதியை 27 அல்லது 108 முறை துதிப்பதால் வேலைகளில் சாதாரண நிலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிட்டும். அரசு பணி பெறுவதற்கான முயற்சிகளில் இருப்பவர்களுக்கு அரசு வேலை கிடைப்பதற்கான சாத்தியங்கள் அதிகமாகும்.


சிறந்த பேச்சாற்றல், மனதில் எதையும் எதிர்கொள்ளும் தைரியம், மன்னர்கள் புலவர்கள் இருக்கும் சபைகளில் பேச்சாற்றலில் வெற்றி, உடல் மனதிடம், போட்டிகள் மற்றும் போர் போன்றவற்றில் வெற்றி, மேலான பேராண்மை குணம் ஆகியவற்றை இப்பூவில் வாழும் மனிதர்களுக்கு அளிக்கும் செவ்வாய் பகவானை போற்றுகிறோம் என்பதே இத்துதியின் பொதுவான பொருளாகும். செவ்வாய் பகவானின் இத்துதியை கூறி வழிபடுபவர்களுக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும். இதையும் படிக்கலாமே: சீக்கிரம் வேலை கிடைக்க மந்திரம்

Thursday, December 13, 2018

Karpagarachambiga sloga for chid birth

திருமணமாக, குழந்தை உண்டாக..
ஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம்
தேவேந்திர பிரிய பாமினி
விவாஹ பாக்கியம் ஆரோக்கியம்
புத்ர லாபம் சதேஹிமே
பதிம் தேஹி ஸுதம் தேஹி
சௌபாக்கியம் தேஹிமே சுபே
சௌமாங்கல்யம் சுபம் ஞானம்
தேஹிமே கர்ப்பரக்ஷகே
காத்யாயினி மஹாமாயே
மஹா யோகின்ய தீஸ்வரி
நந்தகோப ஸுதம் தேவம்
பதிம் மேகுருதே நம:

சுக பிரசவமாக தினமும் சொல்லவேண்டியவை

ஸ்ரீ மாதவீ காந நஸ்தே கர்ப்ப
ரக்ஷõம்பிகே பாஹிபக்தம் ஸ்துவந்தம்    (ஸ்ரீமாதவி)

வாபீதடே வாமபாகே வாம
தேவஸ்ய தேவஸ்ய தேவீ ஸ்திதாத்வம்

மாந்யா வரேண்யா வதாந்யா - பாஹி
கர்பஸ் தஜந் தூந் ததாபக்தலோகாந்       (ஸ்ரீமாதவி)

ஸ்ரீ கர்ப்பரக்ஷõ புரேயா - திவ்ய
ஸெளந்தர்யயுக்தா ஸீமாங்கல்யகாத்ரீ

தாத்ரீ ஜனித்ரீ ஜனானாம் திவ்ய
ரூபாம் தயார்த்ரீம் மநோக்ஞாம் பஜேதாம்   (ஸ்ரீமாதவி)

ஆஷாடமாஸேஸூபுண்யே
ஸுக்ரவாரே ஸுகந்தேன கந்தேனலிப்தா

திவ்யாம்பரக கல்பவேஷா வாஜ
பேயாதி யாகஸ்த பக்தைஸ் ஸூத்ருஷ்டா    (ஸ்ரீமாதவி)

கல்யாணசாத்ரீம் நமஸ்யே - வேதி
காட்யஸ்த்ரியா கர்ப்பரக்ஷõகரீம் த்வாம்

பாலைஸ்ஸதா ஸேவிதாம்ங்க்ரீம் - கர்ப்ப
ரக்ஷõர்த்த மாராது பேதை ருபேதாம்            (ஸ்ரீமாதவி)

பரமோத்ஸ்வே விப்ரவீத்யாம் - வாத்ய
கோஷேண துஷ்டாம் ரதே ஸந்நிவிஷ்டாம்

ஸர்வார்த் ததாத்ரீம் பஜேஹம் தேவ
ப்ருந்தை ரபீட்யாம் ஜகன்மாதரம் த்வாம்     (ஸ்ரீமாதவி)

எதத்க்ருதம் ஸ்தோத்ரரத்னம் தீக்ஷி
தாநந்தராமேண தேவ்யாஸ்ஸூது ஷ்ட்யை

நித்யம்படேத்ய ஸ்துபக்த்யா - புத்ர
பௌத்ராதி பாக்யம் பவேத் தஸ்யநித்யம் (ஸ்ரீமாதவி).


குழந்தை பாக்கியம் பெற

ஸ்ரீ மத்கல்பக விக்நராஜபிமலம்
ஸ்ரீ கர்ப்பரக்ஷõம்பிகை ஸூரனும் வ்ருத்தகாவேர

ஜவர நதீ கூலேஸ் திதிம் தக்ஷிணே
பக்தாநாம் அபய ப்ராதந நிபுணம்

ஸ்ரீ மாதவீ காநந÷க்ஷத்ரஸ்தம் ஹ்ருதிபாவயே
கஜ முகம் விக்நோபசாந்த்யை ஸதா !!

காவேர ஜாததட தக்ஷிணா சாஸ்தி தா
லயஸ்தாம் கருணாஸ்பூர்ணாம் !!

ஸ்பாத பத்மாச்ரித பக்த தாரா கர்பாவனே
தக்ஷத ராம்நமாமி

ஸ்ரீமல்லிகாரண்யபதே ஹ்ருதிஸ்தாம்
ஸ்ரீ மல்லிகா புஷ்ப லஸத் கசாட்யம்

ஸ்ரீ மல்லிகா புஷ்ப ஸீபூஜி தாங்கரீம்
ஸ்ரீ மல்லிகாரண்ய கதாம் நமாமி

பக்தாவளி நாம் அபய ப்ரதாத்ரீம்
ரிக்தாவளீனாம் அதிவித்த தாத்ரீம்

சாக்தாவளீனாம் ஸூகமோக்ஷதா த்ரீம்
ஸ்ரீ கர்ப்பரக்ஷõம் அஹமாச்ரயேம்பாம் !!

பக்தி ப்ரதானா வனபக்த தீஷா
ஸ்த்ரீ கர்ப்பரக்ஷõக ரணே திதிக்ஷõ !

Gayatri Mantra of Shani (Saturn)

ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்க அஸ்தாய தீமஹி
தன்னோ மந்த ப்ரசோதயாத்

Sanishwara Gayatri (Gayatri for Saturn, Sani Gayatri)

Om kaakadhwajaaya vidmahae
khadga hastaaya dheemahi
tanno mandah: prachodayaat

Meaning: 

Om, Let me meditate on him who has crow in his flag,
Oh, He who has a sword in his hand, give me higher intellect,
And let Saneeswara illuminate my mind.


Various Other Sani Gayatri Mantras

Om Ravisutaaya vidmahe
Mandagrahaaya dheemahi
tanno Sanih prachodayaat

ஓம் ரவிசுதாய வித்மஹே
மந்தக்ரஹாய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

Om Kaakadhwajaaya vidhmahe
khadgahastaaya dheemahi
tanno Sanih prachodayaat

ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

Om Vaivaswataaya vidmahe
Pangupaadaaya dheemahi
tanno Mandah prachodayaat

ஓம் வைவஸ்வதாய வித்மஹே
பங்கு பாதாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்

Om Saneeswaraaya vidmahe
Chaayaaputraaya dheemahe
tanno Sanih prachodayaat

ஓம் சனீஸ்வராய வித்மஹே
சாயாபுத்ராய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

Om Chaturbhujaaya vidmahe
Dandahastaaya dheemahi
tanno Mandah prachodayaat

ஓம் சதுர்புஜாய வித்மஹே
தண்டஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்

கடன் தீர லட்சுமி நரசிம்மர் ஸ்லோகம்

விநாயகர் துதி (மேஷம்)
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியுள் வைத்தபடி போற்றுகின்றேனே.

அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தின் நிலையறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக ! விரைகழல் சரணே !

முருகன் துதி (ரிஷபம்)

பேர் ஆதரிக்கும் அடியவர்தம்
பிறப்பை ஒழித்து, பெருவாழ்வும்
பேறும் கொடுக்க வரும் பிள்ளைப்
பெருமான் என்னும் பேராளா!
சேரா நிருதர் குல கலகா!
சேவற்கொடியாய் ! திருச்செந்தூர்த்
தேவா ! தேவர் சிறைமீட்ட
செல்வா ! என்று உன் திருமுகத்தைப்
பாரா, மகிழ்ந்து, முலைத் தாயர்
பரவிப் புகழ்ந்து, விருப்புடன், அப்பா !
வா, வா, என்று உன்னைப் போற்றப் 
பரிந்து, மகிழ்ந்து, வர அழைத்தால்
வாராது இருக்க வழக்கு உண்டோ !
வடிவேல் முருகா ! வருகவே !
வளரும் களபக் குரும்பை முலை
வள்ளி கணவா ! வருகவே !
பெருமாள் துதி (மிதுனம்)
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று !
தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால், சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவு மொன்றாய் இசைந்து !


நரசிம்மர் துதி (கடகம்)
அண்ட சராசரங்களில் நிறைந்த சிம்மன்
அகிலமும் தானாகி அறிவு தந்த சிம்மன்
தொண்டரின் தூதாகி துணை வந்த சிம்மன்
துஷ்ட நிக்ர சிஷ்ட பரிபாலன சிம்மன்
மீனாகி வந்து சதுர்வேதம் காத்த சிம்மன்
ஆமையாய் மிதந்து மலை தாங்கி நின்ற சிம்மன்
வராகமாய் பூதேவியை ரக்ஷித்த சிம்மன்
பிரகலாத ஆழ்வானின் பிரசன்ன சிம்மன் !


அனுமன் துதி (சிம்மம்)
விரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய்
உறைவார் முடிவே உணரா முதலோன்
கரைவார் நிறைவே கருதாதவன் போல்
உறைவான் மறையாய் ஒரு நீதியனே !
கண்டேன் ஒரு சீதையையே
கருதேன் இனிய ஸ்ரீராமனையே நான்
வென்றேன் எனவே விழைந்தானையே நான்
கொண்டேன் மனமே குலம்வாழ் வதற்கே !
சரமே தொளையா சகமே மறவா
சரீரா அனுமா ஜமதக் கினிநீ
உரமே உறவே உறவோய் பெரியோய்
உயர்வே அருள்வாய் திருமாருதியே !
கோவிந்தன் துதி (கன்னி)
ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ,
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்,
தேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே.
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே,
நெடியானே ! வேங்கடவா ! நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே !
ராகவேந்திரர் துதி (துலாம்)
நெஞ்சத்திலே என்றென்றும் நிலைக்கின்ற ஆலயம்
நாவினிக்கப் பாடி நின்றால் நலமளிக்கும் ஆலயம்
பஞ்சம்பசி துடைக்கின்ற பாராளும் ஆலயம்
பரந்தாமன் அருள்பெற்ற புண்ணியனின் ஆலயம்
கொஞ்சுதமிழ்ப் பாவினிலே கோபுரமாம் ஆலயம்
காவியுடை போர்த்திநின்ற கண்கொள்ளா ஆலயம்
வஞ்ச நெஞ்சம் உடையோரை மாற்றிடுமே ஆலயம்
மாந்தர்குறை தீர்க்கின்ற மகிமை மந்த்ராலயம் !


சிவ துதி (விருச்சிகம்)
நீருளான் தீயுளான் அந்தரத்துள்ளான்
நினைப்பவர் மனத்துள்ளான் நித்தமா ஏத்தும்
ஊருளான் எனதுரை தனதுரையாக
ஒற்றைவெள் ளேறு உகந்தேறிய வொருவன்
பாருளார் பாடலோ டாடல் அறாத
பண் முரன்றஞ்சிறை வண்டினம் பாடும்
ஏருளார் பைம்பொழில் இலம்பையங்கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வதியல்பே !
செல்வ நெடுமாடஞ் சென்று சேண்ஓங்கிச்
செல்வ மதிதோய செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம்பல மேய
செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே !
துர்க்கை துதி (தனுசு)
இசைதந்து இல்வாழ்வின் இடர்நீக்கிக் காப்பவளே,
விசையுடனே மணமாலை விருப்பமொடு அளிப்பவளே,
திசையெல்லாம் திருவிளங்கத் திருவடியால் நடந்தவளே,
அசைவற்றபொருளதையும் ஆட்சிசெய்வாய் துர்க்கையளே !
துர்க்கை துதி (மகரம்)
சேவித் தெழுந்திருந்தேன் தேவி வடிவங் கண்டேன்
வச்சிரக் கிரீடம் கண்டேன் வைடூரிய மேனி கண்டேன்
முத்துக்கொண்டைகண்டேன்முழுப் பச்சை மாலை கண்டேன்.
சவுரிமுடி கண்டேன் தாழை மடல் சூடக் கண்டேன்
பின்னலழகு கண்டேன் பிறைபோல நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன் தாயார் வடிவங்கண்டேன்
கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டு கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்
கைவளையல் கலகலென்ன கணையாழி மின்னக் கண்டேன்
அன்னையே அருந்துணையே அருகிருந்து காருமம்மா
வந்தவினையகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா
தாயாரே உன்றன் தாளடியில் சரணம் என்றேன்
மாதாவே யுன்றன் மலரடியில் நான் பணிந்தேன் !
சிவன் துதி (கும்பம்)
ஈசனடி போற்றி யெந்தையடி போற்றி
தேசனடி போற்றி சிவன்சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலனடி போற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி
சீரார் பெருந்துறைநம் தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளும்மலை போற்றி !
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே !
ஸ்ரீரங்கநாதர் துதி (மீனம்)
பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா ! அமரரேறே ! ஆயர்தம் கொழுந்தே ! என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்,
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே !

வேதநூற் பிராயம் நூறு மனிதர்தாம் புகுவரேனும்,
பாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு
பேதைபா லகன தாகும் பிணிபசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே !

ஊரிலேன் காணியில்லை, உறவுமற் றொருவரில்லை
பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனே ! ஓ கண்ணனே ! கதறுகின்றேன்
ஆருளர் களைக ணம்மா ! அரங்கமா நகருளானே !

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !