தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - அரை கப்
துவரம் பருப்பு - அரைகப்
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
சாம்பார் தூள் - 11/2 ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு
கடுகு - அரை ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
வெந்தயம் - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.
தேவையான அளவு தண்ணீர் விட்டு 2 பருப்புகளையும் சேர்க்கவும்
அதனுடன் மஞ்சள்தூள்
சாம்பார் தூள்
பெருங்காயத் தூள்
தேவைாயன அளவு உப்பு சேர்த்து,
குக்கரை மூடி 3 விசில் விட்டு, இறக்கவும்.
பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்து சாம்பார் ஓரளவு கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
பின் சிறு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு வெந்தயம் சீரகம் கருவேப்பிலை மல்லி இலை சேர்த்துசேர்த்து தாளித்து,
சாம்பாருடன் சேர்த்தால், டிபன் சாம்பார் ரெடி
No comments:
Post a Comment