அசைவ உணவு சமைத்து, சாப்பிட்டு முடித்து, பாத்திரங்களை என்னதான் dish soap போட்டுக் கழுவினாலும் அசைவ வாசனை சரியாகப்போகாது. அதனால் கழுவி முடித்த பிறகு சிறிது கடலைமாவு அல்லது பச்சைப்பயறு மாவு கொண்டு தேய்த்துக் கழுவினால் வாசனை போன இடம் தெரியாது. பாத்திரமும் பளிச்.
இதேதான் எண்ணெய் பாத்திரங்களுக்கும்(வாணல்). கடலைமாவு போட்டுக் கழுவினால் பளிச் என மின்னும்.
இதுவே கைகளுக்கும் பொருந்தும்.
**********************************************************************************
பீன்ஸை சமையலுக்குப் பயன்படுத்தும்போது நாம் அதன் காம்பு & நுனி பகுதியை நறுக்கி போட்டுவிடுவோம்தானே. அந்த நுனிப்பகுதியில்தான் சத்துக்கள் அதிகம் உள்ளனவாம். ஒரு பக்கம் மட்டும் நறுக்குவதால் வேலையும் மிச்சம்.
*****************************************************************************************
இஞ்சியின் தோலை எடுப்பது எவ்வளவு சிரமம் என்பது நமக்குத்தானே தெரியும். சிறு துண்டு என்றால் நகத்தாலேயே நீக்கிவிடலாம். அதிக அளவில் என்றால் ? கத்தியைப் பயன்படுத்தினாலும் நிறைய இஞ்சி வீணாகும். அதற்கு பதிலாக இப்படி ஸ்பூனால் சுரண்டினால் இஞ்சியில் சிறிதும் வீணாகாமல் தோல் மட்டுமே தனியாக வந்துவிடும்.
No comments:
Post a Comment