Tuesday, May 25, 2021

பேராசை விளைவு

 ஒரு கிராமத்தில் கல்யாண் என்ரான் இருந்தான். அவன் அடகு கடை மற்றும் பணத்தை வட்டிக்கு விடுபவன்.

இவன் கிராமத்திலுள்ள முக்காவாசி விவசாயிகள் நிலத்தை அடமானமாக வைத்து இவனிடம் பணம் பெற்றுக் கொள்வார்கள்.

அதேபோல் சுந்தரன் என்ற ஒரு விவசாயி கல்யாணம் வந்து தனது நிலத்தை அடமானம் வைத்து விவசாயத்திற்கு தேவைப்படும் பணத்தை வாங்கிக்கொண்டு சென்றான்.

கல்யாண் கொடுக்கும் பொழுதே இதனை நீ ஒரு மாதத்திற்குள் வட்டியுடன் தர வேண்டும் அப்படியில்லையென்றால் நாளும் நிலத்தை எடுத்துக் கொள்வேன் என்று கூறினான்.

அதன் பின்பு விவசாயிகள் தனது கடனை கட்ட இயலவில்லை அதற்காக கல்யாண் சுந்தர் விவசாயம் செய்யும் நிலத்தை எடுத்துக் கொண்டான்.

கல்யாண் இடம் எவ்வளவு பணம் இருந்தாலும் அவன் ஆசையை மட்டும் நிறுத்த மாட்டான்.

அந்த விவசாயி நிலத்தில் கல்யாண் விவசாயம் செய்யத் தொடங்கினான் அங்கு தக்காளி செடிகளை விதைத்தான் செய்தான்.

இதேபோல் பக்கத்திலுள்ள நிலங்களிலும் நன்றாக விவசாயம் நடந்தது.

இதனைக்கண்ட கல்யாண் நான் மட்டும் தான் நல்ல விவசாயம் செய்ய வேண்டும் மற்றவர்கள் எனக்கு கீழே தான் இருக்க வேண்டும் என்று நினைத்து அருகில் உள்ள விவசாய நிலங்களில் சட்ட உரங்களை போட்டு செடிகளை  பட்டுப்போக செய்தான்.

இந்த விஷயத்தினை கல்யாண் தனது மனைவியிடம் கூறி நான் எப்படி நன்றாக விவசாயம் செய்கிறேனா என்று கேட்டான்

அதற்கு அவர் மனைவி நீ செய்த பாவங்களை நான் பூஜை செய்து தான் போக்க வேண்டும் ஏன் நீங்க இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டாள்.

அதற்கு கல்யாண எனக்கு தெரியும் என் வேலைகளைப் பார்க்க உன்னிடம் நான் அறிவுரை கேட்கவில்லை என்று கோபமுடன் வெளியே சென்றான்.

கல்யாண் செல்லும் வழியில் ஒரு சாமியாரை பார்த்தான்.

 இவன்தான் பேராசை பிடித்தவனே. அதனால் சாமியாரிடம் சென்று எனக்கு வரங்கள் தாங்கள் என்று கேட்டதற்கு சாமியாரும் சரி என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.

அதற்கு கல்யாண் என்னுடன் உள்ள அனைத்து பொருள்கள் மற்றும் செல்வமும் பெரிதாக வளர வேண்டும் என்று கேட்டார்.

அதற்கு அந்த சாமியாரும் அது அப்படியே நடக்கும் என்றும் வரத்தை அளித்தார்.

கல்யாண் இதனைக் கேட்ட உடன் மகிழ்ச்சியாக தனது வீட்டிற்குச் சென்றான்.

அப்பொழுது தனது வீட்டில் உள்ள அனைத்துப் பொருட்களும் மிகப்பெரியதாக மாறிவிட்டது.

இதனை கண்ட உடன் கல்யாணக்கு ஒரே அதிர்ச்சி நான் பொருள்கள் மற்றும் செல்வங்கள் மேலும் வளர வேண்டும் தான் நான் கேட்டேன் அந்த சாமியார் உருவ அளவில் வளர வைத்து விட்டாரே என்று புலம்பினார்.

அதன் பிறகு தனது விவசாய நிலையத்திற்குப் போய் பார்த்தால் அந்த தக்காளிகள் எல்லாம் மிகமிக பெரிதாக மாறி விட்டது.

இந்த தக்காளியை யாரிடமும் எடுத்துச் சென்றாலும் வாங்கவில்லை ஏனெனில் இந்த தகவல் மிகப்பெரிய அளவில் உள்ளதால் இதனை பார்த்து மக்கள் ஆச்சரியம்தான் பட்டார்கள்.

அதனால் கல்யாணுக்கு ஒன்றும் புரியவில்லை அதனால் அந்த சாமியாரை தேடி அலைந்தார். அதன் பின்பே அந்த சாமியாரை கண்டுபிடித்தார்.

மீண்டும் கல்யாண் அந்த சாமியாரிடம் எனக்கு இன்னொரு வரவேண்டும் இதனை பழையபடியே மாற்றிவிடும் இந்த வரம் மட்டும் போதும் என்று கூறினார். சாமியாரும் அதன்படியே வரத்தை அளித்தார்.

இறுதியாக கல்யாண் தான் செய்த தவறினை அம்மன் மற்றும் பேராசையால் விலையும் விளைவுகளையும் நன்கு புரிந்து கொண்டார்.

அதன்பிறகு சுந்தர் நிலத்தை சுந்தரிடம் கல்யாண் வழங்கி விட்டார்.

அதன்பின்பே கல்யாண் கிராமத்தில் அனைவரிடத்திலும் அன்பாகவும் மற்றும் நல்லவராகவும் நடக்கத் தொடங்கினார்.

நீதி

இந்த கதையின் மூலம் நீங்கள் பேராசையால் விலையும் விளைவுகளை அறிந்திருப்பீர்கள்.

எனவே நீங்களும் உங்கள் வாழ்க்கையில் பேராசை பெறாமல் இருப்பதை வைத்து எப்படி வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்பதனை பழகிக்கொள்ளுங்கள்.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !