ஒரு ஊரில் அம்மு என்ற எட்டு வயது பெண் வாழ்ந்து வந்தாள் இவள் தான் அந்த வீட்டிற்கு ஒரே பிள்ளை மற்றும் செல்லப்பிள்ளை.
அம்முவின் தாய்தந்தையர் மிகவும் அன்புடன் அம்முவை பார்த்து கொண்டு வந்தனர் இவர்கள் எப்ப வெளியே போனாலும் அம்முவுக்கு பரிசுகள் அல்லது உணவு பொருட்களை வாங்கி வந்து கொடுப்பார்கள்.
அம்முவும் மிகவும் அறிவாளி மற்றும் மிகவும் சுட்டித்தனமான குழந்தை. அம்மு ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறாள். இவள் படிப்பிலும் கெட்டி சாலி.
அம்மு தினமும் தன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தாள்.
அப்பொழுது ஒரு நாள் பள்ளிக்குச் சென்றாள் இவளின் பள்ளியறையில் ஜோதி என்ற மாணவியிடம் அனைவரும் கூட்டமாக இருந்தனர். ஜோதி யாரென்றால் அம்முவின் தோழி ஆவாள்.
இதனைக்கண்ட அம்மு அங்கு சென்று பார்த்தாள். ஜோதி புதிதாக ஒரு பேனா வாங்கி உள்ளார் இதை தான் அனைவரும் பார்த்துக்கொண்டிருந்தன.
அம்மா அந்தப் பேனாவை பார்த்தவுடன் மிகவும் பிடித்து போய் விட்டது அதனால் ஜோதிடம் அந்த பேனாவை நான் பார்த்துவிட்டு தருகிறேன் என்று வாங்கினாள்.
அம்மா அந்த பேனாவை பார்த்துவிட்டு மறுபடியும் ஜோதிடம் கொடுத்து விட்டாள்.
அதன் பின்பே வகுப்பறை தொடங்கியது. உணவு வேளைக்கு பின் விளையாட்டு பயிற்சி தொடங்கியது அப்போதே இவர்கள் வரும் வகுப்பறையில் உள்ள அனைவரும் கீழே உள்ள மைதானத்திற்கு சென்று விட்டனர்.
கீழே மைதானத்தில் ஆசிரியர் நீ களைப்பாக உள்ளாய் எனவே நீ மேலே சென்று தண்ணீர் குடித்து வா என்று அம்முவை அனுப்பி வைத்தார்.
அம்மு தனது வகுப்பறைக்கு சென்று தண்ணீரை குடித்து விட்டு அந்தப் பேனாவை பார்ப்போம் என்று நினைத்தாள்.
ஜோதி பேகை திறந்து அந்த பேனாவை கையில் எடுத்து பார்த்தாள் அப்பொழுது அம்மு கூட படிக்கும் சக தோழி வகுப்பறைக்குள் நுழைந்தார். அவள் பெயர் திவ்யா.
ஏன் திவ்யா வகுப்பறைக்கு வந்தால் என்றால் அவளுக்கு உடம்பு சரியில்லாத காரணத்தால் ஆசிரியர் மேலே அனுப்பி வைத்தார்.
திவ்யாவை கண்ட அம்மு என்ன செய்ய வேண்டும் தெரியாமல் உடனடியாக அந்த பேனாவை தனது சட்டைப் பைக்குள் வைத்து கொண்டாள். அப்படியே அவள் மைதானத்திற்கு விளையாட சென்று விட்டாள்.
அதன் பின்பு ஜோதி அம்மு என அனைத்து மாணவர்களும் தனது வகுப்பு அறைக்கு வந்தனர்.
அப்பொழுது ஜோதி தனது பேக்கை திறந்து பார்க்கும் பொழுது பேனாவை காணவில்லை. அதனால் ஜோதி உடனடியாக ஆசிரியையிடம் கூறினாள்.
ஆசிரியர் யார் வகுப்பறையில் யாரும் இல்லாத நேரத்தில் இருந்தது என்று கேட்டால் அதற்கு அனைத்து மாணவர்களும் திவ்யா என்று கூறிவிட்டனர்.
ஆனால் திவ்யாவுக்கும் ஒன்றும் தெரியவில்லை திவ்யா அந்த பேனாவையும் எடுக்கவில்லை இதனை ஆசிரியரிடம் திவ்யாவும் கூறினார் ஆனால் யாரும் நம்பவில்லை.
அதனால் திவ்யா அந்நாள் முதல் அழுதுகொண்டே இருந்தாள். இதனை கண்ட அம்மு என்ன பண்ணவேண்டும் என்பது தெரியாமல் பயந்து கொண்டே இருந்தாள்.
இதனால் அமுக்கும் இரவுவில் தூக்கம் வரவில்லை ஏனெனில் குற்ற உணர்ச்சியால்.
அடுத்த நாள் காலையில் அம்மு பள்ளிக்குச் சென்றால் அப்போது திவ்யா அழுது கொண்டிருப்பதைப் பார்த்தாள்.
அம்மு திவ்யா இடம் உண்மையைக் கூறினால் அதன் பின்பு ஆசிரியர் வந்தவுடன் அம்மு தான் செய்த தவறை ஒப்புக்கொண்டால்.
அதன்பின்பு ஆசிரியரும் அம்முவை மன்னித்து திவ்யா இடம் மன்னிப்பு கேட்டார். அதன்பின்பு ஆசிரியர் அம்முவை பார்த்து பாராட்டினார் ஏனெனில் செய்த தப்பை உண்மையாக ஒத்துக் கொண்டதால்.
அனைத்து சக மாணவர்களும் அம்முவை பார்த்து கை தட்டினர்.
நீதி
எனவே குழந்தைகளை நீங்கள் செய்யும் தவறுகளை ஒப்புக் கொண்டால் நீங்கள் கண்டிப்பாக பாராட்ட பெறுவீர்கள் மற்றும் மன்னிக்கவும் படுவீர்கள்.
எனவே நீங்கள் செய்த தவறுகளை மறைக்காமல் ஒப்புக் கொள்ளுங்கள். இனிமேல் நான் அந்த தவறையும் செய்யாமல் இருப்பது எப்படி என்று கற்றுக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment