Tuesday, May 25, 2021

நம்பிக்கை வளர்க்கும் கதை

 தனது தாத்தாவின் காகம் கபிலன் ஊரைச்சுற்றி கடன் வாங்கி வைத்து உள்ளான் ஏனெனில் தாத்தா உடம்பு சரியில்லாததால் இவனிடமும் பணம் இல்லாத காரணத்தால் தான் இவன் கடன் வாங்கியுள்ளார்.

இவனோ கூலி வேலை செய்பவன் ஒருநாள் தாத்தாவிற்கு மிகவும் உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டது.

அப்பொழுது கபிலன் இடம் தாத்தா நான் உனக்கு பல சுமைகள் மற்றும் கலங்களை தான் தந்துள்ளேன். நான் இறக்கும் தருணத்தில் ஆவது உனக்கு ஒரு சிறந்த மதிப்புள்ள பொருளை தருகிறேன் என்று ஒரு பிள்ளையார் சிலையை கொடுத்தார்.

இந்த சிலையை கபிலன் வாங்கிக் கொண்டான் அதன் பிறகுதான் தான் இந்த சிலையானது 2 லட்சம் வரை மதிப்பு உள்ளது என்று கூறினார்.

இதனை கூறிவிட்டு கபிலன் தாத்தா இறந்து விட்டார். கபிலனுக்கு என்ன செய்வது என்று ஒன்னும் புரியவில்லை.

அதன் பிறகு சில மாதங்களுக்குப் பிறகு இந்தப் பிள்ளையார் சிலையை ஒரு செய்தித்தாளில் விளம்பரமாக வெளியிட்டார்.

இதனை பார்த்த பொருளை வாங்கும் நபர்கள் இவரிடம் நேரில் பார்த்து இந்த பிள்ளையார் சிலையை பார்த்தனர்.

அப்பொழுது முதல் நபர் இந்த சிலை போலியான சில இதற்கு 5 ஆயிரம் மட்டுமே தருவார் என்றார்.

அதன் பிறகு இரண்டாவது நபர் இந்த சிலை போலியான சிலை இதற்கு நான் வெறும் 3 ஆயிரம் மட்டுமே தருவார் என்றார்.

இதனைக் கேட்ட உடன் கபிலனுக்கு இந்த சிலை போலியான சிலையாய் என்று சந்தேகம் இருந்தது மற்றும் தாத்தா சொன்ன வார்த்தைகள் மீது நம்பிக்கை இழந்தார்.

அதன்பிறகு கபினிடம் மூன்றாவது பழைய பொருள் வாங்கும் நபர் வந்தார் அவரும் இந்த சிலையை பார்த்து போலியான சிலைதான் சரி நான் இதற்கு 7000 தருகிறேன் என்றான்.

இதனை கேட்ட கபிலன் சேரி மற்றவர்களெல்லாம் 3000, 5000 ஆயிரம் மட்டுமே தருகிறார்கள் என்றால் இவரோ 7000 தருகிறார் எனவே வெளியேற்றி விடலாம் என்று முடிவு எடுத்தான் கபிலன்.

கபிலன் இந்த பிள்ளையார் சிலையை 7,000 ரூபாய்க்கு மூன்றாவது நபரிடம் விற்றுவிட்டார்.

அதன்பிறகு கபிலனும் தனது வேலைக்கு சென்று தனது வேலைகளை பார்த்து வந்தான்.

அதன் பிறகு ஒரு மாதம் கழித்து கபிலன் ஒரு சந்தைக்குச் சென்றால் அங்கு பழைய பொருள் விற்கும் கடைக்குள் நுழைந்தார்.

அப்பொழுது கபிலன் பல அருமையான பழைய பொருள்களை பார்த்து மகிழ்ந்தார் அதன்பிறகு இவரிடம் இருந்த பிள்ளையார் சிலை போல் இன்னொரு பிள்ளையார் சிலை இருப்பதை கண்டார்.

இந்த சிலையை கண்டவுடன் இந்த சிலை நமது என்று அவனுக்குத் தோன்றியது.

 அதன் பின் யாருக்கும் தெரியாமல் அந்த சிலையை எடுத்து பின்புறம் திருப்பி அதில் உள்ள ஒரு சிறிய அடையாளத்தை பார்த்தான் அப்பொழுது இவன் உறுதி செய்தான் இது நம்முடைய சிலையே என்று.

அதன்பின் அந்த சிலையின் விலையை பார்த்தால் அந்த சிலையின் விலையோ 2 லட்சம் என்று போட்டிருந்தது.

இதனை கண்டவுடன் அவனுக்கு மிகவும் கோபம் வந்தது உடனடியாக கடைக்காரரிடம் சென்று இந்த சிலை 2 லட்சமாக இது என்னிடம் இருந்த சிலை தான் நான் இதை 7,000 ரூபாய்க்கு விற்றேன்.

நீங்கள் ஏன் இதனை இரண்டு லட்சத்திற்கு விற்கிறீர்கள் என்று கபிலன் கோபத்துடன் கடைக்காரரிடம் கேள்வி எழுப்பினார்.

அதன்பின் கடைக்காரர் பொறுமையாக நீ ஏமாற்றிவிட்டாய் இதன் விலை மதிப்பு இரண்டு லட்சம் தான் உன்னிடம் யார் இதன் விலை 6,000 ரூபாய் என்று கூறினார்கள் என்று கேட்டார்.

கபிலன் அதற்கு என்னிடம் மூன்று நபர்கள் வந்தனர் அதில் ஒருவர் 3000 மற்றும் இந்த சில போகும் என்று கூறினார்கள் மற்றொருவர் இந்த சிலை வெறும் 5000 மட்டுமே போதும் என்று கூறினார்கள் இறுதியாக வந்த நபரை 7000 என்று கூறியதால் நான் அவரிடமே விட்டு விட்டேன் என்று கூறினார் கபிலன்

கடைக்காரர் இந்த யுத்தியை கேட்டவுடன் இந்த மூன்று நபரும் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் தான் இவர்கள் உன்னை ஏமாற்றி விட்டார்கள் இது போலியான சிலை என்று உன்னை நம்ப வைத்து உன் நம்பிக்கையை உடைத்து இந்த சிலையை அவர்கள் மிக மிக கம்மி விலையில் வாங்கிக் கொண்டு விட்டனர் என்று கூறினார்.

இதனைக் கேட்ட உடன் அவனுக்கு மிகவும் வருத்தமாக ஆகிவிட்டது.

அதன்பின்தான் கபிலன் தனது தவறை உணர்ந்தான் நம் பொருள் மீது உள்ள நம்பிக்கையை இறுதிவரை வைத்திருந்தால் நாம் கண்டிப்பாக இந்த பொருளை இரண்டு லட்சத்திற்கு விற்று இருக்கலாமே என்று சிந்தித்தான்.

கதையின் விளக்கம் 

இந்தக் கதையில் கபிலனை எப்படி அவன் நம்பிக்கையை உடைத்தார்கள் அதுபோல் உங்கள் வாழ்க்கையிலும் உங்கள் லட்சியத்தில் மீது உள்ள நம்பிக்கையை பலர் உடைப்பார்கள் நீங்கள் உங்கள் மீது இறுதிவரை நம்பிக்கை வைத்தால் கண்டிப்பாக உங்கள் லட்சியத்தில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

எனவே நீங்கள் உங்களை நம்புங்கள் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள் கண்டிப்பாக நீங்கள் கண்ட கனவை நினைவாக்கலாம்.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !