Saturday, July 11, 2020

பிரார்த்தனை – மனிதன் கடவுளை அணுகும் முறை




நீதி – அன்பு

உபநீதி – திட நம்பிக்கை, பக்தி

 

ஏழ்மையான பெண்மணி ஒருத்தி இருந்தாள். அவளுக்கு நான்கு மகன்களும் இரண்டு பெண்களும் இருந்தனர். அவளுடைய கணவன் உடல் நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாய் இருந்தார். அதனால் வீட்டில் வருமானம் ஒன்றுமில்லாமல் இருந்தது. உணவு வகைகளும், காய்கறிகளும் குறைந்துக் கொண்டே வந்தன. சமாளிக்கும் வழி தெரியாமல் கவலைப்பட ஆரம்பித்து விட்டாள். சில பருப்பு வகைகளும் காய்கறிகளும் அருகிலிருந்த மளிகைக் கடையிலிருந்துக் கடனாக வாங்கிக் கொள்ள நினைத்தாள்.

மிகப்  பணிவுடன் வீட்டு நிலவரத்தைக் கடைக்காரனிடம் எடுத்துச் சொன்னார். உதவி செய்து  உணவு வகைகளைக் கொடுப்பார் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் கடைக்காரன் உதவிச் செய்ய மறுத்துவிட்டு வேறு கடைக்குப் போகச் சொன்னார். பரிதாப நிலையைப் பார்த்த ஒரு மனிதன் பொருள்களுக்குப் பணம் கொடுக்க முன் வந்தார்.

கடைக்காரன் விருப்பமில்லாமல் அவளிடம் வாங்க வேண்டியப் பொருள்களை ஒரு காகிதத்தில் எழுதி எடையிடும் எந்திரத்தில் வைக்கச் சொன்னார். காகிதத்தின் எடைக்குச் சமமாகப் பொருள்களை இலவசமாகக் கொடுப்பதாக ஒத்துக்கொண்டார். அவள் கண்களை மூடிக் கொண்டு ஒரு காகிதத்தில் ஏதோ எழுதினாள். குனிந்த தலை நிமிராமல், அந்தக் காகிதத்தைத் தராசின் மேல் வைத்தவுடன் கனமான பாரத்தை வைத்ததைப் போல் தராசின் தட்டு கீழே இறங்கியது.

கடைக்காரனும் உதவிக்கு வந்தவரும் ஆச்சிரியத்துடன் பார்த்தார்கள். உணவுப் பொருள்களைத் தராசின் மற்றொரு பக்கம் வைக்கும் போது சமமாக இல்லை. மேலும் நிறைய பொருள்களை வைத்தும் தராசு நகரவில்லை.

கிடைசியில்,  கடைக்காரன் அந்தக் காகிதத்தை எடுத்தப் பொழுது, மேலும் ஆச்சிரியப்பட்டார். அதில் பொருள்களின் பட்டியல் இல்லை. கடவுளிடம் ஒரு விண்ணப்பம் தான் இருந்தது. அன்புள்ள கடவுள் என் தேவைகளை அறிந்த நீங்கள் எது கொடுத்தாலும் எனக்குச் சம்மதம்.

கடைக்காரன் இந்த அற்புதத்தைப் பார்த்தவுடன் தராசில் இருந்த எல்லாப் பொருட்களையும் பணம் வாங்காமல் கொடுத்து விட்டார். அவள் நன்றி செலுத்திவிட்டுச் சென்றார். பிறகு, இந்தச் சிறிய காகிதத்தின் பாரம் தாங்காமல், தராசு உடைந்ததைக் கண்டு மேலும்  ஆச்சிரியப்பட்டார். கடவுளுக்குத் தான் ஒரு வேண்டுதலின் முக்கியத்துவம் தெரியும்.

நீதி:

பிரார்த்தனை மூலம் ஒருவன் தன உணர்வுகளைக் கடவுளிடம் விண்ணப்பம் செய்கிறான். தனிப்பட்ட அனுபவமும்,  நெருங்கிய தொடர்பும்  ஏற்படுகின்றது. எல்லாச் சமயமும், கடவுள் நம் நன்மைக்காகவே, அன்புடனும் அக்கறையுடனும் பதிலளிக்கிறார். திடநம்பிக்கை உள்ளவர் கடவுளுக்கு மட்டுமே விருப்பப் படுகிறார். பிரார்த்தனை வழிப்பாடு மூலமாகவோ, மனதில் ஓசையற்ற முறையிலோ செய்யலாம். மனமார்ந்த முறையில் வழிப்பட்டால், உடனடியாகக் கடவுள் பதிலளிக்கிறார். அவரை விரும்புவோரிடம் நம்பிக்கையும், விசுவாசமும் உள்ளவராக இருப்பார்.

 


No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !