Saturday, July 11, 2020

புலியும் நரியும்



நீதிநேர்மை

உபநீதி  பொறுப்பு

காட்டில் வாழ்ந்த ஒரு நரி தன் முன்புறக் கால்களை இழந்த நிலையில் இருந்தது. யாருக்கும் எப்படி என்று தெரியவில்லை.வலைப்பொறியிலிருந்துத் தப்பிக்கும் பொழுது கூட  இருந்திருக்கலாம். அந்தக் காட்டின் எல்லைப் பகுதியில் வசித்த ஒரு மனிதன், நரியை அவ்வப்பொழுதுப் பார்த்து ஆச்சிரியப்பட்டார்.உணவுக்கு எப்படித்தான் சமாளிக்கும் என்று வியப்புற்றார். ஒரு நாள் மிகத் தொலைவில் நரி இருந்தப்பொழுது, புலி வந்ததைப் பார்த்து மறைந்து ஒளிந்தார். வேட்டையில் கொலைச் செய்த விலங்கைப் படுத்துக்கொண்டு ஆசைத் தீர உட்கொண்டப் பிறகு, கொஞ்சம் நரிக்கு வைத்து விட்டுச் சென்றது.

தினமும் இந்தப் புலி நரிக்கு ஏதாவது வைத்து விட்டுச் செல்வதை இந்த மனிதன் பார்த்தான். இவ்வளவு எளிமையாக இந்த நரிக்கு ஏதோ ஒரு தெய்வீக சக்தியிடமிருந்து கிடைக்கும் உணவைப்போலவே , தானும் ஏன் ஒரு மூலையில் உட்கார்ந்துக்கொண்டு காத்திருக்கக்கூடாதுஎன்று யோசித்தார்.

பல நாட்கள் நம்பிக்கையுடன் இருந்து வந்தார். ஒன்றும் நடக்கவில்லை.சக்தியும், எடையும் குறைந்து எலும்புக்கூடு போல் தோற்றமளித்தார்.பலமின்றி மயக்கம் வந்தப் பொழுது ஒரு குரல் கேட்டது, தப்பாகப் புரிந்துக் கொண்டிருக்கிறாய், உண்மையைக் கவனி!!புலியின் எடுத்துக்காட்டைப் பின்பற்றியிருக்க வேண்டும், ஊனமுற்ற நரியின் எடுத்துக்காட்டு அல்ல


நீதி:

பொறுப்பு சக்தியைக் கொடுக்கும்.பொறுப்பு இல்லாமை நம்மை பலவீனமாக ஆக்கி விடும்.யார் ஒருவர் தன செயல்களை ஒழுங்காக நடத்தி வருகிறார்களோ, கடவுள் அவர்களுக்கு உதவுகிறார். கஷ்டம் இல்லாமல் சன்மானம் இல்லை.

 


No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !