நீதி – அன்பு
உபநீதி – பக்தி
குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோயில் மிகவும் பிரபலமானது. ஆயிரக்கணக்கான
மக்கள் ஒவ்வொரு நாளும் அங்குச் செல்கின்றனர்.
பக்தர் ஒருவர் தன் கால் வலி குணமாக வேண்டும் என்ற நோக்கத்துடன் நாற்பத்தி ஒன்று நாட்கள் பிரார்த்தனைச் செய்ய தீர்மானித்தார். நடக்க
முடியாததால், அவரை
எல்லாச் சமயங்களிலும் தூக்கிச் செல்ல வேண்டிய நிலமை. பணக்காரராக
இருந்ததால் பணத்திற்குப் பிரச்சனை ஒன்றுமில்லை. ஒவ்வொரு நாளும் காலையில் கோயில் குளத்தில் குளிப்பதற்கு யாராவது தூக்கிச் செல்ல வேண்டும். நாற்பது
நாட்கள் மனமார்ந்த வேண்டுதல் முடிந்து விட்டது. ஆனால்
வலி குறையவில்லை.
அதே சமயத்தில், வேறு
ஒரு ஏழ்மையான கிருஷ்ணப் பக்தர் தன் பெண்ணின் கல்யாணம் முடிய வேண்டும் என்றுப் பிரார்த்தனைச் செய்துக் கொண்டிருந்தார். மணமகன்
கிடைத்து, ஒப்பந்தம்
செய்தார்கள். ஆனால்
கல்யாணம் செய்வதற்கோ, தங்க
ஆபரணங்கள் வாங்குவதற்கோ பணம் இல்லை. இவர்
கனவில் வந்து கடவுள் சொன்ன வார்த்தைகள் என்னவென்றால், “நாளை கோயில் குளத்திற்குச் செல்லும் பொழுது, படியில்
ஒரு சிறிய பை கிடைக்கும். அதை
எடுத்துக் கொண்டு பின் நோக்கிப் பார்க்காமல் ஓடவும்.”
அடுத்த நாள், இரண்டு
பக்தர்களுக்குமே நாற்பத்தி ஒன்றாவது நாள். பணக்கார
பக்தர் ஒரு சிறிய பையில் தங்க நாணயங்களைக் கடவுளுக்கு அர்ப்பணம் செய்வதற்காகக் கொண்டு வந்தார். குளத்தில்
இறங்குவதற்கு முன், படியில்
வைத்து விட்டுச் சென்றார். அந்த
சமயம் ஏழைப் பக்தர் அங்கு வந்தார். பையை
எடுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தார். அதைப்
பார்த்து இந்த பக்தர் தண்ணீரிலிருந்து வெளியே வந்து ஓடியும் பயனில்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தார்.
திடீரென உணர்ந்த விஷயம் என்னவென்றால் நன்றாக ஓட முடிகின்றதே என்று. இது
வரை நடக்க இயலாமல் இருந்தவர், கடவுளின்
அருளால் குணமாகி விட்டார் . மனமார்ந்த
நன்றியைத் தெரிவித்தார். ஏழை
பக்தனுக்குப் பணம் கிடைத்ததால் பெண்ணின் கல்யாணத்தை நன்றாக நடத்த முடிந்தது. இரண்டு
பக்தர்களுக்கும் வேண்டியதை கடவுள் நடத்திக் கொடுத்தார்.
நீதி:
இரண்டு பக்தர்களுக்கும் கடவுள் வேறுபடுத்தாமல் சமமாக பரிசை அளித்தார். பக்தி
தான் முக்கியம், யாரென்பது
முக்கியமில்லை.
No comments:
Post a Comment