நீதி – அன்பு
உபநீதி –
பக்தி
முன்காலத்தில் (1542-1605) அக்பர் என்ற முகலாய சக்ரவர்த்தி ஆண்டு வந்தார். அவரது
தர்பாரில் தான்சேன் என்ற பாடகர் இருந்தார். தான்சேன்
எப்பொழுது பாட்டு இசைத்தாலும், அக்பர்
மிகவும் மகிழ்ச்சி அடைவார். தான்சேன்
ஒரு சிறந்த பாடகர். அவர்
“மேகமாலா” ராகம் பாடினால் ஆகாயத்தில் கரு மேகங்கள் சூழும். “வருண” ராகம் இசைத்தால், மழை
பொழியும், “நாகஸ்வரம்” பாடினால் பாம்புகள் அங்கு ஒன்று சேரும். இத்தகைய
பாடகர் தன் சபையில் இருப்பதில், அக்பர்
மிக பெருமிதம் கொண்டார்.
ஒரு நாள் அக்பர் பிரார்த்தனை செய்யும்போது, வெகு தொலைவிலிருந்து அவருக்கு ஹரிதாஸ் பாடல் கேட்டது. ஹரிதாசர்
ஒரு நடமாடும் பிக்ஷு. ஒரு
சாதாரணமான வாத்தியத்தில் (தம்புரா
போன்றது) அவர்
பாட்டு இசைப்பது கேட்ட அக்பர் பேரானந்தம் அடைந்தார்.
அக்பர் தன தர்பாருக்கு திரும்பியதும் தான்சேனிடம் “உன் இசையைக் காட்டிலும் ஹரிதாசின் இசை என்னை ஏன் மெய் மறக்கச் செய்தது?”
என்று விசாரித்தார். அதற்கு
தான்சேன் சொன்னார், “சுவாமி நான் பாடும் போது தாங்கள் திருமுகத்தைப் பார்த்துக் கொண்டு பாடுகிறேன்”. தாங்கள்
பாராட்டி எனக்கு ஏதேனும் பரிசுகள், நவரத்தினம் அல்லது நிலம் தருவீர்கள் என்ற எதிர் பார்ப்புடன் பாடுகிறேன். ஆனால்
அந்த சாதுவோ எந்த எதிர்பார்ப்பும் இன்றி கடவுளை த்யானித்துப் பாடுகிறார். பொன்,
பொருள் எதுவும் எதிர்பார்க்காமல் அவர் இசை பாடுகிறார். அதுதான்
வித்தியாசம்.
நீதி– ஆழ்ந்தபக்தி
எந்த விதமான எதிர்பார்ப்பும் இன்றி கடவுளை நினைத்துச் செய்யும் செயல்கள் நிறைந்த மகிழ்வை அளிக்கும்.
No comments:
Post a Comment