Saturday, July 11, 2020

மன நிம்மதி



நீதி – நிம்மதி

உபநீதி – அமைதி

ஒரு முறை புத்தர் தனது சிஷ்யர்கள் சிலருடன் பயணம் செய்துக் கொண்டிருந்தார். வழியில் ஒரு ஏரி இருந்தது. புத்தர் ஒரு சிஷ்யனிடம், எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது, ஏரியிலிருந்து பருகக் கொஞ்சம் குடிநீர் கொண்டு வா என்று சொன்னார். அந்த சிஷ்யர் தண்ணீர் இருக்கும் இடத்திற்குச் சென்றார். அப்பொழுது ஒரு மாட்டு வண்டி அந்த ஏரியைக் கடந்துச் சென்றது. அதன் காரணமாகத் தண்ணீர் மிகவும் கலங்கி இருந்தது. சிஷ்யன் அந்த கலங்கியத் தண்ணீரைக் குருவிற்குப் பருக எவ்வாறுக் கொடுப்பது? என்று எண்ணினார். புத்தரிடம் அந்தத் தண்ணீர் மிகவும் கலங்கி இருக்கிறது. குடிப்பதற்குச் சரியாகாது என்று கூறினார். அரை மணி நேரம் கடந்ததும், புத்தர் திரும்பவும் அதே சிஷ்யனை ஏரியிலிருந்துத் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார். சிஷ்யன் திரும்பவும் அங்குச் சென்று பார்த்தப் பொழுது, தண்ணீர்க் கலங்கியேக் காணப்பட்டது. மறுபடியும் விஷயத்தைப் புத்தரிடம் கூறினார்.

புத்தர் மற்றொருமுறை அந்தச் சிஷ்யனை அனுப்பி வைத்தார். இம்முறை சிஷ்யன் சென்றப் பொழுது வண்டல் அடியில் தங்கி, தண்ணீர் சுத்தமாகக் கலங்காமல் இருந்தது. ஆதலால், ஒரு குடத்தில் அந்தத் தண்ணீரை ஏந்தி, புத்தரிடம் கொடுத்தார்.

புத்தர் தண்ணீரைப் பார்த்தார். பிறகு, சிஷ்யனை நோக்கி சொல்லலுற்றார், நீ அந்தத் தண்ணீரைச் சுத்தமாக ஆக்குவதற்கு என்னச் செய்தாய் பார்த்தியா? நீ அமைதியாக இருந்ததும், வண்டல் அடியில் தேங்கித் தெளிவானத் தண்ணீர்க் கிடைத்தது. உன் மனதும் அதுப் போன்றது தான். ஏதேனும் சிந்தனையில் கலங்கி இருந்தால் அமைதியாக இருக்க வேண்டும். தானாகவேத் தெளிந்து விடும். எந்த முயற்சியும் தேவையில்லை.

நீதி:

மன நிம்மதி அடைவதுக் கடினமான காரியம் இல்லை. மிக எளிமையானது, ஏனென்றால்……….

நிம்மதியே நம் ஆத்மாவின் குணம்.

 


No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !