Saturday, July 11, 2020

அன்பே தீர்த்த யாத்திரை

நீதி – அன்பு

உபநீதி – கருணை

ஒரு முறை, ஹஸ்ரத் ஜுனைத் பாக்தாதி என்பவர் மெக்காவிற்குத் தீர்த்த யாத்திரை செல்லப் புறப்பட்டார். வழியில் ஒரு காயமடைந்த நாயைக் கண்டார். நாயின் நான்கு கால்களிலும் காயப்பட்டு, ரத்தம் கசிந்துக் கொண்டிருந்தது. உடனடியாக, நல்ல மனம் கொண்ட அவர், நாயின் காயத்தை அலம்பிச் சுத்தப்படுத்தி மருந்து இடும் எண்ணத்துடன் செயல் பட ஆரம்பித்தார். நாயைத் தன் கைகளில் ஏந்தி, கிணறு இருக்கும் இடம் தேடிச் சென்றார். அவருடைய உடை காயங்களின் ரத்தத்தால் கறையாவதைக் கூட அவர் பொருட் படுத்தவில்லை. அந்தச் சமயத்தில், அவர் ஒரு பாலைவனப் பாதையைக் கடந்து கொண்டிருந்தார். ஒரு சிறு நீரோடையைக் கவனித்தார். ஆனால் அந்த தண்ணீரை எடுக்க ஒரு வாளியோ, கயிறோ எதுவும் தென்படவில்லை. உடனடியாக, அவர் பக்கத்திலிருந்த மரத்தின் இலைகளை முறுக்கி ஒரு வாளி போல் தயார் செய்தார். தன் தலைப் பாகையைக் கயிறுப் போன்று உபயோகித்தார்.

இவ்வாறு தயாரித்த வாளியை கிணற்றில் இறக்க முயலும் போது தலைப்பாகை நீளம் இல்லாததால், தண்ணீரை எட்ட முடியவில்லை. கைவசமாக வேறு ஒரு துணியும் இல்லாததால், அவர் தான் அணிந்திருந்த சட்டையைக் கழற்றித் தலைப்பாகையோடு சேர்த்துக் கட்டினார். அப்படியும் கயிறு நீளம் போதவில்லை.உடனே, அவர் தான் அணிந்திருந்த  மெல்லிய துணியினால் ஆன கால்சராயையும் கழற்றி அந்தக் கயிறுடன் சேர்த்தார். இப்பொழுது கயிறு வாளியுடன் தண்ணீரை எடுக்கப் போதுமானதாக இருந்தது. அவர் கிணற்றிலிருந்து தண்ணீரை எடுத்து நாயின் காயங்களை சுத்தப் படுத்திக், கட்டுப் போட்டு விட்டார். பிறகு, நாயைக் கையில் ஏந்திக்கொண்டு பக்கத்திலிருந்த கிராமத்திற்குச் சிரமப்பட்டு வந்தடைந்தார்.

மசூதியில் இருந்த முல்லாவிடம் தயவு செய்து இந்த நாயை உங்கள் பொறுப்பில் இருந்து பார்த்துக் கொள்ளவும். நான் தீர்த்த யாத்திரை முடிந்தவுடன் அழைத்துச் செல்கிறேன். என்று கெஞ்சினார்..

சந்தேகமே வேண்டாம், சகோதரா! தாங்கள் வரும் வரை நான் கட்டாயம் இந்த நாயைக் கவனித்துக் கொள்கிறேன். என்று கூறினார். அன்று இரவு, ஹஸ்ரத் கனவில் ஒரு ஒளி மயமான ரூபம் கூறலாயிற்று, ஹஸ்ரத், உன் யாத்திரை ஏற்கனவே நிறைவேறி விட்டது. ஏனென்றால், ஓர் உயிரிடம், உன் கஷ்ட சுகங்களைப் பார்க்காமல் கருணைக் காட்டியதால், இது சாத்தியம் ஆயிற்று. இனிமேல், நீ மெக்கா செல்வதும், செல்லாததும் உன் இஷ்டம். கடவுள் பொறுத்தவரை, உன் காரியத்தால் ரொம்பவே திருப்திப் பட்டு விட்டார். அவர் படைத்த உயிர்களிடம் காட்டும் அன்பும், கருணையும், அவருக்கு நூறு தீர்த்த யாத்திரைகள் செய்வதைக் காட்டிலும் மகிழ்ச்சியைத் தரக் கூடியது.








நீதி:

கடவுளின் நீதி மன்றத்தில் அன்பு ஒன்றே விலை மதிப்பில்லாதது. அன்பும், ஆழ்ந்த பக்தியுமே கடவுளுக்கு மிகவும் பிடித்தமானவை ஆகும்.

 


No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !