நீதி – அன்பு
உபநீதி – மன்னிக்கும் மனப்பான்மை
பள்ளி ஆசிரியர் ஒருவர், தன்
வகுப்பறையில் உள்ள குழந்தைகளுடன் ஒரு விளையாட்டை விளையாட தீர்மானித்தார்.
ஆசிரியர் ஒவ்வொரு குழந்தையையும், ஒரு
பிளாஸ்டிக் பையில், சில
உருளைக் கிழங்குகளை அவரவர் வீட்டிலிருந்து எடுத்து வரும்படி கூறினார். கிழங்குகள்
அனைத்திற்கும் பிடிக்காத ஒருவரின் பெயரை இரகசியமாக சூட்டும்படி கூறப்பட்டது. ஆதலால்,
ஒவ்வொரு குழந்தையின் பையிலும் அவன் / அவள்
வெறுத்த நபர்களுக்கு தகுந்தாற் போல கிழங்குகள் இருந்தன. ஆவலுடன்
விளையாட நினைத்த எல்லாக் குழந்தைகளும், தங்களுக்கு
பிடிக்காதவர்களின் பெயர்களை கிழங்குகளுக்கு சூட்டி, பைகளில்
எடுத்து வந்தனர். சிலரின்
பைகளில் இரண்டு கிழங்குகளும், சிலரின்
பைகளில் மூன்றும், மற்றும்
சிலரின் பைகளில் ஐந்து கிழங்குகளும் கூட இருந்தன. ஒரு
வாரத்திற்கு எங்கு சென்றாலும்,
(கழிவறைக்கும் கூட) அந்தப்
பையை தன்னுடன் எடுத்துச் செல்ல வேண்டுமென்று ஆசிரியர் கூறினார். விளையாட்டு
தொடங்கியது.
சில நாட்கள் சென்றதும், அனைத்து
குழந்தைகளும் அந்த அழுகிய கிழங்குகளின் துர்நாற்றம் தாங்காமல், புகார்
கூற ஆரம்பித்தனர். அதிகக்
கிழங்குகளை வைத்திருந்த குழந்தைகளின் பைகள் கனமாக இருந்தன. ஒரு
வாரத்திற்குப் பிறகு, விளையாட்டு
முடிந்ததைக் குறித்து குழந்தைகள் பெரு மூச்சு விட்டனர். அதிசயமான
கிழங்கு விளையாட்டின் விளைவை தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன், குழந்தைகள்
ஆசிரியரை சூழ்ந்து கொண்டனர்.
ஆசிரியர், “கிழங்குகளை சுமந்த இந்த ஒரு வாரம் உங்களுக்கு எப்படி இருந்தது?”
என்று கேட்டார். அனைத்துக்
குழந்தைகளும் ஒரு வாரமாக எங்கு சென்றாலும் கனமான, நாற்றமான
பைகளை சுமந்ததை குறித்து வெறுப்பு உணர்வை வெளிகாட்டி புகார் செய்தனர்.
ஆசிரியர் பொறுமையாக அவர்களின் புகார்களைக் கேட்டு, விளையாட்டின்
குறிக்கோளை நிதானமாக எடுத்துச் சொன்னார்.
ஆசிரியர் கூறியது –
மனதில் ஒருத்தரை வெறுத்தால், இது
மாதிரியான சூழ்நிலை தான் ஏற்படுகின்றது. நீங்கள்
எங்கு சென்றாலும், இந்த
புழுங்கிய நாற்றம், புற்று
நோய் போல் பரவுகின்றது. ஒரு
வாரத்திற்கு அழுகிய கிழங்குகளின் நாற்றத்தையே தாங்க முடியவில்லையென்றால், காலம்
முழுதும் வெறுப்பை மனதில் வைத்துக் கொண்டு எப்படி வாழ்வது???
நீதி:
வெறுப்பை மனதிலிருந்து அகற்றி வாழ்ந்தால், காலம் முழுதும் பாவங்களைச் சுமக்காமல் இருக்கலாம். மற்றவர்களை மன்னிப்பது சரியான மனப்பான்மை! முழுநிறைவான மனிதனை நேசிப்பதைக் காட்டிலும், குறைகள் இருக்கும் மனிதனை முழுமையாக நேசிப்பது தான் உண்மையான அன்பு.
No comments:
Post a Comment