நீதி – அன்பு
உபநீதி –
கருணை/ மன்னிப்பது
தலைசிறந்த விஞ்ஞானி ஐசக் நியூட்டன் அவர்கள், ஒரு
நாளைக்குப் பல மணி நேரம் வேலை செய்தார். இருபது
வருடங்களாக, அறிவு
பூர்வமான ஆராய்ச்சிகளைச் செய்த இவர், பலன்களை
எழுதிக் கொண்டே வந்தார். ஒரு
நாள், உலாவச்
செல்லும் பொழுது, ஆராய்ச்சி
ஏடுகளை மேஜை மேல் வைத்துச் சென்றார். அவருடைய
செல்ல நாய் டைமண்ட் அறையில் படுத்துக் கொண்டிருந்தது. சில
நிமிடங்களுக்குப் பிறகு, மேஜை
மேல் விளையாட்டுத் தனமாகக் குதித்தது.
எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தி, ஆராய்ச்சி
ஏடுகள் மேல் விழுந்து, தீப்பற்றி
எரிந்தது. இருபது
வருடங்களாக கஷ்டப்பட்டு எழுதின ஏடுகள், நிமிடங்களில்
சாம்பலாகி விட்டன. நியூட்டன்
திரும்பி வந்தவுடன் அதிர்ச்சியுற்றார். விலை
மதிப்பற்ற ஏடுகள், சாம்பலாகி
விட்டன. யாராக
இருந்தாலும், நாயை
அடித்தே கொலை செய்திருப்பார். ஆனால்,
நியூட்டன் நாயைத் தடவிக் கொடுத்து, பரிதாபத்துடன்
பார்த்து, ” டைமண்ட், நீ
என்ன செய்திருக்கிறாய் என்று உனக்கே தெரியாது” என்று சொன்னார். சலிப்பே
இல்லாமல், திரும்பவும்
எழுத ஆரம்பித்தார். நாயின்
மேல் எவ்வளவு கருணை!! அவருடைய மனதும், தன்
கூர்மையான அறிவைப் போல், தலைச்
சிறந்து விளங்கியது.
நீதி
உனக்கு தீங்கு செய்தவர்களை மன்னிப்பது மிக கடுமையானது. , மனத்திட்பம்
இருந்தால், அதுவும்
சாத்தியமாகும். எல்லாவற்றையும்
மறந்து நடப்பதற்குப், பெருந்தன்மையும்,
முயற்சியும் வேண்டும். மன்னிப்பதற்கும்,
மறப்பதற்கும் கற்றுக்கொண்டால், எதிரிகள்
யாருமே இருக்க மாட்டார்கள். எல்லோரிடமும்
அன்பாகப் பழகத் தெரிந்துக் கொள்வோம்.
No comments:
Post a Comment