நீதி – உண்மை
உபநீதி – நன்மையில் நம்பிக்கை
ஒரு ஆறு வயதுச் சிறுமி தன் தாயாருடன் “வால்மார்ட்”
கடைக்குச் சென்று கொண்டிருந்தாள். முகத்தில்
ஆங்காங்கே வெயிலினால் ஏற்படும் புள்ளிகள் இருந்தாலும், களங்கமற்றச்
சிவந்த நிறத்துடன் மிக அழகாக இருந்தாள். வெளியில்
மழை பலமாகப் பெய்து கொண்டிருந்தது. நாங்கள்
எல்லோரும் அங்கே கடையின் கூடாரத்தின்கீழ் நின்றிருந்தோம்.
சிலர் பொறுமையுடனும், சிலர்
கோபத்துடனும் இயற்கையைச் சபித்துக் கொண்டிருந்தனர். எனக்கு
மழைஎன்றால் ரொம்பவும் பிடிக்கும். மெய்மறந்து
மழையின் சத்தத்தை அனுபவித்துக் கொண்டு வானம் அழுக்கையும், தூசியையும்
கழுவும் அழகைப் பார்த்துக்கொண்டிருந்தேன். குழந்தைப்
பருவத்தில் குதூகலாமாகக் கவலைகளை மறந்து மழையை அனுபவித்ததை நினைத்துக் கொண்டிருந்தேன்.
மயக்கமூட்டும் சூழ்நிலையில் இருந்த நான், சிறுமியின்
குரலைக் கேட்டு உற்சாகமாகப் பார்த்தேன். சிறுமி
அம்மாவிடம் “நாம் மழையில் ஓடிப் போகலாமா?”
என க்கேட்டுக் கொண்டிருந்தாள். அதற்கு
“வேண்டாம், மழைசற்றுக்
குறைந்தபிறகு போகலாம்” என்று அம்மா கூறினாள். ஒரு
வினாடி ஆலோசித்தபிறகு மறுபடியும் சிறுமி தன் விருப்பத்தை அம்மாவிடம் கூறினாள். அதற்கு
அம்மா “நனைந்து விடுவோம்” என்று பதிலளித்தார்.
சில நிமிடங்களுக்குப் பிறகு சிறுமி அம்மாவை அணைத்துக் கொண்டு “காலையில் வேறுமாதிரியாகச் சொல்லிவிட்டு, தற்பொழுது
வேறுமாதிரியாக நடந்து கொள்கிறாயே” எனக் கூறினாள். அம்மாவுக்கு
அவள் சொல்வது புரியவில்லை. என்னவென்று
கேட்டபோது அவள் சொன்னவார்த்தைகள் உணர்ச்சிபூர்வமாக இருந்தன. அன்று
காலை அவள் அப்பாவிற்கு இருக்கும் கேன்சர் நோயைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது கடவுள் நினைத்தால் எதையும் கடக்க உதவி செய்வார் என்று சொல்லிக்கொண்டு இருந்ததை ஞாபகப் படுத்தினாள்.
கூட்டத்தில் இருந்தவர்கள் எல்லோரும் மெளனமாக இருந்தார்கள். மழைச்சத்தம்
தவிரவேறு ஒன்றும் கேட்கவில்லை. சிறுமியின்
வார்த்தைகள் எல்லோரையும் யோசிக்கத் தூண்டியது. யோசனை செய்தாள். சிறுமியின் சொற்கள் வாழ்கையின் உறுதி மொழியாகத் தென்பட்டன. நம்பிக்கை
வந்து விட்டது.
உடனடியாகச் சிறுமியிடம், “மழையில் ஓடி விளையாடலாம், கடவுள்
காப்பாற்றிச் சுத்தப் படுத்துவார்” எனக் கூறினாள். இருவரும்
மழையில் ஓடினார்கள். நாங்கள்
புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தோம். அவர்களைப்
பார்த்து மற்றவர்களும் உற்சாகமாகத் தன் மோட்டார் வண்டிகளுக்குச் சென்றார்கள். நானும்
ஓடினேன், மழையில்
நனைந்தேன். என்னையும்
சுத்தப்படுத்திக் கொள்வது அவசியமாகத் தெரிந்தது.
நாம் என்ன சொன்னாலும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். சொன்னதைச்
செய்து, குழந்தைகளையும்
நல்லவழியில் நடத்திச் செல்லவேண்டும். நம்
வார்த்தைகளை நாமே நம்பாவிடில், குழந்தைகள்
எப்படி நம்புவார்கள். எந்தக்
கஷ்டம் வந்தாலும், அதில்
இருக்கும் நன்மைகளைப் பார்த்துச் செயல்பட வேண்டும். எல்லாமே
நமக்கு ஒரு போதனை.
No comments:
Post a Comment