நீதி – நன் நடத்தை
உபநீதி – மரியாதை
குருர் பிரம்மா குருர் விஷ்ணு
குருர் தேவோ மஹேஷ்வர:
குருர் சாக்ஷாத் பரப் பிரம்மா
தஸ்மை ஸ்ரீ குரவே நம:
குருர் பிரம்மா – குருவே பிரம்மா – படைப்பவருக்கு சமமாக கருதுகின்றோம்.
குருர் விஷ்ணு – விஷ்ணுவாக மதிப்பிடுகின்றோம். உலகத்தைப் பேணி காப்பவர் அவரே.
குருர் தேவோ மஹேஷ்வர: – அழிப்பவரும் அவர்தான்.
குரு சாக்ஷாத் – உண்மையான குரு அவர் மட்டுமே.
பரப் பிரம்மா – உயர்ந்த பிரம்மன்
தஸ்மை – அவருக்கு மட்டும்
குரவே நமஹ – அந்த குருவை நான் வணங்குகிறேன்.
“குரு” – கு – அஞ்ஞானம் என்ற இருள், நீ – நீக்குபவர்.
ஒரு சமயம், அழகான
வனத்திலே ஒரு ஆசிரமம் இருந்தது. அங்கு
தௌம்யர் என்ற ரிஷி தன் சிஷ்யர்களுடன் வசித்து வந்தார். ஒரு
நாள், உபமன்யு
என்ற ஒரு வாட்டசாட்டமான பையன் அங்கு வந்தான். அவன்
பார்ப்பதற்கு தூய்மையற்றவனாகத் தெரிந்தான். ரிஷி
தௌம்யரை வணங்கி, தன்னை
சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளும்படி அவன் வேண்டினான்.
அந்தக் காலத்தில், குருவே
சிஷ்யர்களை தேர்ந்தெடுப்பார். மாணவர்கள்
குருகுலத்தில் சேர தகுதி இருக்கின்றதா என்று குரு ஆராய்ந்து, அவர்களுக்கு
பயிற்சி மற்றும் கல்வி அளித்து, வாழ்க்கையின்
நற்பண்புகளைக் கற்றுக் கொடுத்து, எல்லோரிடத்திலும்
கடவுளைப் பார்ப்பதற்கும் அறிவு புகட்டுவார்.
தௌம்யர், உபமன்யுவை
குருகுலத்தில் ஏற்றுக் கொள்ள ஒப்புக் கொண்டார். அவனுக்கு
படிப்பில் ஆர்வம் சற்று குறைவாகவே இருந்ததால் மந்தமாக காணப் பட்டான். மற்ற
மாணவர்களோடு ஒப்பிடும் போது, அறிவு கூர்மை குறைவாக இருந்ததால் மிகவும் தாமதமாக கற்றுக் கொண்ட போதிலும், அவனையும்
எல்லோருடனும் சேர்ந்து கற்றுக் கொள்ள குரு சம்மதித்தார். ஆதி
நூல்களின் பொருள் அவனுக்கு புரியவில்லை; மனப்பாடமும்
செய்ய முடியவில்லை. அவன்
பணிவாகவும் இல்லை; நற்குணங்களும்
சற்று குறைவாகவே இருந்தன.
தெளிவான மனப்பான்மையும், திறமையும்
கொண்ட தௌம்ய ரிஷி, உபமன்யுவிடம்
இருந்த குறைபாடுகளைப் பொருட்படுத்தாமல், மற்றவர்களை
விட அவனிடம் அதிக அன்பை செலுத்தினார். நாட்கள்
செல்லச் செல்ல உபமன்யுவும் குருவிடம் அன்பை செலுத்தி, அவருக்காக
எதையும் செய்ய முன் வந்தான். உபமன்யு
அதிகமாக உண்ணுவதால் மந்த புத்தியுடன் இருப்பதை ரிஷி யூகித்தார்.
அதிகமாக உண்ணும் போது, ஆரோக்கிய
குறைபாடும், தூக்கமும்
இயல்பாக வருகின்றன. இத்தகைய
சிஷ்யர்கள் தெளிவாக யோசனை செய்ய முடியாததால், மந்த
புத்தி அல்லது தமோகுணம் ஏற்படுகின்றது. ரிஷி
தன் சீடர்கள் எல்லோரிடமும், உடலை
சரியாக பராமரிப்பதற்கு, அளவாக
உட்கொண்டு, (வாழ்வதற்காக
உண்ண வேண்டுமே தவிர, வாழ்க்கையே
உண்ணுவதற்காக என்று இருக்கக் கூடாது) அந்த
நான்கு அங்குலமுள்ள நாவு என்ற கொடுமையான புலனுணர்வை கட்டுப் படுத்த வேண்டும் என்று விரும்பினார்.
ரிஷி, எப்படியாவது
உபமன்யுவை திருத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், அவனை
ஆசிரமத்தில் உள்ள பசுக்களை பராமரிக்க வேண்டும் என்று கூறினார். உபமன்யுவைக்
காலையில் மாடுகளை மேய்த்து விட்டு, மாலை
வேளை திரும்பி வர அனுப்பி விடுவார். முனிவரின்
மனைவி பகல் உணவை தினமும் கட்டிக் கொடுத்து விடுவார்.
வாட்டசாட்டமாக இருந்த உபமன்யுவிற்கு பசி அதிகமாக இருந்ததால், தினமும்
உணவிற்குப் பிறகு பசுக்களிடமிருந்து பாலைக் கறந்து குடித்து விடுவான். கூடிய
சீக்கிரத்தில், உபமன்யு
இன்னும் பருமனாகி விட்டதை ரிஷி கவனித்தார். ஒவ்வொரு
நாளும், பசுக்களை
பல மைல் தூரம் கூட்டிச் சென்று வந்து, பகல்
உணவும் கட்டுப்பாட்டோடு இருந்த போது, உபமன்யுவின்
எடை குறையாமலிருக்க என்ன காரணம் என்று ரிஷி ஆச்சரியப்பட்டார். இவ்வளவு பருமனாக ஆனதற்கு காரணம் கேட்ட போது, உபமன்யு உண்மையைச் சொல்லி விட்டான். அதற்கு
ரிஷி, பசுக்கள்
அவனுக்கு சொந்தமில்லாத போது எப்படி இந்த காரியத்தை செய்யலாம் என்று கண்டித்தார். மேலும்
குருவின் அனுமதியில்லாமல் அப்படி செய்வது தவறு என்று கூறியதும், குருவின்
உத்தரவை உடனடியாக உபமன்யு ஒப்புக் கொண்டான்.
உபமன்யுவிற்கு இன்னும் பசித்தது. கன்றுக்கள்
பசுக்களிடமிருந்து பாலைக் குடித்த பிறகு, சில
துளிகள் கீழே விழுந்தன; உள்ளங்கையில்
அதை சேகரித்து, உபமன்யு
குடித்தான்.
தௌம்யர் உபமன்யுவை கவனித்துக் கொண்டு வந்தார்; இன்னும்
பருமனாகவே அவன் இருப்பதைக் கண்டு, உண்மையை
மீண்டும் கேட்டார். இச்சமயமும்
அவன் உண்மையைக் கூறி விட்டான். அதற்கு
தௌம்யர், பசுவின்
வாயிலிருந்து கீழே விழும் பால் சுத்தமாக இருக்காது என்றும், அந்தப்
பாலை குடிப்பதால் ஆரோக்கியத்திற்கு கெடுதல் என்றும் கூறிய பிறகு, உபமன்யு
இனிமேல் அந்தக் காரியத்தை நிறுத்தி விடுவதாக ரிஷியிடம் உறுதி மொழி கொடுத்தான்.
ஆனால், அவனுக்கு
பசியை கட்டுப்படுத்த முடியவில்லை. மதியம்
ஒரு நாள், மரத்திலிருந்து
சில பழங்களை பறித்துத் தின்றான்; விஷப்
பழங்களாக இருந்ததால் குருடாகி விட்டான். ஆசிரமத்திற்கு
திரும்பி வரும் வழியில், பயந்து
போய், தடுமாறி
அவன் ஒரு கிணற்றில் விழுந்தான்.
மாலை நேரம், உபமன்யுவின்
நிலைமையால், மாடுகள்
தாங்களாகவே வீடு திரும்பி வந்தன. உபமன்யுவைத்
தேடிக் கொண்டு ரிஷி சென்றார். அவர்
கிணற்றிலிருந்து அவனை வெளியில் கொண்டு வந்து, இந்த இக்கட்டான நிலைமையில் இருந்த உபமன்யுவிற்கு ஒரு மந்திரத்தை சொல்லிக் கொடுத்தார். இதை
சொல்வதின் பயன் என்னவென்றால் –
இரட்டையர்களான தேவலோக வேதியர்களை (அஷ்வினி
குமாரர்கள்) வரவழைத்து,
உபமன்யுவின் கண் பார்வையை அவனுக்கு மறுபடியும் கிடைக்குமாறு செய்தனர்.
தௌம்யர் மிகவும் பொறுமையாக சில முக்கியமான விஷயங்களை உபமன்யுவிற்கு தெளிவுப் படுத்தினார். உபமன்யு
உணவிற்கு ஆசைப்பட்டதால் விஷப் பழங்களை சாப்பிட்டு, அதனால்
குருடாகி, கிணற்றில்
விழுந்தான். ரிஷி
தக்க சமயத்தில் அவனைக் காப்பாற்றாமல் இருந்திருந்தால், அவன்
இறந்திருக்கலாம். இந்தத்
தவறை உணர்ந்த உபமன்யு, அதிகம்
சாப்பிடுவதை விட்டு விட்டு, ஆரோக்கியமாகத்
திகழ்ந்து, புத்திசாலித்தனத்துடனும், திறமையுடனும் செயற்பட்டான்.
ரிஷி அவன் மனதில் அன்பை உருவாக்கி, பிரம்மாவாகச்
செயற்பட்டார்.
கிணற்றிலிருந்து அவனைக் காப்பாற்றி விஷ்ணுவாகச் செயற்பட்டார்.
உபமன்யுவிடம் இருந்த எல்லாக் கெட்ட குணங்களையும் அகற்றி, வெற்றிக்குப்
பாதையை வகுத்து மகேஷ்வரனாக செயற்பட்டார்.
நீதி:
குரு என்பவர் நல்ல குணங்களைப் புகட்டி, சரியானப்
பாதையைக் காண்பிக்கிறார். அவருக்கு
எப்போதும் மரியாதையை செலுத்தி, நன்றி
உணர்வோடு இருக்க வேண்டும்.
சாஸ்திர சம்பிரதாயங்கள் மற்றும் புனிதமான நூல்களை சரியாக புரிந்து கொள்வது மிகவும் அவசியம். மாணவர்களுக்கு
நற்பண்புகள், சடங்கு
முறைகள் மற்றும் கலாச்சாரத்தைப் பற்றி கற்றுக் கொடுக்கும் போது, குருவும்
அதை நடைமுறையில் பின்பற்ற வேண்டும். கடவுளை
பிரார்த்திக்கும் போது, ஒவ்வொருவரின்
ஆசைகளை மட்டுமே அவரிடம் கேட்காமல், நன்றி
உணர்வையும் தெரிவிக்க வேண்டும். ஒருமுகச்
சிந்தனை மற்றும் மன நிம்மதியை வளர்த்துக் கொள்ள தியானத்தை அவசியம் கடைபிடிக்க வேண்டும். விளக்கு
ஏற்றுவது போன்ற சாஸ்திர சம்பிரதாயங்களின் முக்கியத்துவத்தை ஆசிரியர் மாணவர்களிடம் தெளிவாக விவரிக்க வேண்டும் –
விளக்கு ஏற்றுவதால், ஒளியின்
மூலம் இருளை அகற்றி, நல்ல
எண்ணங்கள் மூலம் தீய எண்ணங்களை அகற்றுவது ஆகும். பயம்
ஒன்றுமில்லாமல் கடவுளை நேசிக்க அவர்களுக்கு ஆசிரியர் கற்றுக் கொடுக்க வேண்டும்.
குரு இவ்வகையான நற்பண்புகளை மாணவர்களின் மனதில் புகுத்தும் பொழுது, பல
வருடங்களுக்குப் பிறகு அவர்கள் தெய்வீகப் பாதையை கடைப்பிடிப்பதற்கு தயாராக இருக்கும் போது, இந்த
பயிற்சி உதவும். அதனால்,
குரு என்பவர் ஒரு குழந்தையை சரியான பாதையில் வழி நடத்திச் செல்ல பெரிய பங்கை வகுக்கிறார்.
No comments:
Post a Comment