நீதி – நன் நடத்தை / தர்மம்
உபநீதி – தக்க சமயத்தில் உதவி
ஓர் ஊரில் அதிக செல்வாக்குள்ள மனிதன் ஒருவன் இருந்தான். ஆனால்
அனைத்து கிராமவாசிகளுக்கும் அவன் கஞ்சனாக இருந்ததனால், அவனைப்
பிடிக்காமல் போயிற்று.
அவர்களின் மனப்போக்கைக் கண்டு வேதனையுற்றான். ஒரு
நாள் ஊராரிடம் “நீங்கள் எல்லோரும் என்னைக் கண்டு பொறாமைப் படுகிறீர்கள். பணத்தின்
மேல் இருக்கும் பற்று உங்களுக்குப் புரியவில்லை, கடவுளுக்குத்
தான் தெரியும். என்னைப்
பிடிக்கவில்லை என்பது நன்றாக புரிகின்றது. நான்
இறக்கும் பொழுது அனைத்துச் செல்வத்தையும் தான தர்மத்திற்கே உயிலில் எழுதி வைப்பேன். பிறகு
எல்லோரும் சந்தோஷப் படுவீர்கள்.”
எனக் கூறினான்
பிறகும் ஊரார் அவனை ஏளனப் படுத்தினர். வேதனையோடு
பணக்காரர் சொன்ன வார்த்தைகள், “உங்களுக்கு என்ன ஆகிற்று? சில
வருடங்கள் கூட பொறுமையாக இருக்க முடியாதா?”
ஆனால் கிராமவாசிகள் நம்பவில்லை. அதற்குப்
பணக்காரன் “நான் என்ன சாசுவதமா? எல்லோரையும்
போல் எனக்கும் மரணம் ஏற்படும். பிறகு
என் பணமெல்லாம் மற்றவர்க்குப் பயன்படும்” எனக் கூறினான். மக்களின்
மனோபாவத்தைப் பார்த்துத் திகைப்புற்றான்.
மறுநாள் பணக்காரன் வெளியே உலாவச் சென்றான். பலத்த
மழை பெய்ந்ததனால், ஒரு
மரத்தடியே தஞ்சம் புகுந்தான். அங்கு
ஒரு பசுவும், பன்றியும்
பேசுவதை ஒட்டுக் கேட்டான்.
பன்றி பசுவைப் பார்த்து, “எல்லோரும் உன்னைப் பாராட்டுகின்றார்கள். ஆனால்
என்னை யாருக்குமே பிடிப்பதில்லை. நான்
இறந்த பிறகு எல்லோருக்கும் இறைச்சி கொடுக்கின்றேன். என்
முட்களையும், முடியினையையும்
கூட உபயோகப்படுத்துகின்றனர். நான்
இவ்வளவு கொடுக்கும் போது நீ வெறும் பால் மட்டுமே தருகின்றாய். பிறகு
ஏன் என்னைவிட உன்னைப் புகழ்கிறார்கள்?”
என்று கேட்டது.
அதற்கு பசு, “நான் உயிருடன் இருக்கும் போது பால் தருகின்றேன். ஆனால்
நீ இறந்தப் பிறகு தான் எல்லாம் கொடுக்கின்றாய். மக்கள்
எதிர்காலத்தை நம்புவதில்லை. நிகழ்காலத்தை
பற்றித் தான் கவலைப் படுகின்றார்கள். நீ
உயிரோடு இருக்கும் பொழுது கொடுத்தால் புகழ் கிடைக்கும்” என்று பதிலளித்தது. அதைக்
கேட்ட பிறகு, பணக்காரன்
தாராள மனப்பான்மை கொண்டு ஏழைகளுக்குத் தான தர்மம் செய்ய ஆரம்பித்தான்.
நீதி
சிறு உதவி ஆனாலும் தக்கச் சமயத்தில் செய்ய வேண்டும். அதை
கட்டாயமாக அங்கீகரிப்பார்கள்.
No comments:
Post a Comment