Saturday, July 11, 2020

நெப்போலியனின் மனோதிடம்


நீதிநேர்மை

உபநீதி மனோதிடம்

 நெப்போலியன் தனது சிறுவயதில் ராணுவ விடுதியில் தங்கி படித்துக் கொண்டு இருந்தான். அப்போது அறையில் அவன் கூடத் தங்கியிருந்த மற்றொரு மாணவன் தன்னுடைய அழகான பை ஒன்று காணாமல் போய்விட்டதாக மேலதிகாரியிடம் புகார் கூறினான். “யார் மேலாவது உனக்குச் சந்தேகம் உண்டா?” என்றார் மேலதிகாரி. நெப்போலியன் மேல்தான் எனக்குச் சந்தேகம்” என்றான் அந்த சக மாணவன். உடனே அந்த அதிகாரி நெப்போலியனைத் தன்னோடு அறைக்கு அழைத்தார். நெப்போலியன் மெதுவாக மேலதிகாரியின் அறைக்குள் நுழைந்தான்.

மேலதிகாரி நெப்போலியனை விசாரிக்காமலேயே தனது கையில் பிரம்பை எடுத்தார். சரம் வாரியாக அடித்துத் தள்ளினார். நெப்போலியனை “ஏன் திருடினாய்? இனி இது மாதிரி தவறு செய்வாயா?” என்று கேட்டு நல்ல உதை! அவ்வளவு அடியையும் வாங்கிக்கொண்டு அமைதியாக இருந்தான் நெப்போலியன். அதற்கு பிறகு கொடுத்த தண்டனையையும் வாங்கிக்கொண்டு அமைதியாக இருந்தான். சிறிது நாட்கள் கழித்து புகார் கொடுத்த அந்த மாணவன் மேலதிகாரியிடம் ஓடிவந்தான். “ஐயா… என்னோட அந்தப் பையை திருடியது நெப்போலியன் அல்ல! வேறொரு மாணவன். இப்பொழுதுதான் உண்மை தெரிந்தது. தெரியாமல் நெப்போலியன் மேல் புகார் கொடுத்துவிட்டேன். மன்னித்துவிடுங்கள்!” என்றான். ந் அதிகாரிக்கு மிகவும் ஆச்சரியம். உடனே நெப்போலியனை அழைத்தார்.

உனக்கு என்ன பைத்தியமா? நீ என்ன முட்டாளா? அன்று அந்த அடி அடித்தேன் அப்பொழுதே உண்மையைச் சொல்ல வேண்டியதுதானே என்றார். நெப்போலியன் அமைதியாகச் சொன்னான்ஐயா! நீங்கள் என்னை அடிப்பதற்கு முன்பாகக் கேட்டு இருந்தால் நான் சொல்லியிருப்பேன். அடித்துக்கொண்டே கேட்டீர்கள். அப்பொழுது நான் இல்லை என்று சொன்னாலும் அடிக்குப் பயந்து நான் அப்படிச் சொல்வதாக நீங்கள் நினைப்பீர்கள். நான் பயந்ததாக யாரும் நினைக்கக் கூடாது! அதை விட அடிவாங்குவது எனக்கு ஆட்சேபனை இல்லை!.

சிறுவயதில் இருந்த நெப்போலியனின் அந்த பயமற்ற தைரியம்தான் பின்னாளில் மாபெரும் வெற்றி வீரனாகக் காரணமானது.

நீதி:

கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மேல்.

 


No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !