Friday, July 10, 2020

நாம் பார்க்கும் கண்ணோட்டம்

நீதிநேர்மை

உபநீதிஆத்ம விசாரணை

ஒரு வீட்டுக்கு புதிதாக ஒரு இளம் தம்பதி குடி வந்தனர்மறு நாள் காலை, டிபன் சாப்பிட்டுக் கொண்டே அந்தப் பெண் அடுத்த வீட்டைப் பார்த்தார்பக்கத்து வீட்டு பெண்மணி துணிகளை துவைத்து, வெளியில் உள்ள  கம்பியில் காயப் போட்டு கொண்டிருந்தார். “அந்த துணிகள் சுத்தமாக இல்லை.   அவளுக்கு துணிகளைத் துவைக்கும் முறை சரியாக தெரியவில்லை. நன்கு  துவைக்கும் சோப்பு தேவைப்படுகிறது. ” என்று புதுப் பெண் தன்  கணவரிடம்  சொன்னார்.  அவளுடைய கணவர், எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே மெளனமாக இருந்தார்.  ஒவ்வொரு தடவையும் அடுத்த வீட்டைப் பார்த்து இளம் பெண் இவ்வாறே கூறி வந்தார்.

இப்படியே ஒரு மாதம் சென்றது.  அடுத்த நாள் காலை, வெளியில் துணிகள் சுத்தமாக துவைத்து உலர்த்தியதைப் பார்த்த இளம் பெண் ஆச்சரியப்பட்டாள்.  தன் கணவரிடம், “பார்த்தீர்களா? அடுத்த வீட்டுப் பெண் துணிகளைத் துவைக்கக் கற்றுக் கொண்டு விடடாள் போல் தோன்றுகிறது. யார் தான் அவளுக்குக் கற்றுக் கொடுத்திருப்பார்?”  என கேட்டாள்.  அதற்கு அவள் கணவர், “நான் இன்று காலை எழுந்தவுடன், நம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை சுத்தம் செய்து வைத்தேன். ” என்று கூறினார்.

வாழ்க்கையும் இத்தகையது தான்.  நாம் பிறரை நோக்கும் பார்வை, நாம் அணியும் கண்ணாடியைப்  பொறுத்து இருக்கிறது.

நீதி

பிறரை ஒரு போதும் எடை போடாதே.

ஒருவர் அணிந்திருக்கும் கண்ணாடியைப் பொறுத்து அவர் பார்வை இருக்கும்.  அன்னாரின் எண்ணங்களே வார்த்தைகளாக வெளி வரும்.

பிறரை எடைப் போட்டு  குறை  கூறும் முன்,  நம்மைப் பற்றி நாம்  எண்ண  வேண்டும்.  நம் குறைகளை உணர வேண்டும்.

நம் கண்ணோட்டம்  நல்லதாக இருக்க வேண்டும்.   மனது தூய்மையாக இருக்க வேண்டும்.

 


No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !