Friday, March 15, 2019

குருவியும், இராமனும்


சரோனிவனம் என்ற ஊரில் ஒர் ஆலமரம் இருந்தது. அந்த மரத்தில் குருவிகளும், காக்கைகளும், குரங்குகளும், பாம்புகளும் வசித்து வந்தது. அந்த மரத்தினருகில் இராமன் என்பவன் தனது குடும்பத்துடன் வசித்து வந்தான். ஒரு நாள் அந்தப் பறவைகள், விலங்குகளின் தொல்லை மற்றும் இரைச்சல் பிடிக்காமல் போகவே, மரத்திற்கு தீ வைத்து விட்டான்.

எல்லா பறவைகளும், விலங்களும் தங்களது கூட்டை அல்லது இடத்தை விட்டு வெளியேறி விட்டன. ஆனால் ஒரு குருவி மட்டும் தீச் சுவாலையைப் பார்த்து ஏதுமறியாது திகைத்து,யோசித்தது. பிறகு அந்தக் குருவி மரத்திலிருந்து சற்று தொலைவிலருந்த ஒரு குளத்திலிருந்து தனது அலகால் சிறிதளவு நீரை எடுத்து வந்து, அந்தத் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த மரத்தின் மீது ஊற்றியது. ஆனாலும் தீயின் சீற்றம் குறைந்தபாடில்லை. இருந்தாலும் குருவி தனது செயலை செய்து கொண்டிருந்தது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த கடவுள் மிகவும் இரக்கப்பட்டு, அப்பொழுது பெரிய மழையைப் பெய்ய வைத்தார்.



இந்த கதையில் இருந்து விடாமுயற்சி எவ்வாறுபயனளிக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று ஆசிரியர், மாணவ மாணவிகளுக்கு கதையின் நீதியை விளக்கி விட்டு அவர்களுடைய கருத்துக்களை கூறுமாறு கூறினார். அப்போது
மாணவர்கள் ஒவ்வொருவராக எழுந்து தமது கருத்தைச் சொன்னார்கள்...

தனது முகத்தின் மீது விழுந்த சுருண்ட முடியை ஒதுக்கியவாறு எழுந்த அப்துல் கலாம், `இதைப்போன்ற சம்பவங்கள் 2020ல் நிகழக்கூடாது. குருவியின் செயல் போற்றத்தக்கது, இதை எல்லோரும் பின்பற்ற வேண்டும்என்றார்.

கருணாநிதி: கடவுள் அருளால் மழை வரவில்லை. ஏனெனில், அறிவியல் முறைப்படியும் மழை பெய்ய வைக்கலாம். அந்த குருவியின் செயல் திராவிடப் பாரம்பரியத்துக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

"பராசக்திசிவாஜி தனது மிடுக்கென்ற குரலில் கடவுளாம் கடவுள். அவன் எங்கு இருக்கிறான் என்றார்.

கிருஷ்ணன்: எது நடந்தததோ அது நன்றாக நடந்தது, எது நடக்கிறதோ அது நன்றாக நடக்கிறது, எது நடக்குமோ அது நன்றாக நடக்கும்.




பின்லேடன்: (தனது நீண்ட தாடியைக் தடவிக்கொண்டு) எனக்கும் இராமனுக்கும் இப்போதைக்கு சம்பந்தமில்லை. குருவியின் செய்கை தவறு என்று ஆணித்தரமாக கூறுகிறேன் என்றார்.

அண்ணா: எத்தகைய நிகழ்வுகள் நடந்தாலும் நாம் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டும். மனிதனின் சகிப்புத்தன்மை வளரவேண்டும். குருவிக்கு எனது பரிசுகள் காத்திருக்திறது.

ஜெயலலிதா: சி.பி. விசாரணை பண்ண வேண்டும். குருவியைத் தவிர மற்றவர்கள் பொடாவில் கைது செய்யப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

திருமாவளவன்: இராம்தாஸின் தொண்டர்களால் இன்னொரு மரம் சேதமடைந்து விட்டது.

சுப்ரமணியசுவாமி: எல்.டி.டி.இவுடன் தொடர்புடைய இராமனின் இந்தச் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இண்டர்நெஷனல் கோர்ட்டில் வழக்குப் போடுவேன்.

சங்கராச்சாரியார்: குருவி இராமபிரானின் மறு அவதாரம் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

ஐன்ஸ்டீன்: தீப்பிடித்த உடனே மழை பெய்த காரணத்தால் மின்னலால் மரம் தீப்பிடித்து இருக்கலாம் என்பதையும் ஒதுக்கிவிட முடியாது. குருவியின் செயல் RELATIVE to other birds and animals is simply great.

பாரதியார்: இராமன் போன்றவர்களின் தீய நோக்கங்களிலிருந்து விடுதலை பெறவேண்டும்.

பெரியார்: தீவைத்தவனின் மனோநிலையைக் கருத்தில் கொள்ளவேண்டும் என்று சொல்லும் அதே வேளையில் குருவியின் செயல் பாராட்டத்தக்கது. கடவுள் முன்னதாகவே மழையைப் பெய்ய வைத்திருக்கலாம் அல்லது இராம்னுக்கு முன்னமே
நல்ல புத்தியைக் கொடுத்திருக்கலாம். கடவுள் சுரண்டல்காரர்களால் படைக்கப்பட்டவன். பகுத்தறிவு என்ற கண்ணாடியில் நாம் பார்த்துப் பழகவேண்டும்.



கமலகாசன்: குருவியினால் தான் இராமனுக்கு அதில் தொல்லை ஏற்பட்டு இருக்கலாமென என்று எண்ணத்தோன்றுகிறது. இராமனுக்கும் குருவிக்கும் இடையிலான உறவினை ஆராய்வது சாலச்சிறந்ததாகும். கடவுளுக்கும், ஏற்பட்ட சம்பவத்துக்கும் முடிச்சுப்போடுவது தவறாகும்.

சோனியாகாந்தி: எந்த மட்டத்திலும் வகுப்புவாதம் தலைதூக்கக்கூடாது. வாஜ்பாயைப் போன்று இராமனும் ஒரு ஏமாற்றுப் பேர்வழி.

ரஜினிகாந்த்: பாபா தான் தமிழகத்தை காப்பாற்றவேண்டும். நிறைய கூடுகள் கட்டி மரங்களை இணைக்க ஒரு இயக்கம்
ஆரம்பிக்கலாமென எண்ணியுள்ளேன். நான் ஒரு ரூபாய் கொடுக்க தயாரகவுள்ளேன்.

மேனகா காந்தி: அரசாங்கம் இதற்குப் பிரயாச்சித்தமாக நிறைய மரங்களில் கூடுகள் கட்ட ஏற்பாடு செய்யவேண்டும். இல்லையேல் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் அல்லது மந்திரிபையில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

இராமதாஸ்: இராமன் போன்றவர்களால் தீ வைப்பதைத் தடுக்கவே நாங்கள் மரங்களை வெட்டினோம்.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !