Friday, March 15, 2019

இப்போதும் இருக்கும் கதை

”ஒரு பெண்ணின் மொத்த வாழ்க்கையும் பிரியங்களினால் ஆன சரித்திரம்
– வாஷிங்டன் இர்விங்க்”


ரமணி வைஷ்ணவியை சூர்யா ஹாஸ்பிடல் இறக்கிவிட்டான்.

”நீங்க வரலைய ரமண்?” 






”அர்ஜெண்ட் மீட்டிங்மா. கரெக்ட் டைமுக்கு போகாட்டி எம்.டி என்னைக் கொன்னுடுவாரு. ’அனு எப்படி இருக்கான்னு போன் பண்ணு நான் ஈவ்னிங் வரேன், அந்த ரெசிக்னேஷனை போன உடனே பர்ஸ்ட் திங்கா குடுத்துடு என்ன? இவள் தலையசைக்க அவன் கிளம்பிச் செல்வதற்கும் சந்தியா ஒரு ஆட்டோவில் வந்து இறங்குவதற்கும் சரியாக இருந்தது.

நைட் முழுக்க தூஙகலை சந்தியா....அனு இப்ப எந்த ரூம்ல இருக்கா?

”மெளலிக்கு போன் பண்ணியிருக்கேன். அதோ வரார் பார்”

அருகே வந்த மெளலி, ”வாங்க வைஷ்ணவி, சந்தியா.

”என்னாச்சுங்க” என்றாள் சந்தியா

நத்திங் டூ வொர்ரி, உங்க ப்ரெண்ட் இப்ப நல்லாயிருக்கா. ஆனா நேத்து ரொம்ப பயமுறுத்திட்டா..” என்றான்.

காரிடரில் நடந்தபடி சன்னமான குரலில் தொடர்ந்தான், ”துணியெல்லாம் அடுக்கி வைச்சிட்டிருந்தா திடீர்னு என்னைக் கூப்பிட்டா பகக்த்துல வரதுக்குள்ளே அப்படியே மயங்கி சரிஞ்சிட்டா...எனக்கு ஒரே டென்ஷனாயிருச்சு. உடனே ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டேன்.”

”அனுவுக்கு என்ன ப்ராப்ளம் ஏன் மயக்கமானா?”

”ஸ்பாண்டிலைட்டிஸ்னு சொல்றாங்க. இன்னும் சில டெஸ்ட் ரிப்போர்ட்ஸ் வர வேண்டியிருக்கு. வந்ததும்தான் தெளிவா சொல்ல முடியும்ங்கறாங்க....ஏற்கனவே அனுவுக்கு தைராய்ட் பிரச்சனைகள் இருக்கு, இப்ப இது வேற பாவம் முதல்ல கொஞ்சம் அப்செட் ஆயிட்டா, இப்ப பரவால்லை!” என்றான் மெளலி.

அவர்களை அனுவிடம் அழைத்துச் சென்றான்.

அனு கண்களை மூடியிருந்தாள். வைஷ்ணவி அவள் தோளை மெல்ல தொட்டாள். கண் விழித்த அனு,

”ஹேய் குட் மார்னிங் எப்ப வந்தீங்க?” என்றாள் இருவரையும் பார்த்து

”நீ இப்படி ஹாஸ்பிடல்ல இருக்க எப்படி குட் மார்னிங்” என்றாள் சந்தியா.

”குழந்தைங்க எங்கடி?”

”விஷ்ணுவும் ஆரபியும் நாத்தனார் ஆத்துல இருக்கா. எதுக்கு ஹாஸ்பிடலுக்கு எல்லாம்னு நான் தான் வரவேண்டாம்னு சொல்லிட்டேன்” என்றாள் அனு





”இப்ப எப்படி இருக்கு அனு?” என்று கேட்டாள் வைஷ்ணவி.

”கொஞ்ச நாளாவே அடிக்கடி தலைசுத்திச்சு, விஷ்ணுவை தூக்கக் கூட முடியாது, மயக்கமா வர மாதிரி இருக்கும். கொஞ்ச நாழி அப்படியே உக்காந்து சமாளிச்சிடுவேன். நேத்து நைட் துணி மடிச்சு வைச்சிண்டிருந்தேன். ரொம்ப டயர்டா இருந்துச்சு. திடீர்னு மயக்கம் போட்டு விழுந்ததும் இவர் பதறி அடிச்சு ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டார். அப்பறம் தான் தெரிஞ்சுது எனக்கு எலும்புத் தேய்வு ஆரம்ப நிலைல இருக்குன்னு என்னன்னவோ சொல்றாடி....எனக்கு பாதி புரியலைல் இனிமே தான் இவர்கிட்ட தெளிவா கேட்டுக்கணும்.”

”என்னடி இந்த வயசுல இப்படி எல்லாம் சொல்றே? எதனால இப்படி வந்துச்சு?” என்றாள் சந்தியா.

”நோய்க்கு வயசெல்லாம் கிடையாதுடி. ஏன் எதனால வந்துச்சின்னும் எனக்குத் தெரியலை. வந்தாச்சு. அதை ஃபேஸ் பண்ண வேண்டியதுதான்”

”பரவால்லைடி தைரியமா இருக்கே....சீக்கிரம் குணம் ஆயிடும். கவலைப்படாதே!” என்ற சந்தியாவை புன்னகையுடன் பார்த்து கண்சிமிட்டினாள் அனு.

”முப்பது வயசுக்கு மேல நாம எல்லாம் கொஞ்சம் கேர்புல்லா இருக்க ஆரம்பிக்கணும் சந்தியா...நம்ம பிரச்சனையே நம்ம ஹெல்த் விஷயத்துல நாம ரொம்ப அலட்சியமா இருந்திடறோம். என் குழந்தைகளுக்கு ஆரஞ்ச் பழம் உரிச்சு தரதுக்கு எனக்கு சளைக்காது ஆனா எனக்கு அதையே உரிச்சு சாப்பிடணும்னா எங்கேர்ந்து சோம்பேறித்தனம் வருமோ...அதுக்கெல்லாம் தான் சேர்த்து வைச்சு இப்ப அனுபவிக்கறேன்....ஆனா நீங்க எல்லாம் அப்படி இருக்காதீங்கடி. உடனே போய் ஒரு மாஸ்டர் ஹெல்த் செக்கப் பண்ணிடுங்க” .என்றாள்.

“என்னடி மாமி அட்வைஸ் எல்லாம் பலமா இருக்கு? சரி உனக்காக நாங்க நிச்சயம் செக் பண்ணிக்கறோம்” என்றாள் சந்தியா.

”இன்னும் எத்தனை நாள் ஹாஸ்பிடல்ல இருக்கணும் அனு?” என்று கேட்டாள் வைஷ்ணவி

”தெரியலைடி. மே பி நாளைக்கே கூட டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க..” என்று சலிப்பாக சொன்னாள் அனு.

”சரிடி உடம்பை பாத்துக்க. நான் ஈவ்னிங் ரமணாவோட வரேன். டேக் கேர்டி.”என்று கிளம்பினாள் வைஷ்ணவி.

”ம்...ஆமா நீ போகலையா” என்று சந்தியாவைப் பார்த்து கேட்க,

”நான் லீவ் போட்டிருக்கேண்டி. உன்கூடவே இருக்கேன்” என்றாள் சந்தியா.

வைஷு அவரசமாக கிளம்பிச் சென்றாள். இன்று ராஜினாமா கடிதத்தை குடுத்துவிட வேண்டியதுதான். ரமணன் விரும்பாத ஒன்று இந்த வேலை. அந்த வேலையில் கிடைத்திருந்த அங்கீகாரத்தையும் சுதந்திரத்தையும் இன்றுடன் இழக்கு வேண்டுமே என நினைக்கையில் வைஷ்ணவிக்கு வருத்தமாக இருந்தது.

சிக்னல் அருகே ஆட்டோ பிடிக்க காத்திருந்தாள். அப்போது அவளைக் கடந்து ஒரு பல்ஸார் பைக் சென்றது. தன்னையும் அறியாமல் ‘ஜீவா’ என்று கத்திவிட்டாள். ஆனால் அவனுக்கு அது காதில் விழவில்லை. வேகமாகச் சென்றுவிட்டான். ஒரு நொடி செயலற்று என்ன செய்வதென்றே தெரியாமல் அங்கேயே பைத்தியம் போல நின்றுகொண்டிருந்தாள். எப்படி இங்கே வந்தான். கேரளாவில் செட்டில் ஆகப் போவதாக கடைசியில் அவன் சொன்னது நினைவுத் திரையில் ஓடியது. இதே ஊரில் இதே தெருக்களில் பல்லாயிரம் மக்களில் ஒருவனாக அவனும் போய்க்கொண்டிருக்கிறான். ஒருநாளும் கண்ணில் தென்படாத அவன் இன்று எப்படி கண் பார்வைக்குள் வந்தான். முந்தைய நாள்தான் அவனைப் போல ஒருவனை பார்த்திருந்தாள். எண்ணங்கள் மிக வலிமையானது என நினைத்தாள். நாம் தீவிரமாக எதை நினைக்கிறோமோ அது நிச்சயம் நம் கண்முன்னால் வந்துவிடுகிறது. ஆனால் வாழ்நாள் முழுவதும் அவனுடன் இருக்க வேண்டும் என்ற தீவிர எண்ணம் மட்டும் ஏன் பலிக்கவில்லை என்றுத் தெரியவில்லை.








மன சஞ்சலத்துடன் ஒரு ஆட்டோவில் ஏறி ‘ஆழ்வார்பேட்டை போங்க’ என்றாள்.

ஆபிசினுள் நுழைந்ததும் யோகேஷ் கூப்பிடுவதாகச் சொன்னார்கள்.

“நீ பர்மிஷன்னு உஷா சொன்னாங்க வைஷ்ணவி. ஆக்‌ஷுவலி எனக்கு க்ளையண்ட் மீட்டிங் இப்ப இருக்கு. உனக்காகத் தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.”

”எனக்கா? எதுக்கு யோகேஷ்?”

”ஒரு ந்யூ அசைன்மெண்ட் அதைப் பத்தி உன்கிட்ட டிஸ்கஸ் பண்ணனும். மீட்டிங் முடிச்சிட்டு வந்திடறேன். ஹோப் டூ ஜாய்ன் யூ பார் லன்ச் அப்ப பேசிடலாம்.”

யோசனையாக வைஷ்ணவி, ”பட் யோகேஷ் அதுக்கு முன்னாடி....என்று சொல்ல ஆரம்பித்தாள்

”கட் டீடெய்ல்ஸ். காட்ச் யூ தென்” என்று சொல்லிக் கொண்டே ஷு சத்தம் கேட்க படிகள் அதிர நடந்து போயே போய்விட்டான்.

சரி வந்ததும் சொல்லலாம் என்று முடிவெடுத்து தன் லாப்டாப்பை ஆன் செய்தாள். அவசர அவசரமாக பெர்சனல் என்ற போல்டரை ஓபன் செய்தாள். அதில் பாஸ்வேர்ட் போட்டு ஒளித்து வைத்திருந்த பைலை திறந்தாள்.

ஜீவா அடர்நீல ஜீன்ஸும், சிவப்பு நிற டீ ஷர்ட்டுடன் வரிசையான பற்கள் தெரிய சிரித்துக் கொண்டிருந்தான். சற்று ஒட்டியிருக்கும் குழி விழும் கன்னம், கோதுமை நிறமும் அந்தக் கண்களும், லேசாக கறுத்திருந்த உதடுகளும், அளவான மீசையும், பாதி முகத்தை மறைக்கும் தாடியும், கழுத்தில் ’வி’ என்ற எழுத்து டாலரும் அன்று பார்த்த மாதிரியே தான் ஜீவா இன்னும் இருக்கிறான். சிறு மாற்றம் கூட இல்லை. பைக் வேகமாக சென்றுவிட்டது டாலர் அணிந்திருந்தானா என பார்க்க முடியவில்லை.

எதற்கு அவனுடைய படத்தை இன்னும் வைத்துக் கொண்டிருக்க வேண்டும் எல்லாவற்றையும் டெலீட் செய்துவிடலாம் என நினைத்தாலும் மனசு கேட்காமல் அதை பத்திரப்படுத்தி இருந்தாள்.


அந்த போட்டோ எடுத்த தினத்தில் வைஷுவிற்காக சிகரெட் புகைப்பதை விட்டுவிட்டான் ஜீவா. ”நிசமாவா ஜீவா, பத்தாவது படிக்கறப்பத்திலேர்ந்து ஊதித்திட்டிருந்தே, எனக்காகவா விட்டே?” என்று ஆச்சரியமாக கேட்ட அவளிடம் ”இதென்ன பெரிய விஷயமா மை டியர் அம்புஜம் உனக்காக நான் என்ன வேணா செய்வேன்.”







”என்ன செய்வே? என்று ஆர்வமுடன் கேட்டாள்.

”இன்னிக்கே குடிக்க கத்துக்கிட்டு அதை உனக்காக விடட்டா? என்று கேட்டான்.

”அடப்பாவி கொன்னுடுவேன்.” என்று அவன் தோளில் குத்தினாள்.

”இன்னும் நாலஞ்சு தடவை அப்படி குத்தேன். தோள் வலிக்கு இதமா இருக்கு” என்றான்

”உன்னை அடிச்சா எனக்குத் தான் கை வலிக்குது. இரும்பால செஞ்ச கை...”

”ஜிம்முக்கு ரெகுலரா போய் வொர்க் அவுட் பண்றோமில்ல...அப்படித்தான் இருக்கும்” நெஞ்சை நிமிர்த்து ஜீவா சொல்ல அவனை பெருமிதத்துடன் பார்த்தாள் வைஷ்ணவி.

அவனுடனான முடிவில்லாத உரையாடல்கள் ஒவ்வொன்றும் அவளுக்கு ஞாபகம் இருக்கின்றது. நேரம் வாய்க்கும் போதெல்லாம் சிலவற்றை அசைபோடுவது ஒருவித பழக்கமாகிவிட்டதை நினைத்து தன் மீதே கோபப்பட்டாள்.

பெருமூச்சுடன் புகைப்படத்தை மூடி விட்டு ராஜினாமா கடிதத்தை டைப் அடிக்க ஆரம்பித்தாள்.

அப்போது அவளது செல்போன் அடிக்க, யோகேஷ் காலிங் என்று வந்தது.

‘ஹலோ வைஷ்ணவி. ஒரு சின்ன ஹெல்ப்”

”சொல்லுங்க யோகேஷ்”

”சீகல் ஃபைல் டூவை எடுத்துக்கிட்டு லீ மெரிடியனுக்கு இன்னும் பத்தே நிமிஷத்துல வர முடியுமா. இட்ஸ் கொயட் அர்ஜெண்ட்”

”பறந்துதான் வரணும் யோகேஷ்...”

”எப்படிவேணா வா....டேக் இன்னோவா....ஏன்னா லன்ஞ் இங்கதான் அது முடிஞ்சதும் க்ளையண்டை ஏர்போர்ட்ல ட்ராப் பண்ணனும். வீ ஹேவ் லிட்டில் டைம். ப்ளீஸ் பீ ஃபாஸ்ட் மா”

”ஆல்ரைட் யோகேஷ்.”

அவள் போனில் பேசிக் கொண்டிருக்கும் போது செகண்ட் லைனில் ரமணன் மூன்று முறை தொடர்ந்து கூப்பிட்டுக் கொண்டே இருந்தான்.

யோகேஷ் காலை வைத்ததும் ரமணனுக்கு டயல் செய்து கொண்டிருக்கும் போது அவன் போன் வந்தது

”என்ன வைஷு எவ்வளவு நேரமா ட்ரை பண்றது?”

”யோகேஷ் பேசிட்டிருந்தார் ரமணா”

ஒரு நொடி அமைதி. அதன் பின் ”சரி உனக்கு இன்னும் அங்க என்ன வேலை, ரெஸிக்னேஷனை தூக்கிப் போட்டுட்டு கிளம்பி வர வேண்டியது தானே? ஈவ்னிங் நான் பர்மிஷன் எடுத்திருக்கேன். அனுவைப் போய் பாத்துட்டு அப்படியே நிதியை கூட்டிட்டு டின்னர் போகலாம்.”

”இல்ல ரமண். யோகேஷ்கிட்ட பேசவே முடியலை. இப்ப நான் க்ளையண்ட் மீட்டிங் அர்ஜெண்டா கிளம்பிட்டு இருக்கேன். வந்து பேசறேன். ப்ளீஸ் புரிஞ்சுக்கங்க”

”ஓ அப்ப நேத்து நீ என்கிட்ட பேசினது எல்லாம் சும்மா அப்படித்தானே?”

”அய்யோ அப்படி இல்லைங்க....நிச்சயம் ஈவ்னிங்குள்ள யோகேஷ்கிட்ட பேசிடறேன்...ஒரு முக்கியமான மீட்டிங்ல இருக்கார். .இப்ப சொன்னா அப்செட் ஆயிருவார்.”

”அப்ப நான் அப்செட் ஆனா உனக்கு பிரச்சனை இல்லை இல்லையா வைஷு....”

அவள் பதில் சொல்ல ஆரம்பிக்கும் முன்,

‘நீ பண்றது எனக்கு சுத்தமா பிடிக்கலை வைஷு....

கோபமாக போனை வைத்துவிட்டான்.

எரிச்சலும் லேசான கோபத்துடன் அவன் நம்பருக்கு ட்ரை செய்த போது அது அடித்துக் கொண்டே இருந்தது. ஜீவா அனுப்பியிருந்த மெயில் ஒன்றினை எடுத்துப் படித்தாள்.

அன்பின் அம்புஜம்,

உன் பார்வை, உன் பேச்சு, உன் சிரிப்பு, உன் அருகாமை உன் ஸ்பரிசம், உனது இருப்பு என எல்லாமே இனிமையாக அமைந்திருப்பது உன்னிடம்தான் அம்புஜம். இதற்கு என்ன காரணமாகச் சொல்ல முடியும்? மனம்தானடி! .உன் மனமும் என் மனமும் ஒன்று போல் யோசிக்கிறது, ஒரே விஷயத்தை ரசிக்கிறது ஒத்த மனங்கள் ஒன்றை ஒன்று ஈர்ப்பதன் அர்த்தமும் , ஆர்வமும் புரிகிறது.



அருகேதான் இருக்கிறோம்.ஆனால் தொலைவாய் உணர்கிறேன். விலகி இருக்கையில் உன் அண்மையை உணர்கிறேன். மென்விரல்களின் சின்ன ஸ்பரிசம் மனதுக்கு வெகு இதமாய் இருக்கிறது. ஆனால் மனதின் எதிர்பார்ப்புகள் விரிந்துகொண்டே செல்கின்றன.உனது பேச்சுக்கும் புன்னகைக்கும் ஈடாக எதையுமே ஒப்பிட முடியவில்லை பெண்ணே ! எவ்வளவு மாயங்களை அது தன்னுள் அடக்கியுள்ளது....வியந்து தீரவில்லை எனக்கு. மென் நகை உன்னை பேரழகியாக்குகிறது. செல்லச் சிணுங்கலில் நீ குழந்தையாகி என்னை தாயாக்குகிறாய். அடுத்த நொடியிலேயே ஒரு மர்மப்புன்னகை என்னை உன்மத்தனாக்குகிறது...யாதுமாகி நிற்கிறாய்...எங்கும் நிறைந்து தெரிகிறாய்..`.நாம் சேராமலேயே போய் விடலாம்..ஆனால் பிரியவே மாட்டோம்'. இந்த வாக்கியம் வினோதமாய் பிறருக்கு தோன்றலாம்.. ஆனால் உனக்கும் எனக்கும் மட்டுமான வாக்கியமாய் இருக்கிறதில்லையா இது?

உன் ஜீவா

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !