Wednesday, February 6, 2019

முதலைகளிடமிருந்து தப்பித்து சிங்கங்களிடம் சிக்கி..


ஜூலை முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில் ஒவ்வொரு வருடமும் 2 மில்லியன் விலங்குகள் தான்சானியாவில் இருக்கும் Serengeti National பார்க்கிலிருந்து கென்யாவிலிருக்கும் Maasai Mara National Reserveக்கு இடம் மாறுகின்றன. இந்த மைகிரேஷன் உலகின் நவீன அதிசயங்களில் ஒன்று. இப்படி இடம் மாறும் விலங்குகளில் வரிக்குதிரைகள், Wildebeest எனப்படும் ஆப்பிரிக்க மான்கள் ஆகியவை அதிகம் இடம்பிடிக்கின்றன. தான்சானியாவிலிருந்து கென்யா செல்லும் வழியில் விலங்குகள், Mara என்ற ஆற்றைக்கடக்க வேண்டும். இதில் ஸ்பெஷல் என்னவென்றால், Mara ஆற்றிலிருக்கும் எக்கச்சக்கமான முதலைகளுக்கு உணவாகாமல் ஆற்றைக்கடப்பது தான். முதலைகளிடமிருந்து தப்பித்து Maasai Mara சென்றால், அங்கும் ஆபத்து காட்டு ராஜா வடிவில் காத்திருக்கும். இவ்விடத்தில் சிங்கங்களின் எண்ணிக்கையும் அதிகம், மக்களால் வேட்டையாடப்படும் விலங்குகளின் எண்ணிக்கையும் அதிகம். இத்தனை ஆபத்துகள் இருந்தாலும் ஒவ்வொரு வருடமும் உணவுக்காகவும், குடிநீருக்காகவும் இடம் மாறும் விலங்குகளின் எண்ணிக்கை மட்டும் குறையவில்லை.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !