உலகில் உள்ள மொத்த பறவையினங்களில் 19% பறவைகள் மட்டுமே தட்பவெப்ப நிலை காரணமாகவும், இனப்பெருக்கத்திற்காகவும் இடம்பெயர்கின்றன(migration). அதிகபட்சமாக 44,000 மைல்கள் இடம் பெயர்கின்றன. அப்படி 44,000 மைல்கள் இடம் பெயரும் பறவையின் பெயர் Arctic Tern . பெயரை விடுங்கள்..அதன் எடை என்ன தெரியுமா? ஜஸ்ட் 100 கிராம்.
இப்பறவைகள் அதிகபட்சமாக 35 வருடங்கள் வரை உயிர் வாழ்கின்றன. தன் வாழ்நாளில் அதிகபட்சமாக 1.5 மில்லியன் மைல்கள் பயணம் செய்கின்றன. கிரீன்லாந்தில் பயணத்தைத் தொடங்கி அண்டார்டிகாவின் கடற்கரை வழியாகப் பறந்து மீண்டும் கிரீன்லாந்தை வந்தடைகின்றன இப்பறவைகள். பயணத்தின் போது வட அட்லாண்டிக் கடலில் உணவிற்காக ப்ரேக் எடுத்துக் கொள்கின்றன. நீர்வாழ் பறவையான ஆர்டிக் டெர்ன் அதிகம் விரும்பி உண்பது மீன் வகைகளையே.
No comments:
Post a Comment