Monday, February 11, 2019

பைன்(Pine) பறவைகள்

Clark’s Nutcracker எனப்படும் ஒரு வகை பறவையினம், பைன் மரங்களின் விதைகளை விரும்பி உண்ணக்கூடியவை. வாழ்நாள் முழுவதும் இவை சாப்பிடக்கூடிய ஒரே உணவு பைன் மரத்தின் விதைகள் மட்டும் தான். இந்தப் 
பைன் விதைகளை எடுத்துச் செல்வதற்காக அவற்றின் வாயில் ஒரு ஸ்பெஷல் பை கூட இருக்கிறது. இப்பறவைகள் ஒவ்வொன்றும் தன் குளிர்காலத்தேவைக்காக ஆண்டுதோரும் கிட்டத்தட்ட 30,000 பைன் மர விதைகளை சேமிக்கின்றன.  அத்தனை விதைகளும் ஒரே இடத்தில் சேமிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு பறவையும் 6,000 வெவ்வேறு இடங்களில் தத்தம் பைன் விதைகளைச் சேமிக்கின்றன.
clarks_nutcracker
இப்பறவைகளுக்கு ஞாபக சக்தி மிக அதிகம். எந்த அளவுக்கு என்றால், தான் உணவு சேமித்து வைத்திருக்கும் 6000க்கும் அதிகமான இடங்களை கரெக்ட்டாக ஞாபகம் வைத்துக்கொள்ளும் அளவிற்கு. தேவையான நேரத்தில் சேமிப்புக் கிடங்குகளுக்குச் சென்று உணவை எடுத்துவருகின்றன. அந்த இடம் பனியில் புதைந்து இருந்தால் கூட இவற்றால் சரியாக அடையாளம் கண்டுபிடிக்க முடியும். பெண் பறவைகள் உணவை எடுத்துவரச் செல்லும் நேரங்களில் ஆண் பறவைகள் முட்டைகளை அடைகாக்கின்றன. காகங்கள் குடும்பத்தைச் சேர்ந்த இந்தப்பறவைகள் அதிகபட்சமாக 17 வருடங்கள் வரை உயிர்வாழக்கூடியவை.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !