Monday, January 7, 2019

விடுகதைகள் – Vidukathai in Tamil 5


விடுகதைகள் – Vidukathai in Tamil – Part 1

1. தணித்து உண்ணமுடியாது என்றாலும் இது சேர்த்தால்தான் உணவுக்கு சுவை அது என்ன? உப்பு
2. கலர்ப்பூ கொண்டைக்காரி, காலையில் எழுப்பிவிடுவாள். அது என்ன? சேவல் 3. “சொன்னதைச் சொல்லும் பொண்ணுக்கு, பச்சைப் பாவாடை கேட்குதாம் அது என்ன? கிளி
4. தண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும். அது என்ன? உரோமம்
5. “காலில்லாதவன் வளைவான், நெளிவான் காடு மேடெல்லாம் அலைவான் அவன் யார்? பாம்பு
6. பல அடுக்கு மாளிகையில் இனிப்பு விருந்து. அது என்ன ? தேன்
7. “சிவப்பான பெட்டிக்குள் கருகு மணி முத்துக்கள் அது என்ன? பப்பாளி விதைகள்
8. “காலையிலே கூவும் பட்சி, கந்தன் கொடியில் காணும் பட்சி, குப்பையைக் கிளறும் பட்சி, கொண்டையுடைய பட்சிஅது என்ன? சேவல்
9. அடிக்காத பிள்ளை அலறித் துடிக்குது. அது என்ன? சங்கு
10. ஒற்றைக்கால் குள்ளனுக்கு எட்டுக் கை. அது என்ன? குடை

விடுகதைகள் – Vidukathai in Tamil – Part 2

1. காற்று நுழைந்ததும் கானம் பாடுகிறான். அவன் யார்? புல்லாங்குழல்
2. அனைவரையும் நடுங்க வைப்பான், ஆதவனுக்கே அடங்குவான். அது என்ன? குளிர்
3. சுற்றும்போது மட்டும் சுகம் தருவாள். அது என்ன? மின்விசிறி
4. அடி மலர்ந்து நுனி மலராத பூஅது என்ன ? வாழைப்பூ
5. ஆயிரம் தச்சர் கூடி கட்டிய அந்த அழகான மண்டபம் , ஒருவர் கண்பட்டு உடைந்ததாம் அந்த மண்டபம். அது என்ன? தேன் கூடு
6. பேசாத வரை நான் இருப்பேன். பேசினால் நான் உடைந்துவிடுவேன். நான் யார்? அமைதி
7. அடித்தால் விலகாது, அணைத்தால் நிற்காது. அது என்ன? தண்ணீர்
8. “நடக்கத் தெரியாதவன், நட்டுவனுக்கு வழி காட்டுகிறான் அவன் யார்? கைகாட்டி
9. தலையில் கீரீடம் வைத்த தங்கப்பழம் அது என்ன? அன்னாசிப்பழம்
10. ராஜா, ராணி உண்டு நாடு அல்ல. இலைகள் பல உண்டு, தாவரம் இல்லை! அது என்ன? காட்ஸ்

விடுகதைகள் – Vidukathai in Tamil – Part 3

1. கந்தல் துணிக்காறி முத்துப் பிள்ளைகள் பெற்றாள் அவள் யார்? சோளப்பொத்தி
2. “மூன்றெழுத்துப் பெயராகும். முற்றும் வெள்ளை நிறமாகும் அது என்ன? பஞ்சு
3. கழுத்து உண்டு, தலையில்லை; உடல் உண்டு, உயிர் இல்லை, கையுண்டு, விரல் இல்லை. அது என்ன? சட்டை
4. “கோணல் எத்தனை இருந்தாலும் குணமும் குறியும் மாறாதுஅது என்ன? கரும்பு
5. “மணல் வெளியில் ஓடுது, தண்ணீர் கேட்காத கப்பல் அது என்ன? ஒட்டகம்
6. பேசுவான் நடக்கமாட்டான்; பாடுவான் ஆடமாட்டான். அவன் யார் ? வானொலிப் பெட்டி
7. “சங்கீதம் பாடும் சல்லாபம் செய்யும் சமயத்தில் ரத்தம் குடிக்கும்அது என்ன? கொசு
8. நான்தான் சகலமும். என்னைப் பார்க்க முடியாது, பிடிக்கவும் முடியாது. எனக்கு வாயில்லை, ஆனால் நான் ஓசை எழுப்புவேன். நான் யார் ? காற்று
9. “கோயிலுக்குப் போனானாம் எங்க தம்பி தீர்த்தம் விட்டானாம் தங்கத் தம்பிஅது என்ன? தேங்காய்
10. முழு உலகமும் சுற்றி வரும், ஆனால் ஒரு மூலையிலேயே இருக்கும் அது என்ன?

விடுகதைகள் – Vidukathai in Tamil – Part 3

1. அண்டமென்ற பெயரும் உண்டு, அடைகாத்தால் குஞ்சுமுண்டு. அது என்ன? முட்டை
2. ஒற்றைக் காலில் ஆடுவான், ஓய்ந்து போனால் படுப்பான். அவன் யார்? பம்பரம்
3. “காலைக்கடிக்கும் செருப்பல்ல, காவல் காக்கும் நாயல்ல அது என்ன? முள்” 4. 5. பிறந்தது முதல் வயிற்றாலே போகிறது. அது என்ன? பாம்பு
6. ஒளி கொடுக்கும், விளக்கு அல்ல; சூடு கொடுக்கும், தீ அல்ல; பளபளக்கும், தங்கம் அல்ல. அது என்ன? சூரியன்
7. பொட்டுப்போல் இலை இருக்கும், பொரிபோல் பூப் பூக்கும், தின்னக்காய் காய்க்கும், தின்னாப் பழம் பழுக்கும் அது என்ன? முருங்கைமரம்
8. ஆகாயத்தில் பறக்கும்அக்கம் பக்கம் போகாதுஅது என்னகொடி

விடுகதைகள் – Vidukathai in Tamil – Part 4

1. அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் அது என்ன? நிலா
2. பூமியிலே பிறக்கும், புகையாய்ப் போகும். அது என்ன? பெட்ரோல்
3. இரவும் பகலும் ஓய்வு இல்லை, படுத்தால் எழுப்ப ஆள் இல்லை அது என்ன? இதயம்
4. என்னைப் பார்க்க முடியும்ஆனால் எனக்கு எடை கிடையாதுஎன்னை ஒரு பாத்திரத்தில் போட்டால் அதன் அளவை குறைத்திடுவேன்நான் யார் ? துவாரம்

5.“தொட்டு விட்டால் மூடிக் கொள்ளும் பச்சை மாளிகை ஜன்னல்கள் அது என்னதொட்டா சுருங்கிச் செடி






No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !