Monday, January 7, 2019

விடுகதைகள் – Vidukathai in Tamil 4


விடுகதைகள் – Vidukathai in Tamil – Part 1

1. “காலையில் ஊதும் சங்கு, கறி சமைக்க உதவும் சங்கு அது என்ன? சேவல்
2. அள்ளவும் முடியாது, கிள்ளவும் முடியாது. அது என்ன? காற்று
3. குண்டு குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்தே இருக்கும் அவன் யார்? கத்தரிக்காய்
4. அந்தரத்தில் தொங்குவது சொம்பும் தண்ணீரும்அது என்ன? இளநீர்
5. எட்டாத ராணியாம் இரவில் வருவாள், பகலில் மறைவாள். அது யார்? நிலா
6. ஆள் இறங்காத குளத்தில் ஆடி இறங்கி கூத்தாடுது. அது என்ன ? மத்து
7. கண்ணில் தென்படுவான், கையில் பிடிபட மாட்டான். அவன் யார்? புகை
8. அடித்து நொறுக்கி அணலில் போட்டால் ஆவியாகத் தோன்றி அழகாய் மணக்கும். அது என்ன? சாம்பிராணி
9. தலை இல்லாதவன் தலையை சுமப்பவன். அவன் யார் ? தலையணை
10. “நாலு மூளைக்கிணறு, நாகரத்தினக்கிணறு, எட்டிப் பார்த்தால் சொட்டுத தண்ணீர் இல்லை அது என்ன? அச்சு வெல்லம்

விடுகதைகள் – Vidukathai in Tamil – Part 2

1. வாலால் நீர் குடிக்கும்,வயால் பூச்சொரியும் அது என்ன? விளக்கு
2. அடிமேல் அடி வாங்கி அனைவரையும் சொக்க வைக்கும். அது என்ன? மிருதங்கம்
3. கை பட்டால் சிணுங்கும் கன்னிப் பெண், கூச்சல் போட்டு கதவை திறக்க வைப்பவள் அவள் யார்? காலிங்பெல்
4. பகலிலே வெறுங்காடு, இரவெல்லாம் பூக்காடு. அது என்ன? வானம்
5. ஓட்டம் நின்றால் போதும் ஆட்டம் நின்று போகும். அது என்ன? ரத்தம்
6. கறுப்புக் காகம் ஓடிப்போச்சு, வெள்ளைக் காகம் நிற்குது. அது என்ன? உளுந்து
7. மணம் இல்லாத மல்லிகை மாலையில் மலரும் அது என்ன? தீபம்
8. “காலில்லா பந்தலைக் காணக் காண சந்தோஷம் அது என்ன? வானம்
9. உரசினால் உயிரே மாய்த்துக் கொள்ளும் அது என்ன? தீக்குச்சி
10. ஆறு எழுத்துள்ள ஓர் உலோகப் பெயர். அதன் கடை மூன்று எழுத்துகள் சேர்ந்தால் ஒரு கொடிய பிராணி. அது என்ன? துத்தநாகம்

விடுகதைகள் – Vidukathai in Tamil – Part 3

1. வந்தும் கெடுக்கும், வராமலும் கெடுக்கும். அது என்ன? மழை
2. மண்ணுக்குள் இருக்கும், மங்கைக்கு அழகு தரும் அது என்ன? மஞ்சள்
3. “காளைக்குக் கழுத்து மட்டும் தண்ணீர் அது என்ன? தவளை
4. ஏரியில் இல்லாத நீர்,தாகத்திற்கு உதவாத நீர், தண்ணீர் அல்ல அது என்ன? கண்ணீர்
5. “நான் வெட்டுப்பட்டால், வெட்டியவனை அழ வைப்பேன் நான் யார்? வெங்காயம்
6. தண்ணீரில் பிறப்பான்; தண்ணீரில் இறப்பான். அவன் யார்? உப்பு
7. சின்னப்பயல் உரசினால் சீறிப் பாய்வான்அது என்ன? தீக்குச்சி
8. “நடலாம், பிடுங்க முடியாது அது என்ன? பச்சை குத்துதல்
9. ஆயிரம் பேர் அணிவகுத்தாலும் ஒரு தூசி கிளம்பாது. அவை யாவை? எறும்புகள்
10. “ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும் அது என்ன? ஊதுபத்தி

விடுகதைகள் – Vidukathai in Tamil – Part 4

1. கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன், பள்ளநீரைக் கண்டு பதைபதைக்கிறான். அது என்ன? நெருப்பு
2. தாழ்ப்பாள் இல்லாத கதவு, தானாக மூடி திறக்கும் கதவு அது என்ன? ண் இமை
3. காலடியில் சுருண்டிருப்பாள்; கணீர் என்று குரலிசைப்பாள். அவள் யார் ? மெட்டி
4. வித்தில்லாமல் விளையும்; வெட்டாமல் சாயும். அது என்ன? வாழை
5. அடர்ந்த காட்டின் நடுவே ஒரு பாதைஅது என்ன ? தலை வகிடு
6. “வண்ணப் பட்டுச் சேலைக்காரி, நீல வண்ண ரவிக்கைக் காரி அது என்ன? மயில்
7. அறிவின் மறுபெயர், இரவில் வருவது. அது என்ன? மதி
8. வேகாத வெயிலில் வெள்ளையப்பன் விளைகிறான். அது என்ன? உப்பு
9. “வெட்டிக்கொள்வான் ஆனாலும் ஒட்டிக்கொள்வான் அவன் யார்? கத்தரிக்கோல்
10. தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார்? இளநீர்

விடுகதைகள் – Vidukathai in Tamil – Part 5

1. ஒற்றைக்கால் மனிதனுக்கு ஒன்பது கை. அது என்ன? மரம்
2. “காவி உடையணியாத கள்ளத்தவசி கரையோரம் கடுந்தவம் செய்கிறான் அவன் யார்? கொக்கு
3. உடல் கொண்டு குத்திடுவான்; உதிரிகளை ஒன்றிணைப்பான். அது என்ன ? ஊசி
4. காலாறும் கப்பற்கால் கண்ணிரண்டும் கீரை விதை. அது என்ன?
5. “ஓடியாடி வேலை செய்தபின் மூலையில் ஒதுங்கிக்கிடப்பாள் அவள் யார்? துடைப்பம்
6. “கோடையிலே ஆடி வரும் வாடையில முடங்கி விடும்அது என்ன? மின்விசிறி
7. “நடைக்கு உவமை, நளனக்கு தூதுவன் அவன் யார்? அன்னம்
8. கூட்டுச் சேர்ந்து கோட்டைக் கட்டும்; மாட்டுவோரை மடக்கித் தாக்கும். அது என்ன ? தேனீ
9. ஆயிரம் பேர் வந்து சென்றாலும் வந்த சுவடு தெரியாது? அது என்ன? எறும்பு
10. வளைஞ்சு நெளிஞ்சு ஆடும் தண்ணீர் குடித்தால் சாகும் அது என்ன? நெருப்பு


No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !