Monday, January 7, 2019

விடுகதைகள் – Vidukathai in Tamil 3

விடுகதைகள் – Vidukathai in Tamil – Part 1

1. நீண்ட உடலிருக்கும் தூணும் அல்ல ,உடலில் சட்டை இருக்கும் ஆனால் உயிர் இல்லை,துயிலில் சுகம் இருக்கும் மெத்தை அல்ல அது என்னதலையணை
2. எட்டுக்கால் ஊன்றி இருகால் படமெடுக்க வட்டக் குடைபிடித்து வாறாராம் வன்னியப்பு அது என்னநண்டு
3. ஓய்வு எடுக்காமல் இயங்கும்ஓய்வு எடுத்துவிட்டால் மறுபடியும் இயங்காதுஅது என்னஇதயம்
4. நான் இருந்ததில்லைஆனாலும் இருப்பவனாக இருப்பேன்என்னை யாரும் பார்த்ததில்லை பார்க்கும் முன் பழசாயிருப்பேன்என்னை நம்பியே இந்த உலகமும் ,மக்களும் நல்லது நடக்குமென எண்ணுகிறார்கள் நான் யார்நாளை 5. கிட்ட இருக்கும் பட்டணம்எட்டித்தான் பார்க்க முடியவிலைஅது என்னமுதுகு.
6. கோவிலைச் சுற்றிக் கருப்புகோவிலுக்குள்ளே வெளுப்புஅது என்னசோற்றுப்பானை-சோறு.
7. வெள்ளை ஆளுக்கு கறுப்புத் தலைப்பாகைஅது என்னதீக்குச்சி
8. அரைசாண் ராணிக்கு வயிற்றில் ஆயிரம் முத்துகள்அது என்னவெண்டைக்காய்
9. அழுவேன்,சிரிப்பேன் அனைத்தும் செய்வேன் நான் யார்முகம் பார்க்கும் கண்ணாடி
10. முதுகிலே சுமை தூக்கி முனகாமல் அசைந்து வரும் அது என்னநத்தை 

விடுகதைகள் – Vidukathai in Tamil – Part 2

1. அம்மா போடும் வட்டம்பளபளக்கும் வட்டம்சுவையைக் கூட்டும் வட்டம்சுட்டுத் தின்ன இஸ்டம்அது என்னஅப்பளம்
2. தொப்பொன்று விழுந்தான் தொப்பி கழன்றான் அவன் யார்பனம்பழம்
3. முயல் புகாத காடு எதுமுக்காடு
4. உயரத்தில் இருப்பிடம்.தாகம் தீர்ப்பதில் தனியிடம் அது என்னஇளநீர்
5. தலையைச் சீவினால் தாளில் நடப்பான் அவன் யார்பென்சில்
6. கண்டு பிடித்தவனும் வைத்திருக்கவில்லைவாங்கியவனும் உபயோகிக்கவில்லைஉபயோகிப்பவனுக்கு அதனை பற்றி எதுவும் தெரியாது அது என்னசவப்பெட்டி
7. மழை காலத்தில் குடை பிடிப்பான்மனிதனல்லஅவன் யார்காளான்
8. ஒரு குற்றத்தை செய்ய முயற்சித்தால் தண்டனை உண்டுஆனால் குற்றத்தை செய்தால் தண்டிக்க முடியாதுஅக் குற்றம் என்னதற்கொலை
9. எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள்அவள் யார்செல்போன்
10. ஓவென்று உயர்ந்த மலைநடுவே உடன் பிறப்பு இருவர் ! ஒருவரை மற்றவர் பார்ப்பதுமில்லைபேசுவதும் இல்லைஅவர்கள் யார்கண்மூக்கு.

விடுகதைகள் – Vidukathai in Tamil – Part 3

1. மீன் பிடிக்கத் தெரியாதாம் ஆனால் வலை பின்னுவானாம் அவன் யார்சிலந்தி
2. தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்கமுடியாது அது என்னமுதுகு
3. வீட்டிலிருப்பான் காவலாலிவெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளிஅவர்கள் யார்பூட்டும் திறப்பும்
4. கொம்பு நிறைய கம்பு அது என்ன ? மாதுளம்பழம்
5. காட்டிலே பச்சைகடையிலே கறுப்புவீட்டிலே சிவப்புஅது என்னமரம்-கரி-நெருப்பு.
 6. என்னைத் தெரியாத போது தெரிந்து கொள்ளும் ஆவல்.தெரிந்த பிறகு பகிர்ந்து கொள்ளும் ஆசைநான் மறைக்கப்பட வேண்டியவன்நான் யார்இரகசியம்
7. நடக்கவும் மாட்டேன்நகராமல் இருக்கவும் மாட்டேன் நான் யார்மணிக்கூடு
8. மழையோடு வருகின்ற மஞ்சள் புறாவை வெட்டினால் ஒரு சொட்டு இரத்தம் வராதுஅது என்னஈசல்
9. நடந்தவன் நின்றான்கத்தியை எடுத்து தலையைச் சீவினேன்மறுபடி நடந்தான்அவன் யார்பென்சில்
10. விரல் இல்லாமலே ஒரு கைஅது என்னதும்பிக்கை

விடுகதைகள் – Vidukathai in Tamil – Part 3

1. வெள்ளத்தில் போகாதுவெந்தணலில் வேகாதுகொள்ளையடிக்க முடியாதுகொடுத்தாலும் குறையாதுஅது என்னகல்வி
2. அம்மா பின்னிய நூலை அவிழ்த்தால் போச்சுஅது என்னஇடியாப்பம்
3. “தண்ணீரில் மிதக்குது கட்டழகிய வீடுகள் -அது என்னகப்பல்கள்
4. “தொட்டால் மணக்கும்சுவைத்தால் புளிக்கும்அது என்னஎழுமிச்சம்பழம்” 5. இதயம் போல் துடிப்பிருக்கும்இரவு பகல் விழித்திருக்கும்அது என்னகடிகாரம்
6. உணவு கொடுத்தால் வளரும்நீர் கொடுத்தால் அழியும்அது என்னநெருப்பு 7. ஊசி போல் இருப்பான்ஊரையே எரிப்பான்அது என்னதீக்குச்சி
8. கத்தி போல் இலை இருக்கும் கவரிமான் பூ பூக்கும் தின்ன பழம் கொடுக்கும் தின்னாத காய் கொடுக்கும் அது என்னவேம்பு
9. எண்ணெய் வேண்டா விளக்குஎடுப்பான் கை விளக்குஅது என்னமெழுகுவர்த்தி
10. அத்துவான காட்டிலே பச்சைப்பாம்பு தொங்குது – அது என்னபுடலங்காய்

விடுகதைகள் – Vidukathai in Tamil – Part 5

1. மரத்திற்கு மேலே பழம்பழத்திற்கு மேலே மரம் அது என்னஅன்னாசிப்பழம்
2. ஊருக்கெல்லாம் ஓய்வுஉழைப்பவர்க்கும் ஓய்வுஇவனுக்கு மட்டும் ஓய்வில்லைஇரவும் பகலும் ஓட்டந்தான்அது என்னமூச்சு
3. “சட்டையைக் கழற்றியதும் சடக்கென்று உள்ளே விழும் – அது என்னவாழைப்பழம்
4. அச்சு இல்லாத சக்கரம்அழகு காட்டும் சக்கரம்அது என்னவளையல்
5. “வானத்தில் பறக்கும் பறவை இதுஊரையே சுமக்கும் பறவை இது அது என்னவிமானம்
6. ஒட்டியவன் ஒருத்தன்பிரித்தவன் இன்னொருவன்அது என்னகடிதம்
7. உருவத்தில் சிறியவன்உழைப்பில் பெரியவன்அவன் யார்எறும்பு
8. நான் சூரியனைக் கடந்து சென்றால் கூட எனக்கு நிழல் ஏற்படாதுநான் யார்தென்றல்
9. வெயிலில் மலரும்காற்றில் உலரும்அது என்னவியர்வை
10. “காற்று இல்லாத கண்ணாடிக் கூண்டில் மஞ்சக் கோழி மயங்கி கிடக்குது அது என்னமுட்டை

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !