விடுகதைகள் – Vidukathai in Tamil – Part 1
1. வட்ட வட்ட நிலவில் வரைஞ்சிருக்கு; எழுதியிருக்கு. அது என்ன? நாணயம்
2. ஓடையில கருப்பு மீனு துள்ளி விளையாடுது அது என்ன ? கண்
3. பூ பூப்பது கண்ணுக்குத் தெரியும். காய் காய்ப்பது கண்ணுக்குத் தெரியாது. அது என்ன? வேர்கடலை
4. பட்டுப்பை நிறைய பவுண் காசு அது என்ன? வத்தல் மிளகாய்
5. இருந்த இடத்தில் நகர்ந்தபடி இரவும் பகலும் செல்வான். அவன் யார்? கடிகாரம்
6. உடம்பெல்லாம் பல் கொண்ட ஒருத்திக்கு கடிக்க தெரியாது? சீப்பு
7. காலில் தண்ணீர் குடிப்பான், தலையில் முட்டையிடுவான் அவன் யார்? தென்னை
8. சலசலவென சத்தம் போடுவான், சமயத்தில் தாகம் தீர்ப்பான். அவன் யார்? அருவி
9. கல்லில் காய்க்கும்பூ தண்ணீரில் மலரும்பூ, அது என்ன பூ? சுண்ணாம்பு
10. காற்றைக் குடித்து காற்றில் பறப்பான், அவன் யார்? பலூன்
விடுகதைகள் – Vidukathai in Tamil – Part 2
1. நடந்தவன் நின்றான் கத்தியை எடுத்து தலையைச் சீவினேன் மறுபடியும் நடந்தான் அவன் யார்? பென்சில்
2. எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாது, அது என்ன? மின் விசிறி
3. வெள்ளை ராஜாவுக்கு கறுப்பு உடை அது என்ன? உழுந்து
4. முத்துக் கோட்டையிலே மகாராணி சிறைபட்டிருக்கிறாள். அவள் யார்? நாக்கு
5. கூரை வீட்டைப் பிரிச்சா ஓட்டுவீடு! ஓட்டு வீட்டுக்குள்ள வெள்ளை மாளிகை!வெள்ளை மாளிகைக்கு நடுவில் குளம்!அது என்ன ? தேங்காய்
6. பேச்சுக் கேட்குது பேசுபவர் தெரியவில்லை. அது என்ன? வானொலி பெட்டி
7. கந்தல் துணிக்காரி முத்துப் பிள்ளைகள் பெற்றாள் அவள் யார்? சோளப்பொத்தி
8. வடிவழகு மாப்பிள்ளை வயிற்றால் நடக்கிறார். அவர் யார்? பாம்பு
9. உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்? அஞ்சல் பெட்டி. 10. இது ஒரு பூ. முதற்பகுதி ஆதவனின் மறுபெயர்; பிற்பகுதி தேசத் தந்தையை குறிக்கும். அது என்ன? சூரிய காந்தி
விடுகதைகள் – Vidukathai in Tamil – Part 3
1. பச்சை நிற அழகிக்கு உதட்டுச் சாயம் பூசாமலே சிவந்தவாய் அவள் யார்? கிளி
2. இரவு வீட்டிற்கு வருவான், இரவு முழுவதும் இருப்பான் காலையில் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டிருப்பான்? நிலா
3. ஓடையில் ஓடாத நீர், ஒருவரும் குடிக்காத நீர். அது என்ன? கண்ணீர்
4. அம்மா படுத்திருக்க மகள் ஓடித்திரிவாள் அது என்ன? அம்மி குளவி
5. ஒரு வீட்டுக்கு இரண்டு வாசல்படி. அது என்ன? மூக்கு
6. ஊரெல்லாமல் ஒரே விளக்கு. அதற்கு ஒரு நாள் ஒய்வு அது ? சந்திரன்
7. உடம்பெல்லாம் தங்கநிறம், தலையில் பச்சை கிரீடம் அது என்ன? அன்னாசிப் பழம்
8. குண்டுச் சட்டியில் கெண்டை மீன்.அது என்ன? நாக்கு.
9. கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள் அவள் யார்? மெழுகுத்திரிவத்தி
10. நன்றிக்கு வால் கோபத்துக்கு வாய் அது என்ன? நாய்
விடுகதைகள் – Vidukathai in Tamil – Part 4
1. பூ கொட்ட கொட்ட ஒன்றையும் தனியே பொறுக்க முடியவில்லை? மழை
2. நீண்ட உடம்புக்காரன், நெடுந்தூரப் பயணக்காரன்? ரயில்
3. எடுக்க எடுக்க வளரும். எண்ணெயைக் கண்டால் படிந்துவிடும். அது என்ன? முடி
4. அரிவாளால் வெட்டி வெட்டி அடுப்பிலே வெச்சாலும் மூச்சே விட மாட்டான். அவன் யார்? விறகு
5. தண்ணியில்லாத காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி. அவள் யார்? ஒட்டகம் 6. ஆகாரமாக எதையும் தந்தால் சாப்பிடுவேன், ஆனால் நீரை குடிக்க தந்தால் இறந்து விடுவேன், நான் யார்? நெருப்பு
7. ஒன்று போனால் மற்றொன்றும் வாழாது? செருப்பு
8. ஊரெல்லாம் சுத்துவான், ஆனால் வீட்டிற்குள் வரமாட்டான். செருப்பு
9. கருப்பர்கள் மாநாடு போட்ட இடத்தில் கண்ணீர் பிரவாகம். அது என்ன? மேகம், மழை.
10. கூட்டுக்குள் குடியிருக்கும் குருவி அல்ல; கொலை செய்யும்; பாயும்; அது வீரனுமல்ல. அது என்ன? அம்பு.
விடுகதைகள் – Vidukathai in Tamil – Part 5
1. ஆடும் வரை ஆட்டம் , ஆடிய பின் ஓட்டம் அது என்ன ? இதயம்
2. தண்ணியில்லாத காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி. அவள் யார்? ஒட்டகம் 3. ஊசி நுழையாத கிணற்றிலே ஒரு படி தண்ணீர்? தேங்காய்
4. பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது அது என்ன? கண்கள்
5. முதலெழுத்து தமிழின் அடுத்த எழுத்து கடை மூன்று சேர்ந்தால் ஒரு எண்ணிக்கை மொத்தத்தில் இது வருமுன் எச்சரிக்கை தேவை? ஆபத்து
6. மண்ணுகுளே கிடப்பான் மங்களகரமானவன் அவன் யார் ? மஞ்சள்
7. நிலத்தில் முளைக்காத செடி நிமிர்ந்து நிற்காத செடி அது என்ன? தலை முடி 8. குண்டன் குழியில் விழுவான், குச்சியப்பன் தூக்கி விடுவான் – அது என்ன? பணியாரம்
9. எழுதி எழுதியே தேய்ஞ்சு போனான். அவன் யார்? பென்சில்
10. பச்சைபெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள். அது என்ன? வெண்டைக்காய்
No comments:
Post a Comment