1950களின் இறுதியில் அமெரிக்கா, நிலவில் நியூக்ளியர் பாம் ஒன்றை வெடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்தது. “A Study of Lunar Research Flights (a.k.a “Project A119”) என்று பெயரிடப்பட்ட இந்தத் திட்டத்தின் குறிக்கோள், பூமியிலிருந்து பார்க்கும்போது மனிதக்கண்களுக்குத் தெளிவாகத் தெரிவது போல் ஒரு அணுகுண்டை நிலவில் வெடிக்க வைக்க வேண்டும் என்பதாகும். காரணம்?? காரணமென்ன பெரிய காரணம்; பெருமைக்கு எருமை மாடு மேய்த்த கதைதான். நிலவிலும் அணுகுண்டை வெடிக்கவைக்க முடியும் என்று உலகுக்குச்(!!) சொல்வதும், ரஷ்யாவை விட விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காதான் தான் பெரிய ஆள் என்று மக்களுக்கு உணர்த்துவதுமே இதன் குறிக்கோளாக இருந்தது..
ஒரு வேளை இது நடந்தால், அமெரிக்காவின் மேல் மக்களுக்கு வரப்போகும் “நெகட்டிவ்” விமர்சனத்தைக் கருத்தில் கொண்டு, இந்த ப்ராஜெக்ட் கைவிடப்பட்டது. கொடுமை என்னவென்றால், இதே காலகட்டத்தில் ரஷ்யாவும் ”Space Race” என்ற பெயரில் இதே மாதிரி ஒரு ப்ராஜெட்டை உருவாக்கியதாகச் சொல்லப்படுகிறது. அமெரிக்கா போல், நெகட்டிவ் பப்ளிசிட்டிக்கு பயந்தே ரஷ்யாவும் திட்டத்தைக் கைவிட்டது.
No comments:
Post a Comment