ஒலிம்பிக் போட்டிகளின்போது பறக்கவிடப்படுவதற்காக முதன்முதலில் ஒலிம்பிக் சின்னத்துடன் தயாரிக்கப்பட்ட கொடி 1920ஆம் வருடம் பெல்ஜியம் நாட்டில் போட்டிகள் நடத்தப்பட்டபோது காணாமல் போய்விட்டது. இது நடந்து 77 ஆண்டுகளுக்குப் பிறகு 1997ஆம் வருடம் Hal Haig Prieste என்ற ஒலிம்பிக் வீரரை, அமெரிக்க பத்திரிக்கையாளர் ஒருவர் சந்தித்து பேட்டியெடுத்தார். பேட்டியின் நடுவில் பத்திரிக்கையாளர் கொடி காணாமல் போனதைப் பற்றி பேச, 1920ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் பெற்ற அந்த ஒலிம்பிக் வீரர் பதட்டப்படாமல், “அந்தக்கொடி என் பெட்டியில்தான் இருக்கிறது” என்று சொன்னது மட்டுமல்லாமல், அதை அவருக்குக் காட்டவும் செய்தார்.
தன் சக போட்டியாளர் Duke Kahanamoku “உன்னால் யாருக்கும் தெரியாமல் அந்தக்கொடியை எடுக்க முடியுமா” என்று சவால் விட்டதே தான் கொடியை எடுத்ததற்கான காரணம் என்று சொன்ன Hal Haig, இனி நீண்ட நாட்களுக்கு உயிர்வாழ முடியாது என்று நினைத்ததாலேயே உண்மையை வெளிப்படுத்தியதாகவும் கூறினார். உண்மையை வெளிப்படுத்தியபோது அவருக்கு வயது 101. இந்த நிகழ்ச்சி நடந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு, 2000ஆம் ஆண்டு அந்த ஸ்பெஷல் கொடியை ஒலிம்பிக் கமிட்டியிடம் ஒப்படைத்தார் அவர். சுவிஸர்லாந்தில் இருக்கும் ஒலிம்பிக் மியூசியத்தில் இன்றும் பாதுகாக்கப்படும் அந்தக்கொடியை பத்திரமாக சேதமடையாமல் திருப்பித்தந்ததற்காக Hal Haigக்கு நன்றி(!) தெரிவித்தது ஒலிம்பிக் கமிட்டி.
No comments:
Post a Comment