Friday, January 4, 2019

ஒட்டகப்படை


1840ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ஆஸ்திரேலியாவில் ஒட்டகங்களே கிடையாது. ஆஸ்திரேலிய நிலப்பரப்பில் பயணம் செய்வதற்கு வசதியாகவும் பொருட்களை எடுத்துச்செல்லவும் ஒட்டகங்கள் தேவைப்பட்டன. இதற்காக இதற்காக இந்தியாவிலிருந்து 1840-ல் 6,000 அரேபிய டிரோம்டாரிஸ் வகை ஒட்டகங்களையும் 1,000 மத்திய ஆசிய இரு திமில்கொண்ட பேக்டேரியன் ஒட்டகங்களையும் இறக்குமதி செய்தது அப்போது ஆட்சியில் இருந்த பிரிட்டீஷ் அரசு. இவற்றில் இரு திமில்கள் கொண்ட ஒட்டகங்கள் கடும் வெப்பப் பகுதியான வட ஆஸ்திரேலியப் பகுதிகளில் தாக்குப்பிடிக்க முடியாமல் அழிந்து போயின. ராஜஸ்தான், அரேபியா போன்ற வெப்பநிலை கொண்ட வடக்கு ஆஸ்திரேலியாவில் ஒரு திமில்கொண்ட இந்திய ஒட்டங்கள் எக்கச்சக்கமாக வளர்ந்திருக்கின்றன. 
ஆஸ்திரேலியா மட்டுமல்ல, அமெரிக்காவிலும் கூட ஒட்டக இறக்குமதி நடந்தது. 1850களில் நடந்த இந்த இறக்குமதியால் அதிகம் பலனடைந்தவர்கள் கலிஃபோர்னியா, அரிசோனா போன்ற வரண்ட நிலப்பகுதிகளில் வசித்த மக்களே.. அமெரிக்க ஆர்மியில் குதிரைப்படை மாதிரி கொஞ்ச காலம் ஒட்டகப்படை கூட இருந்தது. ஆனால் வெளியிலிருந்து வந்த ஒட்டகங்களை படை வீரர்களுக்குப் பிடிக்கவில்லை, ஒட்டகங்களும் அவர்களோடு ஒட்டவில்லை. நாளடைவில் இந்தப்படை கலைக்கப்பட்டுவிட்டது. 

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !