Tuesday, January 15, 2019

கண்ணு கெட்டுப்போய்டும் கண்ணா!!

பயங்கர சுவாரஸியமான புத்தகம் ஏதாவதொன்றை கீழே வைக்க மனமில்லாமல் படித்துக்கொண்டிருக்கும் நாளில், அம்மா முதல் அந்த வழியாகக் கடந்து செல்லும் வாண்டூஸ் வரை “குறைவான வெளிச்சத்தில் புத்தகம் படிக்காதே.. கண்ணு கெட்டுப்போய்டும்” என்று அட்வைஸ் மழை பொழிந்திருப்பார்கள். “என்னைக்காவது பாடபுத்தகத்தை இப்படிப் படிச்சிருப்பியா” என்று போகிறபோக்கில் சந்தில் சிந்துபாடும் வேலைகளும் நடந்தேறும். உண்மை என்னவென்றால், குறைவான வெளிச்சத்தில் புத்தகம் படிப்பதால் நம் கண் பார்வையில் எந்தப் பிரச்னையும் வராது. வரும் என்று இதுவரை எந்த அறிவியல் ஆராய்ச்சியிலும் நிரூபிக்கப்படவில்லை. குழந்தைகளைச் சீக்கிரம் தூங்கவைக்க, பெற்றோர்கள் கண்டுபிடித்த ட்ரிக்காக இருக்கலாம் இந்தக் “கண் கெட்டுவிடும்” கதை.

குறைவான வெளிச்சத்தில் படிப்பதால், கண்கள் சோர்வடைந்துவிடும் என்பது மட்டுமே உண்மை. அதற்குக் காரணமும் நாமறிந்ததே. அதிக வெளிச்சத்தில் படிப்பதை விட, குறைந்த வெளிச்சத்தில் படிக்கும்போது நம் கவனம் புத்தகத்திலிருக்கும் வார்த்தைகள் மீது அதிகம். கண்களும் ஓவர் டைம் வேலை செய்தாகவேண்டிய கட்டாயம். இதனால் கண்களுக்கு வரும் சோர்வு, இரண்டு நாட்கள் நன்றாகத் தூங்கி எழுந்தால் தானாகவே சரியாகிவிடும்.
இடைவிடாமல் தொடர்ந்து பொட்டி தட்டிக்கொண்டிருப்பவர்களுக்கும், உற்றுப்பார்த்தே வேலை செய்யவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களுக்கும் நாளடைவில் கண் பார்வையில் குறைபாடு ஏற்படும். ஈபுக்ஸ் படிக்கவேண்டும் என்றால், இருட்டில் கம்ப்யூட்டரிலோ, டேப்லெட்டிலோ படிப்பதை விட, வெளிச்சத்தில் படிப்பது சாலச்சிறந்தது.  அல்லது ஈ-இங்க் ரீடர்களிலோ படிப்பது பிரச்னை இல்லாதது.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !