பாதாம் பருப்பில் இனிப்பு, கசப்பு என்று இரண்டு வகைகள் உள்ளன. இதில் இனிப்பு வகை பாதாம்தான் நாம் உபயோகிக்கக்கூடியது. கசப்பான பாதாம் நச்சுத்தன்மை வாய்ந்தது. இந்த வகை பாதாமில் glycoside amygdalin என்ற வேதிப்பொருள் இருக்கிறது. நம் உடலினுள் சென்றவுடன் இவ்வேதிப்பொருள் ஹைட்ரஜன் சயனைடாக மாறி, நம்மைத் தின்றுவிடுகிறது. இந்த ஹைட்ரஜன் சயனைடு தான் ஹிட்லரின் நாசி கேம்ப்களில் தண்டனைகளை நிறைவேற்றப் பயன்பட்ட விஷவாயுவில் அதிக அளவு உபயோகப்படுத்தப்பட்டது.
நம் உடம்பில் ஒரு கிலோவில் விஷத்தை ஏற்ற, 1.2 மில்லிகிராம் ஹைட்ரஜன் சயனைடு போதுமானது. அப்படிப்பார்த்தால், ஓரிரு கைப்பிடிகள் நச்சுத்தன்மையுடைய பாதாம் போதும், நமக்கு மொத்தமாக டாட்டா சொல்ல. ஆகவே மக்களே, யாராவது, இது பாதாம் மரம் என்று சொன்னால், அதன் பாதாமை அவசரப்பட்டு சாப்பிட்டுவிடாதீர்கள்.
No comments:
Post a Comment