Thursday, January 3, 2019

கூந்தல் பராமரிப்பு

கூந்தல் பராமரிப்பு

கூந்தலுக்கு எளிமையான வைத்தியம் ஆரோக்கியமான 
பெண்களுக்கான கூந்தல் பிரச்சினைகள் பற்றி பார்ப்போம்.
வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் முடி சுத்தமாக இருக்கும். இதனால், பேன், பொடுகு அண்டாது. எண்ணைய் தடவாத தலைமுடி வறண்டு போகும் போது, அடுத்தவர்களிடம் பேன் இருந்தால் அது நம் தலையில் தொற்றிக்கொண்டு விடும். தலையில் எண்ணைய் தேய்த்து சீப்பால் வாரும்போதே பேன் தலையில் தங்காமல் வெளியே வந்துவிடும். அதேபோல சுருட்டையான முடியில் பேன்கள் வந்தால் சீக்கிரத்தில் போகாது. தினமும் எண்ணைய் தடவி சீப்பால் படிய வாரிக் கொண்டால், பேன் தொல்லை இருக்காது. அவசர கதியில் எண்ணைய் தடவாமல் விட்டாலும் பேன் இரண்டு மடங்காகப் பெருகிவிடும். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு தலையில் பேன் அண்டாமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியம். இந்த வயதில் ஏற்படக்கூடிய பேன் தொல்லைக்கு, பேன் போக்கும் தைலத்தை நன்கு தலையில் தேய்த்து, நன்கு சீவி அரை மணி நேரம் ஊறவிட வேண்டும். பின்னர், கடலைமாவு இரண்டு டீஸ்பூனுடன் ஒரு டீஸ்பூன் சீயக்காய்த்தூள் கலந்து, தலையை அலச வேண்டும். வாரம் இருமுறை இவ்வாறு செய்வது நல்லது. பேன் தொற்றி இருந்தால் உடனே அவை வெளியே வந்து விடும். கடையில் விற்கும் கெமிக்கல் கலந்த ஷாம்புவைப் பயன்படுத்தி தலையை அலசுவதால், பேன் மேலும் பெருகி காது, கழுத்து ஓரங்களில் ஈறு ஒட்டிக்கொள்ளும். அப்போது தலையை சொரிந்துகொண்டே இருப்பதால் தலையில் புண் ஏற்பட்டு விடும். மேலும், பேனும் ஈறும் சுலபமாக மற்றவருக்கும் தொற்றிக் கொள்ளும். தலைமுடியைச் சுத்தமாக வைத்திருப்பதை சின்ன வயதிலிருந்தே குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது மிகவும் அவசியமாகும்.  
சீயக்காய் 1 கிலோ, பஞ்சு கடுக்காய் 100 கிராம், வெந்தயம் கால் கிலோ, பச்சை பயறு கால் கலோ, உலர்ந்த செம்பருத்தி 100 கிராம் ... இவற்றை மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். 
இந்த கடுக்காய் மிக்ஸர் தூளை ஆயில் பாத் எடுக்கும் போதெல்லாம் தலைக்கு தேய்த்து குளித்துவந்தால் , கொஞ்ச நாளிலேயே பொடுகு, அரிப்பு, செதில், பேன் உள்பட சகலத்தொல்லைகளும் போய்விடும். 
தலைமுடி மின்ன, ஒரு எளிய சிகிச்சை ... 
முத்தின கடுக்காய் தோல் 5, பூந்திக்கொட்டை தோல் 5 இரண்டையும் தண்ணீரில் நன்றாக கொதிக்கவிடுங்கள். அந்த நீரை தலையை அலசும்போது பயன்படுத்தினால் முடி பளபள வென மின்னும் புருவம், இமை பகுதிகளில், இந்த நீரை பஞ்சினால் தொட்டு தடவி வர, முடி உதிர்வது நின்று நன்றாக வளரத்தொடங்கும். ஓமத்தைக் கொண்டு, பொடுகுத் தொல்லையையும் போக்க முடியும். நரை, இளநரைத் தடுக்கும் அந்த ஸ்பெஷல் எண்ணெய் ... 
கால் லிட்டா் தேங்காய் எணணெயை அடுப்பில் வைத்து சூடாக்குங்கள். புகைய காய்ந்ததும் அடுப்பை அணைத்து விட்டு, புகை கொஞ்சம் அடங்கியதும் அதில் 25 கிராம் ஓமத்தைப் போடுங்கள். படபடவென பொரிந்து, பிறகு சப்தம் அடங்கி ஆறியதும் அந்த எண்ணெயை ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்துங்கள் இந்த எண்ணெயை தினசரி தலையில் தடவி வந்தால் பொடுகுத் தொல்லை அடியோடு நீங்கிவிடும் பொடுகு திரும்ப வரவே வராது.
ஆரோக்கியமான கூந்தல் உள்ளவர்களும் கூட இதனை பயன்படுத்தலாம். முடி மேலும் செழுமையாகும். முடி வளர்ச்சிக்கு மட்டுமல்ல, ஓமம் சேர்த்த இந்த எண்ணெய், சளி தொல்லையை நீக்கும். தலையில் நீர் கோர்த்திருந்தால் அதைக் குணப்படுத்தும். எண்ணெயைத் தடவினால் தலை தேங்காய் வலிக்கிறது என்பவர்கள் இந்த எண் 
ணெ யை சந்தோஷமாகத் தேய்க்கலாம். தலைவலி தொந்தரவு இருக்காது. முடியும் அதிக பளபளப்போடு இருக்கும். 
பொடுகு இல்லை ... ஆனால் அநியாயத்துக்கு முடி நரைக்குதே என்று கவலைப்படுபவர்களுக்கான நிவாரணி இந்த ஓம எண்ணெய் ...
பச்சை கறிவேப்பிலையை அரைத்தெடுத்த விழுது 10 கிராமும், கொட்டை நீக்கப்பட்ட பெரிய நெல்லிக்காயை அரைத்தெடுத்த விழுது 10 கிராமும் எடுத்துக் கொள்ளுங்கள். கால் லிட்டர் நல்லெண்ணெயைக் காய்ச்சி, அரைத்து வைத்துள்ள விழுதுகளை அதில் போட்டு, சடசட சப்தம் அடங்கியதும் அடுப்பை அணைத்துவிடுங்கள். கால் லிட்டர் தேங்காய் எண்ணெயைக் காய்ச்சி, புகை வரும்போது அடுப்பை அணைத்து, அதில் 25 கிராம் ஓமத்தைப் போடுங்கள். ஆறியதும் இந்த எண்ணெயோடு நல்லெண்ணெய் கலவையில் பாதியளவு எடுத்து, கலந்து வையுங்கள். இந்த எண்ணெயை தினமும் தலையில் தடவி வர இளநரை விட்டால் போதும் என்று ஓடிவிடும் 

நரையை விரட்ட ...

அடிக்கடி தலைமுடியை கட் பண்ண பியூட்டி பார்லர் போகிறவர்கள், சொந்தமாக ஒரு கத்திரிக்கோலை எடுத்துச் செல்வது நல்லது. டை போட்டவர்களுக்கு பயன்படுத்திய கத்திரிக்கோலை நமக்கு பயன்படுத்தினாலும் முடி நரைக்க ஆரம்பித்துவிடும் .
இருபத்தைந்து வயதினருக்கும் இளநரை வரலாம். 
ஒரு கப் கறிவேப்பிலையுடன், ஒரு கப் நல்லெண்ணைய் கலந்து காய்ச்சி வாரம் ஒரு முறை இளம் சூடான தலையில் தேய்த்து சீயக்காய்ப் போட்டு அலசிவர , இளநரை இருந்த இடம் தெரியாது. கறிவேப்பிலையை அரைத்துச் சாறு எடுத்து, மோரில் கரைத்துக் குடிப்பதாலும் இரும்புச் சத்து கிடைத்துவிடும். முடி உதிர்தல் மற்றும் இளநரைக்கும் இதன் மூலம் தீர்வு கிடைக்கும். 
தலை முடியானது, திடீரென ஏதோ ஒரு காரணத்தால் கருமை குறைந்து போகக்கூடும். இளநரைகூட எட்டிப் பார்க்கலாம். இது போன்ற சந்தர்ப்பங்களில் உங்களுக்குக் கை கொடுக்கிறது வெட்டி வேர் தைலம் இது முடியின் வளர்ச்சியைத் தூண்டுவதோடு, கருகருவெனவும் பராமரித்து, உங்கள் இளமையைத் துள்ள வைக்கும். 
எண்ணைய்ப்பசை அதிகமாக இருந்தால் வாரம் இருமுறை கண்டிப்பாக தலையை நன்கு சுத்தம் செய்ய வேண்டும் இதற்கு தேவையானவை ... 
கடலைப்பருப்பு - 500 கிராம் 
பூலாங்கிழங்கு - 100 கிராம்
வெட்டிவேர் - 25 கிராம் 
வெந்தயம் -50 கிராம் 
இவற்றை நன்கு அரைத்துக் கொண்டு, சலித்து வைத்துக் கொள்வது அவசியம். இந்தத்தூளில் இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் அளவுக்கு எடுத்து சூடான நல்ல தண்ணீரில் கரைத்து தலைமுடியை நன்கு அலசவும் இது, வேர்க்கால்களில் உள்ள அழுக்கு, எண்ணைப்பசையை அகற்றி தலையை நன்கு சுத்தம் செய்வதோடு, வியர்வை நாற்றத்தையும் போக்கி நல்ல வாசனையைக் கொடுக்கும். 

கருகரு கூந்தல் இருந்தால் மட்டும் போதுமா? விளம்பரப் படங்களில் வருவதுபோல அலைபாயும் நீண்ட கூந்தலுடன் நடை போட முடியலையே என்று ஏங்குபவர்களா நீங்கள் உங்களுக்கும் கை கொடுக்கிறது கடுக்காய் ... 
பிஞ்சு கடுக்காய் -100 கிராம் 
முத்தின கடுக்காய் - 100 கிராம்

இரண்டையும் வெயிலில் உலர்த்தி பொடி செய்து கொள்ளுங்கள். இதனுடன் 20 கிராம் சுருள்பட்டை, கட் பண்ண 100 கிராம் வெட்டி வேரையும், கால் கிலோ தேங்காய் எண்ணையுடன் சேர்த்து கலந்து விடுங்கள். 
தினந்தோறும் கூந்தலுக்கு இந்தத் தைலத்தை தடவி வந்தால், நீநீநீ ... ளமாக கூந்தல் வளர்வது நிச்சயம். கூந்தலில் மட்டுமல்ல, புருவம், இமைகளிலும் இந்தத் கண் 
தை ல த்தை தடவலாம். கண் , இமை, முடிகள் அடர் புருவ த்தியாக வளரத் தொடங்கும். 
வீஸிங் தொல்லை இருபவர்களும், பயமின்றி இந்தத் தைலத்தை பயன்படுத்தலாம். கடுக்காய்க்கு நீரை உறிஞ்சும் தன்மை இருப்பதால் சளியோ, தலைவலியோ வரவே வராது. 


முடி உதிர்வதை தடுக்க ...
அரைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, கறிவேப்பிலை, கற்பூரவல்லி, வெந்தயக்கீரை இந்த ஐந்து இலைகளையும் தலா ஒரு கப் எடுத்து, அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதை ஒரு கப் தேங்காய் எண்ணெயில் போட்டு பச்சை நிறம் மாறாமல் காய்ச்சி இறக்கிவிடுங்கள் 
இதை ஒரு பாட்டிலில் சேமித்து ஒருநாள் வைத்திருந்தால் தெளிந்து விடும். தெளிந்த எண்ணையைத் தனியாகப்பிரித்து சேமியுங்கள். அதை வாரத்தில் இரண்டு நாட்கள் தலையில் தேய்த்து, சீயக்காய் போட்டு அலசினால் ... கூந்தல் உதிர்வது நின்று விடும். அது எந்தக் காரணத்தினாலும் உதிர்ந்தாலும் தடுத்து நிறுத்த வேண்டிய வேலையை இந்தக் கீரைத் தைலம் பார்த்துக் கொள்ளும் .
சரியாகச் சாப்பிடாமல் ரத்த சோகையால் முடி கொட்டுகிறது என்றால் ... அதை அரைக்கீரை நிவர்த்தி செய்துவிடும். இந்தத் தைலத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் கறிவேப்பிலை ... இளநரைக்கு தடை போடும். உடல் உஷ்ணத்தால் முடி கொட்டிக் கொண்டிருந்தால் அதை தடுத்து நறுத்தும் வேலையை பொன்னாங்கண்ணி பார்த்துக் கொள்ளும் 
பொடுகு அரிப்பினால் முடி வளர்வது தடைபட்டால் வெந்தயக்கீரை அதை நிவர்த்தி செய்வதோடு ... மிருதுவாகவும் மாற்றி வைக்கும். உணவு பழக்கத்தாலும் முடி உதிர்வதுண்டு ... இதன் காரணமாக முடி உதிராமல் ... கட்டுக்குள் கொண்டு வர கற்பூரவல்லி உதவும். 

நன்றி. மாலை மலர்

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !