கிச்சடி வகைகள்
மசாலா கிச்சடி தேவையான பொருட்கள்
தோலுடன் உடைத்த பாசிப்பருப்பு - ஒரு கப்
பாஸ்மதி அரிசி - அரைகப்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
நன்கு பழுத்த தக்காளி - 3
பச்சை மிளகாய் - 1
மிளகாய்தூள் - ஒரு டீ ஸ்பூன்
பட்டை - 1
நெய், எண்ணெய் - தலா ஒரு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறைபாசிப்பருப்பையும் அரிசியையும் ஒன்றாக சேர்த்துக் கழுவி 4 கப் தண்ணீர் விட்டு சிறிது உப்பு, மஞ்சள்தூள், ஒரு டீ ஸ்பூன் நெய் சேர்த்து குக்கரில் வேகவிடவும். 2 விசில் வந்ததும் தீயைக்குறைத்து 3 நிமிடம் கழித்து இறக்கி வைத்துக்கொள்ளவேண்டும். கடாயில் எண்ணெய் மற்றும் நெய்யை காயவைத்து பட்டை போட்டுத்தாளித்து பச்சைமிளகாயை கீறி அதனுடன் சேர்க்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்கி, வெந்த பருப்பு சாதத்துடன் சேர்க்கவும். நன்கு கலந்து கறிவேப்பிலையை கிள்ளிப்போட்டு பின்னர் சூடாக பரிமாறலாம். சுவையான மசாலா கிச்சடி மணமணக்கும் நாவிற்கும் மனதிற்கும். **************************************************************************
அரிசி கிச்சடி
தேவையானவை
அரிசி=2 ஆழாக்கு
பச்சைப்பருப்பு= அரை ஆழாக்கு
பெரிய வெங்காயம்=2 நீளமாக நறுக்கியது
பூண்டு= 10 பல்லு
பச்சை மிளகாய் = 10 நீளமாக கீறியது
தேங்காய் துருவியது = அரை தேங்காய்
நெய் = அரை குழிகரண்டி
இலவங்கம் = 4
பட்டை = 2
ஏலக்காய் = 4
எண்ணெய் = ஒரு குழி கரண்டி
உப்பு தேவையான அளவு
செய்முறை
இதை குக்கரிலேயே செய்யலாம்.
முதலில் அரிசி மற்றும் பச்சை பருப்பை அரை மணிநேரம் ஊரவைக்கவும்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் மற்றும் நெய் விட்டு பட்டை இலவங்கம் ஏலக்காய் போட்டு பொரிந்தவுடன் வெங்காயம் போடவும். சிறிது வதங்கியவுடன் பச்சை மிளகாய் பூண்டு போட்டு வதக்கவும். அடுத்து தேங்காய் துருவலை போட்டு வதக்கவும். 5 ஆழாக்கு தண்ணீர் சேர்த்து அதில் ஊரவைத்த அரிசி மற்றும் பாசிப்பருப்பு தேவையான அளவு உப்பு போட்டு வேகவைக்கவும். இப்போது அருமையான அரிசி கிச்சடி தயார். இதை சூடாக மாங்காய் தொக்கு ஊறுகாயுடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.*****************************************************************************
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே
Popular Posts
-
ஓர் ஊரில் , வணிகன் ஒருவன் இருந்தான் . பணக்காரனான அவன் சரியான கஞ்சன் . எனவே , முட்டாளான ஒருவனை வேலைக்காரனாக வைத்திருந்தான் ...
-
சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன . ஒரு நாள் சிஙகம் பசுவைக் கொன்றது . கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்...
-
1. மண்ணுக்குள்ளே கிடப்பான் மங்களகரமானவன் அவன் யார் ? 2. கொம்பு நிறைய கம்பு அது என்ன ? 3. ஆடும் வரை ஆட்டம் , ஆடிய பின் ...
-
பசி தாங்க முடியாத எலிகள் இரண்டு தாங்கள் ஒளிந்திருந்த வீட்டின் சமயல் அறைக்குள் புகுந்தன . அங்கே ஒரு பெரிய பானை நிறைய பால்...
-
குறிப்பு சட்டகம் முன்னுரை வள்ளுவரின் கருத்து ஒளவையாரின் கருத்து உழவின் முக்கியத்துவம் முடிவுரை முன்னுரை ஆதிகாலம் தொட்டு இன்று வரை தமிழர்கள...
-
செ வலைக்கோழி பத்து முட்டைகளை இட்டது . அந்தப் பத்து முட்டைகளையும் இருபத்தியொரு நாள்கள் அடைகாத்தது . இருபத்தியோராம் நாள் முட்டைகள...
-
1. பழமொழி/Pazhamozhi உப்பிட்டவரை உள்ளளவும் நினை. பொருள்/Tamil Meaning உனக்கு உதவி செய்தவரை என்றும் மறவாதே. Transliteration ...
-
ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார் . தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இர...
-
ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது . அப்போது ஒரு கறுப்பு மானையும் புள்ளி மானையும் கண்டது . அவை இரண்டும் மலைய...
-
கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது . ஒரு ஒடுக்கமா...
Featured Post
ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு அமுதம்விளையும் பேசும் பொற்சித்திரமே அன்பு மனம் மா...
About Blog
உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !
No comments:
Post a Comment