Tuesday, January 1, 2019

இட்லி வகைகள்


                                                  பூசணி இட்லி 

தேவையானவை:

இட்லி மாவு - 2 கப்,
அரைத்த வெள்ளைப் பூசணி விழுது - 2 கப்,
உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

வெள்ளைப் பூசணியை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

தேவைக்கு ஏற்ப சிறிது உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

இட்லி மாவில் பூசணி விழுதைச் சேர்த்துக் கலக்கவும்.

கலக்கிய பின், வழக்கம் போல் இட்லி தட்டுக்களில் வார்த்து, வேகவைத்து எடுத்தால் பஞ்சுபோன்ற இட்லி கிடைக்கும்.

மருத்துவப் பயன்:

உடம்பில் தேவை இல்லாமல் சேர்ந்திருக்கும் நீரை அகற்றும். பெண்களுக்கு ஏற்படும் அதிகமான ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும். உடலில் உள்ள பித்தத்தைத் தணிக்கும் தன்மை கொண்டது.

****************************************************************************                                         
                                                 மூலிகை இட்லி
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி = 250 கிராம்
உளுந்து  = 175 கிராம்
துளசி இலை = ஒரு கைப்பிடி
தூதுவளை இலை = ஒரு கைப்பிடி
கற்பூரவல்லி இலை = ஒரு கைப்பிடி
உப்பு தேவையான அளவு
 


செய்முறை
 

அரிசி மற்றும் உளுந்தை ஊறவைத்து எடுத்து இட்லி மாவு பதத்தில் அரைத்துக்கொள்ளவும். சுமார் 6 அல்லது 7 மணி நேரம் அதனை வைத்திருந்து புளிக்கவிடவும். மூலிகை இலைகளை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும். 

பிறகு அந்த இலைகளை மாவுடன் அரைத்து அல்லது அப்படியே கலந்து தேவையான உப்பையும் சேர்த்துக்கொண்டு வழக்கமாக இட்லி போல் ஊற்றிக்கொள்ளவேண்டும். இப்போது சுவையான மூலிகை இட்லி தயார். 

இதனை குழந்தைகளுக்கு கொடுக்க சளி இருமல் போன்றவை குணமாகும். 

********************************************************************************
மேலும் பல வகையான இட்லிகளை மீண்டும் காண்போம்

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !