நத்தைகளின் உடலிலிருந்து வெளிப்படும் மெல்லிய திரவம், கத்தி போல் கூர்மையான பகுதியின் மீது நத்தைகள் ஊர்ந்து வந்தால் கூட அவற்றிற்கு காயம் ஏற்படாமல் பாதுகாக்கிறது. நத்தைகளுடனே சேர்ந்து, அவற்றின் ஓடுகளும் வளர்கின்றன. கால்சியம் கார்பனேட்டால் ஆன இந்த ஓடுகள், நத்தைகளின் உணவிலிருந்தும் மண்ணிலிருந்தும் உருவாக்கப்படுகின்றன. எந்தப்பக்கம் வேண்டுமானாலும் நகரும் நத்தைகள், அடிக்கடி வட்டப்பாதையைத் தேர்ந்தெடுப்பதன் மாயமென்ன என்று இதுவரை தெரியவில்லை. இனப்பெருக்கத்திற்குத் தேவையான ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் ஒரே உடலில் அமையப்பெற்ற விலங்குகளில் நத்தைகளும் ஒன்று. 15 ஆண்டுகள் வரை உயிருடன் வாழும் நத்தைகள், மூன்று ஆண்டுகள் வரை தொடர்ந்து தூங்கும் திறன் பெற்றவை.
இவை எல்லாவற்றையும் விட அதிமுக்கியமான செய்தி என்னவென்றால், ”Snail Facial Treatment”. ஜப்பான் பியூட்டி பார்லர்களில் ஃபேமசான இந்த ”Snail Facial Treatment” தற்போது யூ.கே போன்ற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முகத்தில் மூன்று நத்தைகளை மேலும் கீழுமாக நகரவிட்டு செய்யும் ஃபேஷியல் ட்ரீட்மெண்ட் இது. Anti-Aging எனப்படும் முகத்திலுள்ள சுருக்கங்களைக் குறைத்து இளமையான தோற்றத்தை இந்த Snail Facial Treatment தருவதாக இதில் பயிற்சிபெற்றவர்கள்(!!) சொல்கிறார்கள். இங்கிலாந்தில் ஒரு முறை இந்த ட்ரீட்மெண்ட்டுக்கு ஆகும் செலவு, அதிகமில்லை ஜெண்டில்மேன்..ஜஸ்ட் 50 பவுண்டுகள் தான். ஆர்வமிருப்பவர்கள் “Snail Facial Treatment” என்று கூகுளாண்டவரிடம் வரம் கேட்டுப்பெறவும்.
No comments:
Post a Comment