இந்த வீடியோ கேம்ஸ்/கம்ப்யூட்டர் கேம்ஸ் இவற்றிலெல்லாம் பெண்களை விட ஆண்களுக்கு இருக்கும் அதிக ஆர்வத்தின் பின் ஒரு அறிவியல் காரணத்தைக் கண்டுபிடித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். நம் மூளையில் இருக்கும் “mesocorticolimbic”(தமிழில் என்னவென்று யாருக்காவது தெரியுமா?) என்ற பகுதி, “Reward and Addicion” இவற்றுடன் தொடர்புடையது. எளிமையாக சொன்னால், Reward-ஒரு வேலையை வெற்றிகரமாக செய்துமுடிக்கும்போது நமக்குக் கிடைக்கும் பரிசு; Addiction – பரிசு செய்யும் மாயத்தால் அந்த வேலைக்கு நாம் அடிமையாவது. ஆண்களின் மூளையிலிருக்கும் mesocorticolimbic பகுதி, வீடியோ கேம்ஸ் விளையாடும்போது கிடைக்கும் வெற்றிக்கு(Reward) பெண்களின் mesocorticolimbic பகுதியை விட அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறது(!!).. ஆண்கள் அதிகம் வீடியோ கேம்ஸுக்கு அடிமையாவதன் காரணம் இதுவே. மட்டுமல்லாமல், ஆண்களுக்கு தங்கள் எல்லைகளை விரிவுபடுத்துவதிலும் வெற்றிகொள்வதிலும் இருக்கும் அடிப்படையான ஆர்வம் தான் வீடியோ கேம்ஸ் இண்டஸ்ட்ரியை வாழவைத்துக்கொண்டிருக்கிறது.
பொதுவாகவே, மூளையின் செயல்பாடு குறித்து செய்யும் ஆராய்ச்சிகளில் முக்கியப்பங்கு இந்த “Reward and Addiction”க்கு தான். யோசிக்கவே வேண்டாம்..தலைவனின் வீடியோ/கம்ப்யூட்டர் கேம்ஸ் ஆர்வம்தான் இந்த டாபிக்கை நான் கூகிள் செய்ய முக்கியக்காரணம்.
No comments:
Post a Comment