உண்மையில் நட்சத்திரமீன்கள், மீன்களே அல்ல. அவை Asteroidea என்ற குடும்பத்தைச் சார்ந்த கடல்வாழ் உயிரினங்கள். நட்சத்திரம் போன்ற உருவ அமைப்பே இவற்றின் பெயர்க்காரணம். ஐந்து கைகளை உடைய நட்சத்திர மீன்களைத்தான் அதிகம் பார்த்திருப்போம். 20 முதல் 40 கைகள் உடைய மீன்களும் இருக்கின்றன. உப்புத் தண்ணீரில் மட்டுமே காணப்படும் இந்த உயிரினத்திற்கு cardiac stomach மற்றும் pyloric stomach என்று இரண்டு வயிறுகள் இருக்கின்றன. இவற்றின் ஒவ்வொரு கையின் முனையிலும் ஒரு கண் அமைந்துள்ளது. இந்தக் கண்கள் சுற்றிலுமிருக்கும் அசைவுகளையும், இருட்டு/வெளிச்சத்தையும் கண்டுபிடிக்க உதவுகின்றன.
பல்லியின் வால் மாதிரி, நட்சத்திர மீனின் கைகளில் ஒன்று துண்டானால், ஒரே வருடத்தில் அவை மீண்டும் வளர்ந்துவிடும். நட்சத்திர மீன்களுக்கு மூளை கிடையாது. அவற்றின் உடம்பில் இரத்தமும் கிடையாது. இரத்தத்தின் இடத்தை கடல் நீர் நிரப்புகிறது. தங்கள் பாலினத்தை மாற்றிக்கொள்ளும் தன்மை நட்சத்திர மீன்களுக்கு உண்டு. ஒரு பெண் மீனால் ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 1.3மில்லியன் முட்டைகளை இடமுடியும். இவற்றின் அதிகபட்ச வாழ்நாள் 35 வருடங்கள்.
No comments:
Post a Comment