Sunday, January 27, 2019

2000 அடி ஐஸ் கப்பல்

இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனி ஆயுதம் தாங்கிய கப்பல்களால் பிரிட்டனைத் தாக்கிக்கொண்டிருந்த சமயம், பிரிட்டன் பதிலடி கொடுக்க ஏதாவது செய்யவேண்டிய கட்டாயம். போரினால் இரும்பு, அலுமினியம் போன்ற கப்பல் கட்ட உதவும் உலோகங்களுக்கு ஏகப்பட்ட தட்டுப்பாடு இருப்பதைச் சுட்டிக்காட்டி, கப்பல்கள் மற்றும் ஆயுதங்கள் செய்ய மாற்று வழிகளை யோசிக்கச்சொல்லி தங்கள் அறிவியல் அறிஞர்களிடம் கூறியது பிரிட்டன்.
அந்தச் சமயத்தில் பிரிட்டனைச் சேர்ந்த Geoffrey Pyke என்ற சயிண்டிஸ்ட் கொடுத்த ஐடியாதான் 2000அடி நீளமும், 300 அடி அகலமும் கொண்ட ஐஸ் கப்பல். இந்தக் கப்பலுக்கு அவர் வைத்த பெயர் Habbakuk. எளிதில் கிடைக்கக்கூடிய, தட்டுப்பாடே வராத மூலப்பொருள், அது மட்டுமல்லாமல் Pyke சொல்லியிருந்த ஆயுதங்கள் தாங்கும் வசதி இவையெல்லாம் போதாதா பிரிட்டன் இந்த ப்ராஜெக்ட்டை ஏற்றுக்கொள்ள? 1942ஆம் ஆண்டு ஒரு விமானப் பயணத்தில் சர்ச்சிலிடம் சொல்லி, ஐஸ் கப்பல் ப்ராஜெக்ட்டுக்கு ஒப்புதல் வாங்கினார் Pyke.
சோதித்துப் பார்த்தபோது நாமாக உருவாக்கும் ஐஸ், பனிமலைகளை விட வலிமை குறைந்தது என்பதையும், அவற்றை உடைக்க ஒரு சின்ன சுத்தியல் போது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், ஐஸ் கப்பல் ப்ராஜெக்ட் கைவிடப்பட்டது. ஆனால் அதே ஆண்டு நியூயார்க்கில் இருந்த நிறுவனம் ஒன்று, பெரிய ஐஸ் கட்டிகளை உருவாக்கும் முன் அதில் பேப்பர் துகள்கள், மரத்துண்டுகள் போன்றவற்றைச் சேர்த்தனர். இவை ஐஸ் கட்டிகளைப் பலமானவைகளாக மாற்றின. அடுத்து அவர்கள் எதிர்கொண்ட பிரச்னை, ஐஸ் கட்டிகளை உருகாமல் பாதுகாப்பது எப்படி? Pyke அவர்களின் கப்பல் எப்போதும் 3டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையிலேயே வைத்திருக்கப்பட வேண்டும். இல்லையென்றால், கப்பல் தண்ணீராக மாறிவிடும் அபாயம். இதைச் சரிசெய்ய ஒரு மெகா சைஸ் குளிர்சாதனப்பெட்டி உருவாக்கப்பட்டது.
habbakuk
ஆரம்பகால பிரச்னைகளைச் சரிசெய்த பின், கனடாவிலிருக்கும் ஒரு ஏரிக்கரையோரம், ஐஸ் கப்பலின் மாதிரி வடிவம் ஒன்று உருவாக்கப்பட்டது. 30அடி அகலமும் 60 அடி நீளமும் கொண்ட இந்த ஐஸ் கப்பல் 1000டன் எடை கொண்டிருந்தது. Pyke சொன்ன ஐஸ் கப்பலின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், போரில் நேரடியாக இந்தக்கப்பல் தாக்கப்பட்டால் கூட கப்பலுக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் வராது.. மாதிரி வடிவம் சக்சஸாகவே, ஒரிஜினல் கப்பலைச் செய்ய ஆகும் செலவு 2.5மில்லியன் டாலர்கள்(தற்போது 32 மில்லியன் டாலர்கள்) என்று கணக்கிடப்பட்டது.
ஆனாலும், ஐஸ் கட்டியில் கலக்கத் தேவைப்பட்ட மரத்துகள்கள், பேப்பர் துகள்கள் ஆகியவற்றைத் தயாரிக்க ஆகும் செலவு, அதனால் நாட்டில் பொதுமக்களுக்கு ஏற்படப்போகும் பேப்பர் தட்டுப்பாடு இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டும், அந்தச் சமயத்தில் உருவாக்கப்பட்ட நீண்ட தூரம் பறந்து சென்று தாக்கும் புதுப்புது ஏவுகணைகள், கடலில் இருந்து தாக்குதல் நடத்த வேண்டியத் தேவையைக் குறைத்ததாலும், பிரிட்டன் அரசு ஐஸ் கப்பல் ப்ராஜெக்டைக் கைவிட்டது.
மாதிரிக்காக அவர்கள் உருவாக்கிய குட்டிக்கப்பல் கரைய கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கும் மேலானது.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !