Friday, January 25, 2019

100 பில்லியன் டாலர் அதிசயம்



அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் முதலிய நாடுகளால் விண்வெளியின் உருவாக்கப்பட்டு பூமியைச் சுற்றிக்கொண்டிருக்கும் International Space Station தான் மனிதர்களால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய செயற்கைகோளாகும். கிட்டத்தட்ட 357 அடிகள் நீளமுடைய இந்த செயற்கைகோளுக்குத் தேவையான மின்சாரம் இதில் அமைக்கப்பட்டுள்ள ஒரு ஏக்கர் பரப்பளவுள்ள சோலார் பேனல்கள் வழியாக உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு முறை பூமியைச் சுற்றி வர 90 நிமிடங்களை எடுத்துக்கொள்ளும் இச்செயற்கைகோள், 1998ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி முதல் இன்றுவரை 68,000 முறைகளுக்கும் மேலாக பூமியைச் சுற்றிவந்துவிட்டது..அதாவது ஏறத்தாழ 2.4பில்லியன் கிலோமீட்டர்கள். எந்ததொலைநோக்குக்கருவிகளின் உதவியுமின்றி நம் கண்களால் நேரடியாக இதை வானில் பார்க்க முடியும். எந்த நேரத்தில், உலகின் எந்தப்பகுதியிலிருந்து பார்க்கலாம் என்பதை நாசாவின் வெப்சைட்டில் காணலாம். இதன் மொத்த எடை 420,000 கிலோ கிராம். இச்செயற்கைகோளைக் கட்டி முடிக்க இதுவரை ஆன செலவு மட்டும் நூறு பில்லியன் டாலர்களைத் தாண்டும் என்பதைப் படித்தவுடன் கிராவிட்டி படத்தின் காட்சிகள்தான் ஞாபகத்திற்கு வந்தது.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !