ஒரு மான் இரை தேடுதலை முடித்துக் கொண்டு தன்னோட இரண்டு குட்டிகளை அழைத்துக் கொண்டு இருப்பிடத்துக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தது.
அப்போது மழை தூறல் ஆரம்பித்துவிட்டது. உடனே பக்கத்தில் இருந்த குகை போன்ற இடத்துக்கு குட்டிகளை கூட்டிப்போனது.
“மழை விட்டதும் கிளம்பிப்போகலாம்” என்று குட்டிகளிடம் கூறியது.
உள்ளே கிடந்த பொருள்களை பார்த்த மான் அதிர்ச்சியானது. காரணம், அங்கே கிடந்ததெல்லாம் காட்டு விலங்குகளோட எலும்புகள்.
மானுக்கு அது ஒரு சிங்கத்தோட குகைதான் அப்படின்னு தெரிஞ்சிடுச்சு. சீக்கிரம் வெளியே போவதுதான் நல்லது; அதனால மழை விட்டுடுச்சான்னு பார்க்க வெளியேவந்து பார்த்தது. மானுக்கு ஒரே பதற்றம்; ஏனென்றால் சற்று தூரத்தில் ஒரு சிங்கம் அந்த குகையை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது.
இதைப் பார்த்ததும் மான் வேகமாக குகைக்குள்ளே சென்றது; உடனடியாக தப்பிக்க ஒரு யோசனை செய்தது.
ஆபத்தான நேரங்களில் தப்பிக்க வேறுவழியே இல்லை என்கிறபோது, நாம் புத்திசாலியாக திட்டமிட்டு
நாம் நம் சக்திக்கும் அதிகமான துணிச்சலுடன் செயல் பட்டால்தான் தப்பிக்க முடியும் என்று மான் முடிவு செய்தது.
தன் குட்டிகளுக்கு ‘பளார்..பளார்’ என்று அறை விட்டது. அம்மா எதற்காக அறைகிறார் என்று புரியாத குட்டிகள் ‘ஓ’வென கதறி அழுதன.
சிங்கம் குகையின் அருகில் வந்ததை அறிந்து கொண்ட மான்,
“குழந்தைகளே சற்று முன்னர்தானே ஒரு யானையை வேட்டையாடி சாப்பிடக் கொடுத்தேன்; அது போதாமல் பசியால் அழுகிறீர்கள், இந்த குகையில் இருக்கும் சிங்கம் இப்போது வந்துவிடும்; வந்ததும் அதைக் வேட்டையாடி தருவேன்; அதுவரை அமைதியாயிருங்கள்” என்று சப்தமாகக் கூறியது.
ராஜா என்ன இத்தனை வேகமாக ஓடிவருகிறீர்”
“என்னோட குகைல என்னைவிட வலிமையான மிருகம் இருக்குது; அது குட்டிகளுக்கு என்னை உணவாக கொடுக்க பார்க்கிறது” என்று சிங்கம் பயந்தபடியே பதில் சொன்னது.
இனதக்கேட்ட நரிக்கு சிரிப்பு வந்துவிட்டது.
“சிங்க ராஜா உங்களைவிட வலிமையான மிருகம் எதுவும் கிடையாது” என்றது.
சிங்கத்துக்கு கோபம் தலைக்கேறியது,
” என்னையே மறுத்துப் பேசுகிறாயா, அந்தமிருகம் குட்டிகளோடு பேசியதை என் காதுபட கேட்டேன்”என்றது.
இதைக் கேட்ட நரி அந்த புது மிருகத்திடம் நல்ல பெயர் வாங்கிவிட்டால் காட்டிலே தான் மிகவும் செல்வாக்காக இருக்கலாம் என்று எண்ணியது. அதற்கு தந்திரமாக சிங்கத்தை அந்த மிருகத்திடம் கொண்டுபோய் விடவேண்டும் எனத் திட்டமிட்டது.
” சிங்க ராஜா, வாருங்கள், அதை என்னிடம் காட்டுங்கள்”என்றது நரி.
“அதன் பசிக்கு நான் இரையாகிவிட நீ தப்பித்து ஓடிவிட திட்டமா” என்றது சிங்கம்.
“ராஜா அப்படியெல்லாம் ஓடமாட்டேன்; வேண்டுமானால் ஒரு கயிற்றால் இருவர் கால்களையும் கட்டிக் கொள்ளலாம்” என நரி யோசனை சொன்னது.
இதன்படி கயிற்றின் ஒரு முனை சிங்கத்தின் காலிலும் மறுமுனை நரியின் காலிலும் கட்டப்பட்டது.
இந்நேரம் சிங்கம் நெடுந்தூரம் போயிருக்கும் என்று எண்ணி வெளியில் வந்த மான் சிங்கமும் நரியும் வருவதைக் கண்டது.
உடன் உள்ளே சென்று மீண்டும் முன்போலவே குட்டிகளை அழவைத்தது.
குழந்தைகளே, சத்தமாக அழாதீர்கள். உங்கள் சத்தத்தால்தான் சிங்கம் ஓடிப்போயிருக்கும். அநேகமாக சிங்கம் ஏதாவது ஒரு தந்திரம் மிக்க நரியை துணைக்கு அழைத்துவரும்; அதையும் சேர்த்தே சாப்பிடலாம்.சத்தம் போடாதீர்கள்” என்று உரக்கக் கூறியது. இதைக்கேட்ட சிங்கம் மீண்டும் தலை தெறிக்க ஓடத்தொடங்கியது.
ஈடுகொடுக்க முடியாத நரி,
“சிங்க ராஜா மெதுவாக ஓடுங்கள், என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை” என்று சத்தமிட்டது. எதையும் காதில் வாங்காமல் சிங்கம் நரியை கல்லிலும் முள்ளிலும் இழுத்தபடியே ஓடியது. நெடுந்தூரம் சென்றபின் நின்றது. பாவம் நரிக்கு உடலெல்லாம் காயம்பட்டு இரத்தம் கொட்டியது.
சிங்கமும், நரியும் ஓடிவிடவே வெளிவந்த மான் தன் குட்டிகளை பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு தன் இருப்பிடத்தை அடைந்தது.
இக்கதையினால் நாம் அறிவது:
ஆபத்து நேரத்தில் மான்போல புத்திசாலித்தனமாக விரைந்து முடிவெடுக்கவேண்டும்.
அடுத்தவர்களைஆபத்தில் சிக்கவைத்து தான் நன்மை பெற தந்திரம் செய்பவர் நரிபோல ஆபத்தில் சிக்கிக் கொள்வார்.
1 comment:
👍
Post a Comment