Wednesday, June 21, 2023

சுட்டி சுட்டி உன் வாலை கொஞ்சம் சுருட்டிக்கோ..

 ஒரு அழகான சின்ன வீடு, அதுல அம்மா, அப்பா , குழந்தைகள் என ஹாப்பியா இருந்தாங்க. அவங்க வீட்ல பூனை, நாய், கிளி என வீட்டு பிராணிகளை வளர்த்து வந்தாங்க. அவங்க வீட்ல ஒரு குட்டி பப்பி இருந்துச்சு. அதோட பேரு கிட்டோ . ரொம்ப சுட்டி தனம் கொண்ட குட்டி நாய் அது. அது பிறந்து 3 மாசம் தான் ஆகுது. பாக்குறது கொஞ்சம் புஸு புஸுன்னு இருக்கும். நல்ல வெள்ளை கலருல அங்க அங்க கொஞ்சம் கருப்பு கலர் புள்ளி இருக்கும். நீங்க 101 டால்மேஷன் படம் பார்த்திருக்கீங்களா அதுல வர குட்டி பப்பி மாதிரி நினைச்சுக்கோங்க..


குட்டி கிட்டோ எப்போவும் துரு துருன்னு இருக்கும். எதையாவது செஞ்சு எதுலையாச்சும் மாட்டிக்கும். அதுலயும் கிட்டோக்கு கூடைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். அதுல என்ன இருக்குனு தெரிஞ்சிக்க ரொம்ப ஆர்வமா இருக்கும். கூடைய பாத்துட்டா அத விடவே விடாது.


இப்போ ஒரு கூடையை பாத்துருச்சுனு வச்சிக்கோங்க அது உள்ள பொய் குதிச்சு விளையாடும். அந்த கூடைக்குள்ள உருண்டு விளையாடிட்டே இருக்கும். அத விட்டு வெளியவே வராது. அந்த கூடைக்குள்ள எதுவும் இல்லனா கிட்டோ உள்ள பொய் மண்டையில் மாட்டிகிட்டு அங்கேயும் இங்கயும் நடக்கும். வீட்டுக்கு புதுசா யாராச்சும் வராங்க அப்படினா, அச்சோ இந்த வீட்ல என்னடா கூடை நடக்குதுன்னு பதறி பாப்பாங்க. நம்ம கிட்டோ உள்ள இருப்பாரு. அவருதான் ரொம்ப குட்டி ஆச்சே, உள்ள இருக்குறது வெளியவும் தெரியாது. அந்த அளவுக்கு கிட்டோக்கு கூடைகள் மீது ஆர்வம் அதிகம்.

தீடிரென ஏதோ சீருற மாதிரி சத்தம் கேட்டுச்சு, ஏதோ கிட்டோ மூஞ்சில குத்துற மாதிரி , ஈரமா இருந்துச்சு. கிட்டோ முகத்துல ஏதோ கூர்மையான பொருளை வச்சு கீறின மாதிரி இருந்துச்சு. பாவம் நம்ம கிட்டோ! சட்டுனு கூடையை விட்டு வெளிய குதிச்சுது. பக்கத்துல இருந்த தண்ணி பௌல்ல தலையை விட்டுச்சு. 'அறிவிருக்கா குட்டி' பெரிய சத்தத்துடன் கிட்டோவோட அம்மா வந்துச்சு. ' அந்த பாஸ்கெட்ல தான் அந்த குண்டு பிளாஸ்ஸி வாழ்றாள். அவளோட பூனைக்குட்டிகளை அங்கதான பத்திரமா பாத்துக்குறா, அது உள்ள உன்ன யாரு தலையை விட சொன்னது' செம திட்டு நம்ம கிட்டோக்கு அவங்க அம்மாகிட்ட இருந்து. அதுக்கு அப்புறம் நம்ம கிட்டோ எந்த கூடை பக்கத்துலயும் போறது இல்ல. ஆகையால் குட்டிஸ் நம்ம கிட்டோ மாதிரி சில நேரங்களில் உங்கள் வால் தனங்களை சுருட்டி வச்சிக்கோங்க. நமக்கு தேவையில்லாத இடங்களுக்கு போக வேண்டாம். செஞ்சி பாத்துடலாம் என சுட்டிதனம் பண்ணாம ஸ்கூல் போறதுக்கு ரெடி ஆகுங்க. இன்னொரு கதைல நாம மீட் பண்ணலாம்.


No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !