ஒரு ஊரில் ஒரு தாயும் மகனும் வாழ்ந்து வந்தனர் அந்த தாய் பெயர் மந்த்ரா. மந்த்ராவின் பிள்ளை பெயர் அன்பு செல்வன்.
இவர்கள் ஓர் ஆலயத்தை மிகவும் ஏழ்மையான ஊராகும் மற்றும் அங்கு வேலை வாய்ப்பு அதிகம் கிடைக்காது.
இதன் காரணத்தினால் அன்புச்செல்வன் பக்கத்து கிராமத்திற்கு சென்று வேலை செய்வான்.
அன்புச்செல்வன் தனது தாயை பார்க்க வாரம் ஒருமுறை தனது கிராமத்தில் உள்ள வீட்டிற்கு செல்வான்.
ஒரு நாள் அப்படி தான் அன்புச்செல்வன் அவரின் தாயைப் பார்க்கச் சென்றான் அப்பொழுது அவன் தாய் நம் கிராமத்தில் மின்சாரத்தடை இரவெல்லாம் ஏற்படுகிறது அதனால் நீ பட்டினத்திற்கு செல்லும்பொழுது ஒரு லாண்டரி விளக்கை வாங்கி வா என்றாள்.
அதேபோல் இவனும் பட்டினத்திற்கு சென்றவுடன் ஒரு லாண்டரி விளக்கை வாங்கினான் ஆனால் இவனால் தன் கிராமத்திற்கு வர இயலவில்லை அதனால் அவனின் நண்பனிடம் கொடுத்து அனுப்பினான்.
அவர் நண்பனும் அன்புசெல்வம் தாயிடம் அந்த லாண்டரி விளக்கை ஒப்படைத்து விட்டு திரும்பிச் சென்றான்.
இரவில் மின்தடை ஏற்படுவதால் அன்புச்செல்வன் தாய் அந்த ஆண்டில் விளக்கை ஏற்றிவைத்து தூங்கிவிட்டாள்.
காலையில் எழுந்திருத்து பார்க்கும் பொழுது விளக்கின் அருகில் வைத்துள்ள பானை தங்கமாக மாறிவிட்டது. இதனை பார்த்த உடன் அன்புச்செல்வன் தாய்க்கு ஒன்றும் புரியவில்லை.
அன்புச்செல்வன் தாய் அடுத்த நாள் இரவில் அந்த விளக்கை தனது படுக்கைக்கு அருகில் வைத்து விட்டு தூங்கினால்.
தூங்கி எழுந்த பின் அந்த படுக்கை அறையானது தங்கமாக மாறி விட்டது இதனைக் கண்ட அந்த தாய்க்கு மிகவும் ஆச்சரியமும் மற்றும் சந்தோசமாகவும் இருந்தது.
இந்த விஷயத்தினை அன்புச்செல்வன் இடம் கிராமத்திற்கு வந்த வந்தபொழுது சொன்னாள்.
இந்த விஷயத்தை அறிந்த அன்புச்செல்வன் நண்பன் இந்த விளக்கை நாம்தானே கொடுத்து விட்டு வந்தோம் எப்படி இப்படி எல்லாம் நடக்கிறது என்று பொறாமைப் பட்டான்.
ஒருநாள் காலையில் அன்புச்செல்வன் வீட்டில் யாரும் இல்லாத வேளையில் அந்த லாண்டரி விளக்க அன்புச்செல்வன் நண்பன் திருடிச் சென்று அவன் வீட்டில் வைத்துக் கொண்டான்.
அதன்பின் இவனால் தனது பேராசையை பொறுக்க முடியாமல் அந்த விளக்கை காலையிலே தனது வீட்டில் உள்ள பொருட்களை சுற்றி வைத்து லாண்டரி விளக்கை ஏற்றி வைத்தான்.
அதன்பின் சிறிது நேரத்தில் அந்த பொருட்கள் எல்லாம் எரியத் தொடங்கிவிட்டது ஏனெனில் இந்த விளக்கானது இரவில் மட்டும்தான் தங்கமாக மாற்ற கூடிய மாயா சக்தி பெற்றது.
அன்புச்செல்வன் நண்பன் உடனடியாக அந்தச் சிறுவனிடம் இந்த விஷயத்தைக் கூறி அந்த விளக்கை அவனிடமே ஒப்படைத்து விட்டான்.
கதையின் நீதி
இந்த கதையிலிருந்து உங்களுக்கு என்ன தெரிய வருகிறது?
மற்றவர்களை பொருளைத் திருடினால் அப்பொருள் நமக்கு தீமையை மட்டுமே வழங்கும் என்பதை நீங்கள் இந்த கதையின் மூலம் அறிந்து கொண்டிருப்பீர்கள்.
எனவே யார் பொருள்மீது ஆசை படாதீர்கள் யார் பொருளையும் திருடாதீர்கள்.
No comments:
Post a Comment