Tuesday, May 25, 2021

பின்பற்ற வேண்டிய நல்ல பழக்கங்கள்

 இப்பொழுதே நான் உங்களிடம் ஒரு ஏழு நல்ல பழக்கங்களை கூறப்போகிறேன். அது என்னவென்றால்,

  • அதிகாலையில் எழுந்திருப்பது
  • மற்றவர்களிடம் புன்னகைப்பது
  • பெரியவாளிடம் ஒழுக்கத்தை கடைப்பிடித்தல்
  • மற்றவர்களுக்கு உதவி செய்தல்
  • தலைக்கனம் இல்லாமல் இருத்தல்
  • மற்றவர்கள் இடத்திலிருந்து சிந்தித்தல்
  • மற்றவரிடம் முதலில் பேசுங்கள்
சரி, வாருங்கள் இந்த நற்குணங்களை விரிவாக காண்போம்.

அதிகாலையில் எழுந்திருப்பது

இக்காலத்து மக்கள் பலர் அதிகாலையில் எழுந்திருக்காமல் இருக்கிறார்கள். அதிகாலையில் எழுவது மூலம் நம் வாழ்வில் அதிக நாட்கள் கிடைக்கும் அதனை பயனுள்ளதாக மாற்றி நம் வாழ்வில் முன்னேறலாம்.

நீங்களும் அதிகாலையில் எழும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள் அப்படி செய்வதன் மூலம் உங்களுக்கு உங்கள் ஒரு நாளில் ஒரு மூன்று மணி நேரம் அதிகமாகவே கிடைக்கும்.

மற்றவர்களிடம் புன்னகைப்பது

நீங்கள் எப்பொழுது மூஞ்சியை உம்முனு  வைத்துக்கொண்டால் மற்றொரு இடத்தில் பேசும் பொழுது அவர்களுக்கு பேசும் உணர்வைத் தராது.

மற்றும் நீங்கள் மற்றவர்களை பார்த்து ஒரு புன்னகை இதன் மூலம் அவர்களுக்கும் ஒரு நல்ல உணவை தரும் உங்கள் மனதிற்குள் ஒரு நல்ல தன்னம்பிக்கையை தரக்கூடும்.

பெரியவாளிடம் ஒழுக்கத்தை கடைபிடித்தால்

நீங்கள் எப்போதும் பிரியர்களுக்கும் மதிப்புக் கொடுத்து பழக வேண்டும் அப்போதுதான் உங்கள் வாழ்க்கைத் தரம் உயர கூடும்.

நீங்கள் இக்காலத்தில் எவ்வளவு பெரிய பெரிய மனிதர்கள் எடுத்தாலும் அவர்கள் பெரியவரிடம் கீழ்ப்படிந்து ஒழுக்கத்துடன் தான் நடப்பார்கள்.

மற்றவர்களுக்கு உதவி செய்தல்

நற்குணங்கள் என்று எடுத்துக்கொண்டாலே அதில் முதன்மையானது உதவி செய்தல் தான் ஆகும்.

நம்மை தெரிந்தவர்களுக்கு அல்லது நம் கூட இருப்பவர்களுக்கோ உதவி செய்வது நற்குணம் ஆகும் ஆனால் அதைவிட தெரியாதவர்களுக்கும் முன்வந்து உதவி செய்பவர்களே மாமனிதர் ஆவார்.

நீங்கள் ஒருவருக்கு உதவி செய்வது அவர்களுக்கு மட்டுமன்றி உங்களுக்கும் மனம் நிறைவு ஏற்படக்கூடும்.

எனவே நீங்கள் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி உதவி செய்யும் மனப்பான்மை இல் உதவி செய்யுங்கள்.

தலை கனமில்லாமல் இருத்தல்

இக்காலத்து மக்களுக்குப் பலருக்கு தலைகனம் இருக்கின்றது என்று நான் கூறுவேன்.

ஏனெனில் பதவி பணம் மேல் ஆசை உள்ளவர்கள் தான் தலைகனம் கொண்டு இருப்பார்கள் இக்காலத்து மக்கள் பலர் பணம் மற்றும் பதவி மேல் அதிக ஆசை வைத்திருப்பதால் தலைகனம் தானாகவே தலைக்கு ஏறி விடுகிறது.

ஆனால் பல மாமனிதர்கள் எடுத்துக்கொண்டால் அவர்கள் தலைகணம் கொண்டு இருக்கவே மாட்டார்கள் ஏனெனில் தலையிலும் தான் ஒரு மனிதனை மேலிருந்து கீழே கொண்டு வருவதற்கான ஒரு ஆயுதம்.

நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி மற்ற எழுதும் மரியாதையுடனும் மற்றும் பணிவுடனும் பேசுங்கள் தனங்களும் தானாகவே தலை தெறித்து ஓடி விடும்.

மற்றவர்கள் இடத்திலிருந்து சிந்தித்தல்

நான் ஏன் மற்றவர்கள் இடத்திலிருந்தே சிந்திக்க சொல்கிறேன் என்றால் உங்கள் மனதிற்கு படி ஒரு நாயம் தோன்றுமோ அதே போல் மற்றவர் மனதில் அப்படி ஒரு நாயம் தோன்றும்.

நீங்கள் ஒரு வார்த்தையை சுலபமாக எடுத்துக் கொள்வீர்கள் ஆனால் அந்த வார்த்தை அவர்களிடம் சொல்லும் பொழுது அவர்கள் கஷ்டப்படும் விதத்தில் எடுத்துக் கொள்வார்கள்.

 அதனால் தான் நீங்கள் மற்றவரிடம் ஏதாவது பேசினாலும் மற்றும் எந்த செயல் செய்தாலும்அவர்கள் இடத்திலிருந்து சிந்தித்துப் பாருங்கள்.

உருவம் ஒன்றாக இருக்கலாம் குலம் ஒன்றாக இருக்கலாம் ஆனால் அனைவருக்கும் மனம் ஒன்றாக இருக்காது என்பதை சிந்தித்துப் பேசுங்கள்.

மற்றவர்களிடம் முதலில் பேசுங்கள்

இக்காலத்தில் இயந்திரமயமான மாறிவிட்டதால் ஒரு மனிதரிடம் ஒரு மனிதரே முகம் கொடுத்து பேசுவதில்லை.

அதனால் முதலில் நீங்கள் ஒரு சக மனிதரிடம் முகம் கொடுத்து பேசுங்கள். அப்போதுதான் மனிதகுலம் மேம்படும் இந்த இயந்திரம் காலத்திலிருந்தே விடுபட்டு மனிதர்கள் வாழும் காலமாக மாற்றங்கள்.

இந்த நற்குணம் உங்கள் வாழை மற்றும் மாற்றாதே நாம் எதிர்காலத்தில் தலைமுறைகளுக்கும் ஒரு பண்பாட்டை கொடுக்கும் வகையிலும் இருக்கக் கூடும்.

எனவே மற்றொரு இடத்தில் மகிழ்ச்சியாக பேசுங்கள் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்.

இறுதி வார்த்தைகள்

இந்தப் பதிவு கண்டிப்பாக உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும். இந்த பதிவில் கூறப்பட்ட வகை உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தி பாருங்கள் வாழ்க்கை கண்டிப்பாக மாறும்.

பெரியவர்கள் இந்த பதிவை படித்து இருந்தால் வரும் சங்கதி இருக்கு இந்த நற்குணங்களை சொல்லிக்கொடுங்கள்.

நற்குணங்கள் நம் வாழ்க்கைக்கு என்னென்ன விபத்தில் உதவும் என்பதையும் கூறுங்கள் அப்பொழுதாவது நற்குணங்களை பழகிக் கொள்வார்கள் காலத்து மக்கள்கள்.

இந்த பதிவில் கூறப்பட்டுள்ள நற்குணங்களை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பின்பற்றுவீர்களா பின்பற்ற மாட்டீர்களா என்று சிந்தித்துப் பாருங்கள் கண்டிப்பாக இதனை நீங்கள் பின்பற்றுவீர்கள்.

இதில் ஏதாவது ஒரு நற்குணங்களை நான் ஏற்கனவே பின்பற்றுகிறேன் என்றும் நினைக்கிறீர்கள் என்றால் கீழே கூறுங்கள்.

நல்ல பழக்கங்களைப் பின்பற்றும் குழந்தைகள் ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்க கூடிய ஒரு ஆயுதம்

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !