நம் வாழ்வில் பல தோல்விகள் ஏற்பட்டு இருக்கும் அதில் நாம் அப்படியே நம் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் உட்கார்ந்து போயிருப்போம்.
அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தான் இந்த கதையானது அமைந்திருக்கும் எனவே வாருங்கள் கதையை படிக்கலாம்.
ஒரு ஏழை குடும்பத்தில் ஒரு பையன் வாழ்ந்து கொண்டிருந்தான்.
அவனுக்கு சாதாரண மனிதர்கள் போல் தான் ஆசை நம் ஏழ்மை நிலையில் இருந்து எப்படியாவது ஒரு நல்ல நிலைமைக்கு வாழ வேண்டும் என்பதுதான் ஆசை.
இவனுக்கோ புத்தகம் வாசிப்பு மற்றும் சமூக சீர் திருத்தங்கள் செய்வதோ இவனுக்கு மிகவும் பிடிக்கும்.
ஆனால் இவனோ ஏழ்மை நிலை இருப்பதால் அடுத்த கட்டத்திற்கு எப்படி செல்வது என்று தெரியாமல் இவன் மரம் வெட்டும் வேலை மற்றும் தேநீர் கடைகளுக்கு வேலைக்குச் சென்றான்.
அதன்பின் இவன் தினமும் அந்த வேலைகளை செய்து ஒரு பெரிய தொகையை சம்பாதித்தான்.
அந்த தொகையை வைத்து ஒரு கடை ஆரம்பிக்க லாம் என்று நினைத்து அந்த தொகையுடன் சிறிது கடன் வாங்கி ஒரு கடை ஒன்றை அவர் நண்பருடன் சேர்ந்து ஆரம்பித்தான்.
இந்த கடை ஆரம்பித்த இரண்டு வரிகளில் நல்ல லாபம் பெற்றுத் தந்தது.
அதன்பிறகு இவரும் சமூக செயல்களில் அதிகமாக ஈடுபட்டுவந்த அப்பொழுதும் கடையை தினமும் நிர்வாகித்து கொள்வார்.
இதுபோல் இவர் வாழ்க்கை நல்லதாக மாறிவிடும் என்று இவர் நம்பி கொண்ட வேலையில் தான் இவர் கடையில் கூட்டாளியாக இருந்த நண்பர் தீய பழக்கங்களினால் இவர் கடை மிகவும் நஷ்டத்தில் சென்றது.
அதனால் இவரும் பல கடன்கள் வாங்கி கடையை மேம்படுத்தினார் அப்பொழுதும் அவர் நண்பர் அந்த பல தீய பழக்கங்களால் கடையை மொத்தமாக நஷ்டத்தில் தள்ளி விட்டார்.
அதன்பின்பே இவருக்கு ஒன்றும் புரியவில்லை என்ன தான் செய்வது இப்போது தினமும் காலையும் இல்லை நாம் எப்படி நல்ல நிலைமைக்கு வருவது என்று சிந்தித்தார்.
மறுபடியும் நாம் வேலைக்கு சென்றால் நாம் கடன்களை அடைக்க முடியாது அதற்கு பல வருடங்கள் எடுத்துக்கொள்ளும்.
அதன் பின்பு இவர் ஒரு முடிவு எடுத்தால் இவருக்கு சமூக வேலைகள் என்றால் அதிகமாக ஆர்வம் உள்ளதால் இவர் சட்டப் படிப்பை எடுத்துப் படிக்கலாம் என்று முடிவெடுத்தார்.
அதன் பின்பு சட்டப் படிப்பை படித்து அதில் மிகவும் கை தேர்ந்தவளாக ஆகி அதில் கிடைத்த பணத்தை வைத்து தனது கடனை அடைத்தார்.
அதன் பின்பு இவர் அதிகளவில் சமூக வேலைகளில் ஈடுபாடுடன் செயல்பட்டால் அதன் பின்பு இவர் அமெரிக்காவின் ஜனாதிபதியாகவும் மாறினார்.
நீதி
இந்த கதை யாருடைய கதை என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள்? ஆம், ஆபிரகாம் லிங்கன் அவர்களின் உண்மை கதை தான் இந்த பதிவில் உங்களை தன்னம்பிக்கை படுத்தும் வகையில் பதிவிட்டுள்ளார்.
அப்பொழுது ஆபிரகாம் லிங்கன் அவர் கண்ட தோல்வியிலேயே நின்று விட்டால் அவர் வாழ்க்கை அன்றே நின்று விட்டு இருக்கும்.
எனவே நீங்களும் உங்கள் வாழ்க்கையில் பல தடைகள் தோல்விகள் வந்தாலும் அதில் நஷ்டத்தை கண்டாலும் அதில் இருந்து மீண்டு வந்து ஜெயித்து காட்டுங்கள்.
No comments:
Post a Comment