Monday, July 13, 2020

சமாதானம் / அகிம்சை, கோபமாக இருக்கும் போது கூச்சல் போடுவது எதற்காக?




நீதி – சமாதானம் / அகிம்சை

உபநீதி – சாந்தம் /  அமைதி /  சிந்தனை, வாக்கு, செயல் இவற்றில் பொறுமை

ஒரு முறை ஒரு ஹிந்துத் துறவி கங்கையில் நீராடச் சென்றார். அங்கு வந்திருந்த ஒரு குடும்பத்தில் ஏதோ வாக்குவாதம் வந்ததால் கூச்சலிட்டு பலமாகக் கத்திக் கொண்டிருந்தார்கள்.

தன் சிஷ்யர்களைப் புன்னகையுடன் பார்த்துக்கொண்டே, மக்கள் ஏன் கோபமாக இருக்கும் போது கூச்சலிட்டு கத்துகிறார்கள்?  என்று கேட்டார்.

சற்று நேரம் யோசித்து விட்டு ஒரு சிஷ்யர், சில சமயங்களில் நம் பொறுமையை இழக்கும் பொழுது  கத்துகின்றோம் என்று பதிலளித்தார்.

அருகிலிருக்கும் நபருடன் ஏன் சத்தம் போட்டுப் பேச வேண்டும்? மென்மையாகவே எடுத்துரைக்கலாமே என துறவி கேட்டார்.

சிஷ்யர்கள் ஏதேதோ பதில் கூறியும் ஒன்றுமே சரியாகப் படவில்லை. கடைசியில் துறவி மிக அழகாக இவ்வாறு எடுத்துரைத்தார்.

இருவர் கோபமாக இருக்கும் போது மனதளவில் ஒரு இடைவெளி ஏற்படுகின்றது. இந்த காரணத்தினால், அருகிலே இருந்தாலும் கூட, கோபத்தினால் கத்திப் பேச வேண்டிய ஒரு சூழ்நிலை வருகின்றது. கோபத்திற்கு ஏற்ப குரலும் உயர்ந்து விடுகிறது. இதே, இருவர் காதலிக்கும் போது என்ன ஆகிறது? ஒருவருக்கொருவர் மிகவும் தாழ்ந்த குரலில் மெளனமாக பேசிக் கொள்கிறார்கள். மனதளவில் ஒரே மாதிரியாக எண்ணம் இருப்பதனால் தான் இவ்வாறு இருக்கின்றது. இன்னும் ஆழ்ந்த அளவு அன்பு செலுத்தும் போது, பேசுவதற்குக் கூட அவசியம் இல்லை. பார்வையினாலே அன்பை வெளிப்படுத்துகிறார்கள்.

பிறகு துறவி தன் சிஷ்யர்களை நோக்கிக் கூறினார் ஏதாவது வாக்குவாதம் இருந்தால் கூட, மனதை ஒரு நிலையில் வைத்துக் கொள்ளவும். மனதைப் புண்படுத்துமாறு வார்த்தைகளைப் பேசக்கூடாது இல்லாவிட்டால் ஒரு நாள் இடைவெளி அதிகமாக ஆகி,  சமரசம் படுத்துவது கூட இயலாமல் போய்விடும்.

நீதி:

கோபம் வரும்போது மெளனமாக இருப்பது சிறந்தது. இல்லாவிடில், நெருங்கினவர்களோடு மனதளவில் விரிசல் ஏற்பட்டு விடும். அதற்குப் பிறகு, ஒரு சுமூகமான நிலைக்கு வருவது கஷ்டமாக இருக்கும்.

 


No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !